இலக்கியம்
நகுலேச்சரம்
இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும். தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள […]
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்
இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]
அஞ்சலம்மா
ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]
பீனோ க்ரிஜோ…
விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]
உரிமைகள் மசோதா – 1
உரிமைகள் மசோதா இந்த இதழ் வெளியாகும் பொழுது, டானல்ட் ஜான் ட்ரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றிருப்பார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்பு வெள்ளை மாளிகை, மேலவை மற்றும் பிரிதிநிதிகள் சபை ஆகிய மூன்றும் குடியரசுக் கட்சியின் வசமாகியுள்ளது. அரசாங்கத்தின் சக்தி ஒரே இடத்தில் குவிந்து விட்டால் யதேச்சாதிகாரம் தலை தூக்க நேரிடலாம் என்பதால், சரிபார்த்தலுக்காக (checks and balances) வாக்கெடுப்பு முறைப்படி உருவாக்கப்பட்டதே இந்த அவைகள். இவற்றின் உறுப்பினர்கள் சட்டங்கள் மேற்கொள்ளும் பிரிவு (legislative branch) , […]
பேர்ள் ஹார்பர் – பகுதி 2
(பகுதி 1) 1940ம் ஆண்டு மத்தியில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை பேர்ள் ஹார்பரில் நிறுத்தியது ஜப்பானை பதட்டமடையச் செய்தது. பசிஃபிக் பகுதியில் தனது எல்லையை விரிவடையச் செய்ய முயன்ற ஜப்பானுக்கு, அமெரிக்காவின் இந்தச் செயல் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. ஜப்பானிய அரசில் ராணுவ அதிகாரிகள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த காலமது. மிதவாதியான, அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோவுக்கு அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை மூலம் பெட்ரோலிய இறக்குமதிக்கான தடையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பதே எண்ணம். ஆனால் […]
சிதம்பரம் – பாகம் 1
“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]
சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்
கலங்கிய காளை கழனியிலும் வேலையில்லை களத்தினிலும் பணியுமில்லை கணினிகளைத் தாம் நோக்கி காளையர்கள் போனதனால் கண் கலங்கிய காளை! களத்து மேட்டிலும் வேலையில்லை கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை கரிசல் காட்டை விலைபேசிய காட்டுமிராண்டிகள் கண் கலங்கிய காளை! கட்டித் தழுவுவார் யாருமில்லை கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை கார்மேகமும் கை கொடுக்கவில்லை கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா கண் கலங்கிய காளை! திரைகடலெனத் திரண்ட தமிழினம் திக்கெட்டும் ஒரே இசை ! என் தமிழனின் பறை இசையடா ! […]
பேர்ள் ஹார்பர்
டிசம்பர் 7 1941 – போர் முன்னறிவிப்பு எதுவுமின்றி ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கிய தினம்; அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்றான பேர்ள் ஹார்பரை 353 போர் விமானங்கள் கொண்டு ஜப்பான் தாக்கிய தினம்; 2403 அமெரிக்க வீரர்கள் மாண்டு போன தினம்; 1178 பேர் படுகாயமடைந்த தினம். 5 போர்க்கப்பல்கள் உட்பட 18 கப்பல்கள் அழிக்கப்பட்ட தினம். உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட தினம்; உலக நாடுகள் பலவற்றின் இன்றைய நிலைக்கு காரணமான தினம்; மொத்தத்தில் […]
பொங்கலோ பொங்கல்
பொழுது சாயும் நேரத்துலே பொதுவான சாலை ஓரத்திலே பொசுங்கும் குப்பைக் கூளமுமே போகி வந்ததென அறிவிக்குமே !! குப்பைக் காகிதம் மத்தியிலே குறுகிய எண்ணக் கசடுகளும் குன்றத் தோன்றிய சுயநலமும் கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !! மறுநாள் காலை வைகறையில் மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை மனதில் நினைந்து வழிபடவே மாநிலம் முழுதும் கூடினரே !! முற்றம் நடுவினில் பானைவைத்தே முனைந்து சுற்றிய மஞ்சளுமே முழுதாய் நிறுத்திய கரும்புடனே மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !! கழனி காடு […]






