இலக்கியம்
எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்
மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்
பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்
வாங்க ஃப்ரீயா பேசலாம்
”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.” “ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?” “என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..” “அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத […]
வரும் நாட்களில் ..
நாட்காட்டி தீர்ந்ததால் கரைந்தே
நரைகூட்டிக் காட்ட முனைந்தே
நாடகத் திரையென விழுந்தே
நொடியில் முடிவதோ கடந்தாண்டு?
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3
”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]
செங்குளம்
சூரியன் மேற்கில் ஓடி மறைந்து கொண்டிருந்தது. நேரம் ஆறு ஆறரையைத் தாண்டியிருக்கும் என மனதில் நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன். பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் சத்தம் என் காதைப் பிளந்தது. அண்ணாந்து வானத்தைப் பாத்தேன். சிறு பறவைகள் கூட்டமாகப் பறப்பது போலவும்… காற்றில் உதிரும் இலவம் பஞ்சுக் கூட்டம் வானவெளியில் சல்லாபம் புரிவது போலவும் ஒன்றுடன் ஒட்டி உரசியபடி வானத்தில் இருந்து கொத்துக் கொத்தாக எண்ணுக்கணக்கற்ற துண்டுப் பிரசுரங்கள் தரையை நோக்கி வந்துகொண்டிருந்தன… கடும் போருக்கு […]
விடியல்
நாள்தோறும் விடிகிறது பொழுது!
இரவு அழுக்கைப் பெருக்கிக் கொட்டிவிட்டு,
வெளிச்சம் அரங்கேறுகிறது!
ஒளியைத் தழுவிக்கொள்ள
பூமியெல்லாம் புத்துணர்ச்சி!!
மினசோட்டா ஐரோப்பியத் தொடர்புகள் – ஸ்காண்டிநேவியா SCANDINAVIA
நமது மாநிலமாகிய மினசோட்டாவில் ஆசிய நிலப்பரப்புத் தொடர்பு காலத்தில் புலம் பெயர்ந்த ஆதிவாசி மக்களிற்கு அடுத்தபடியாக கடல்மூலம் புலம் பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் ஸ்காண்டிநேவியர்கள் ஆகும். ஸ்காண்டிநேவியா பிரதேசம் பொதுவாக டென்மார்க் Denmark, நோர்வே Norway, சுவீடன் Sweden நாடுகளைச் சாரும். வடதுருவப்பிரதேசக் கடலைச் Arctic Sea சார்ந்த பின்லாந்து, ஐஸ்லாந்து Iceland மற்றும் லப்லாந்து Lapland எனும் வடதுருவக் கலைமான் reindeer வர்க்கங்களை மந்தையாகப் பார்க்கும் நாடோடி மக்கள் பிரதேசமும் ஸ்காண்டிநேவியாவில் அடங்கும் . லப்லாந்து […]
மினசோட்டா விண்வெளி வீராங்கனை
மினசோட்டா விண்வெளி வீராங்கனை (Astronaut) முனைவர் கேரன் நைபெர்க் (Karen NyBerg) கார்த்திகை மாதம் நமது மாகாணத்தில் கோலாகலமாக பல்வேறு பண்டிகைகள் ஆரம்பிக்கும் தருணமாகும். இதேசமயம் நமது மாகாணத்தின் விண்வெளி வீராங்கனை கேரன் நைபெர்க் 166 நாட்களுக்கு மேல் சர்வதேச விண்கலத்தில் வலம் வந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் பல மாகாணங்களிலிருந்தும் பலர் விண்வெளி போய்வரினும் சர்வதேச ரீதியில் விண்வெளி சென்ற 50 வது பெண்மணி என்ற பெருமை இவரைச் சாரும். மினசோட்டா மாகாணத்திலிருந்து சென்ற அண்மைக்கால […]






