\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல் – தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கட்டிடம் இருந்தாலும், கட்டுமான அழகு அனைத்திலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில பேரவை மாமன்றங்களே, பார்வைக்கு அழகாக இருக்கின்றன. அதில், விஸ்கான்சின் (Wisconsin) மேடிசனில் (Madison) இருக்கும் பேரவை கட்டிடம், புகழ் பெற்ற ஒன்றாகும்.  பூசந்தி (Isthmas) எனப்படும் இரு நீர்பரப்புக்கு இடையேயான நிலப்பரப்பில் இருக்கும் ஒரே பேரவை இது தான். விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனின் மத்திய புள்ளியில் […]

Continue Reading »

பணயத் தீம்பொருள் (Ransomware)

பணயத் தீம்பொருள் (Ransomware)

கடந்த சில வாரங்களாக, எந்த ஊடகச் செய்தியை எடுத்தாலும் பணயத் தீம்பொருள் (Ransomware) பணம் பறித்தல்  பற்றி தகவல்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன அசல் சுற்றாடலை விட்டுப் பெரும்பாலோனோர் நகல் சூழலாகிய மின்வலயம் என்னும் அடர்காட்டிலே சஞ்சரிக்கும் தருணத்தில் பணயத் தீம்பொருள் எனும் விலங்கு வதைத்து வருகிறது. பணயத் தீம்பொருள் என்றால் என்ன? பணயத் தீம்பொருளானது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்வலயத் திருடர், தமது துர்பிரயோகக் கலைகளைப் பரிசோதிக்கும் யுக்தியாக இருந்து வந்தது. ஆயினும் இன்று இணையத்தில் […]

Continue Reading »

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம்  புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]

Continue Reading »

தாய்மை

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தாய்மை

கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல்  கதவைத் திறந்தாள் அகல்யா.  உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப்  படுக்கையில் […]

Continue Reading »

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம்

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது. உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl […]

Continue Reading »

தொழிலாளர் தினம் – கவிதை

Filed in இலக்கியம், கவிதை by on April 30, 2017 0 Comments
தொழிலாளர் தினம் – கவிதை

இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்

மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்

துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து

Continue Reading »

அன்பின் அகிலம்

அன்பின் அகிலம்

அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!

அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !

Continue Reading »

உழவர் சந்தைகள்

உழவர் சந்தைகள்

உலகில் இருக்கும் பனிரெண்டு மண் வகைகளில், ஒன்பது வகை மண்ணைக் கொண்ட மினசோட்டா ஒரு விவசாயப் பூமியாக இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்கு ஒரு அனுகூலம் உள்ளது. ஃப்ரெஷ்ஷாக உணவு உண்ணலாம். அதுவும், உணவுக் குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ள இக்காலத்தில், இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புத்தம் புதியதாக விவசாய நிலத்தில் இருந்து வரும் விளைப் பொருட்கள், மக்களை உடனடியாகச் சென்றடைய உதவுபவை, உழவர் சந்தைகள். அந்த வகையில், மினசோட்டா மாநிலமெங்கும் நடக்கும் உழவர் சந்தைகள் (Farmer’s […]

Continue Reading »

உரிமைகள் மசோதா – 3

உரிமைகள் மசோதா – 3

(உரிமைகள் மசோதா-2) அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது. மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம் அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது. அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church […]

Continue Reading »

தலைக்கு மேல வேல….

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad