\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

இலையுதிர் மரம்

Filed in இலக்கியம், கவிதை by on December 6, 2013 1 Comment
இலையுதிர் மரம்

பருவந்தொட்ட பெண்ணைப் போல
பஞ்சஞ்தீர்ந்த மண்ணைப் போல
மகிழ்ந்து துளிர்த்திருந்த மரமே
மங்கையும் நீயும் ஓரினமோ?

Continue Reading »

நன்றி தெரிவிக்கும் திருநாள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 1 Comment
நன்றி தெரிவிக்கும் திருநாள்

பொதுவாக மேற்கத்தியவர்களைப் பற்றிய கிழக்கத்திய மக்களின் கருத்து அவ்வளவாக உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் என்பதே. தொலைவிலிருந்து பார்த்து இவர்களின் விவாகரத்து விகிதங்களையும், ஹாலிவுட்டில் காட்டப்படும் முகத்தில் சற்றும் சலனமில்லாமல் பஞ்ச மா பாதகங்கள் புரியும் சாதாரண மனிதர்களையும் மட்டுமே பார்க்கும் கீழை நாட்டினருக்கு அது போன்ற ஒரு அபிப்ராயம் தோன்றுவதில் வியப்பெதுவும் இல்லை. அருகிலிருந்து பார்த்து, இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும் கொடுக்கும் மரியாதையையும், பல உயர்வான எண்ணங்களுக்கு (values) கொடுக்கும் முக்கியத்துவத்தையும் நேரில் பார்க்கையில், […]

Continue Reading »

செட்டிநாட்டு சம்பாஷணை

செட்டிநாட்டு சம்பாஷணை

”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]

Continue Reading »

ப்ளாக் ஃப்ரைடே

ப்ளாக் ஃப்ரைடே

Continue Reading »

ட்ராஃபிக் டிக்கெட்

ட்ராஃபிக் டிக்கெட்

Continue Reading »

சச்சின் டெண்டுல்கர்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 0 Comments
சச்சின் டெண்டுல்கர்

நூற்றி இருபது கோடி மக்களைக் கொண்டு மதம், மொழி, இனம், பொருளாதாரம், தொழில் எனப் பல வகைகளில் பிளவுபட்டு, வலுவான மாற்று கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு – எதிரிகள் தங்கள் நாட்டைத் தாக்கினாலும், சொந்த நாட்டினர் விண்வெளிச் சாகசங்கள் நிகழ்த்தினாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்ற மனப்பாங்குடன் நடந்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு – பல மணி நேரங்கள் ஒத்த கருத்தைக் கொண்டு, அதிக கவனத்துடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது, சச்சின் டெண்டுல்கர் என்ற […]

Continue Reading »

களவினால் ஆகிய ஆக்கம்

களவினால் ஆகிய ஆக்கம்

வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”. […]

Continue Reading »

கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 0 Comments
கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

சென்ற கட்டுரையில் பருவத்தில் தோன்றி மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதலைக் கவியரசர் எப்படி இயற்கையுடன் இறண்டறக் கலந்தது என உவமித்தார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மனித உயிரனங்களை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விடக் காதல் மேன்மையான உணர்வு என்பதை எப்படித் தனது பாடல்களில் வடித்துள்ளார் என்று காணலாம். உலக மக்கள் அனைவரும் போற்றும் மிக உயர்ந்த உன்னத உறவு தாயுறவு. காதல் அந்தத் தாயுணர்வையும் கடந்தது என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர். […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம்

Filed in இலக்கியம், கதை by on December 5, 2013 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம்

முன்குறிப்பு: ஆங்கிலத் தொலைக் காட்சித் தொடர் “24” பார்த்திருப்பீர்கள். அதனை அடியொற்றித் தமிழில் ஒரு தொடர்கதை எழுதலாமென்ற யோசனை இன்று காலை படுக்கையை விட்டெழும் பொழுது தோன்றியது. உடனே செயல்படுத்தத் துவங்கினோம். அந்த ஆங்கிலத் தொடரில் வருவது போல், இந்தக் கதையில் நடக்கும் சம்பவங்கள் நிஜ மணித்துளிகளில் (Real-time) நடந்தேறுகிறது. அதைவிடுத்து வேறெந்த விடயமும் அந்தத் தொடரைப் பார்த்து எழுதப்பட்டதல்ல என்பதை இப்பொழுதே உறுதிமொழியாய் உரைக்கின்றோம். திங்கட் கிழமை காலை 8.00 மணி கணேஷ் – நம் […]

Continue Reading »

காதலும் காமமும்

Filed in இலக்கியம், கவிதை by on December 5, 2013 0 Comments
காதலும் காமமும்

காதல்
கட்டிய சேலை சற்றே விலகினால்
காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!

காமம்
கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்
காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!

Continue Reading »

ad banner
Bottom Sml Ad