இலக்கியம்
தவிக்கும் தமிழன்
சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]
எசப்பாட்டு – காதல்
காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்
எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]
காதலர் தினம்
1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]
எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்
மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்
பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்
வாங்க ஃப்ரீயா பேசலாம்
”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.” “ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?” “என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..” “அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத […]
வரும் நாட்களில் ..
நாட்காட்டி தீர்ந்ததால் கரைந்தே
நரைகூட்டிக் காட்ட முனைந்தே
நாடகத் திரையென விழுந்தே
நொடியில் முடிவதோ கடந்தாண்டு?
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3
”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2
முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் […]
கனவுக் கன்னி
கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்






