இலக்கியம்
சின்ன சபலம்
மினியாபோலிஸ் நகர மையப் பகுதியில் இருந்தது அந்த லவ்ரி சந்து. மிகவும் குறுகலான ஒருவழிப் பாதை. தெருவின் ரெண்டு பக்கத்திலும் புராதனமான, பராமரிக்கப்படாத கட்டிடங்கள். காரை பெயர்ந்து சிதிலமடைந்து சிதைந்து போயிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்ததும் இந்தியாவின் ஹவுசிங் போர்ட் வீடுகள் நினைவுக்கு வந்தன விஸ்வாவுக்கு. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத் தான் தனது ஆடி காரை வீட்டில் வைத்துவிட்டு சாந்தியின் கரோலோவை எடுத்து வந்திருந்தான். ஜி.பி.எஸ். ‘யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றாலும் அது […]
தூங்கா நகரம்
சிலருக்கு தூக்கம் பலருக்கு துக்கம் ! தூக்கத்தை சிலர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக …. சிலர் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்வதற்காக ! தூக்கத்தை மறந்து பலருக்குப் புத்துணர்வூட்ட டீ போடும் டீக்கடைக்காரர் ! மொட்டு மலருவதற்குள் விற்றுவிடத் துடிக்கும் பூக்காரி ! பசியோடு வருவோரைப் பாங்குடன் பசியமர்த்தும் இட்லிக்கடைகள் ! நடுநிசியிலும் நிலவை வம்புக்கு இழுக்கும் காதல் கிறுக்கன் ! ஒலிப் பெருக்கிகளுக்கு இடையிலும் தூங்கும் தெருவோர வாசிகள் ! பேருந்தில் பயணிப்போரைப் பத்திரமாகக் கொண்டு […]
மூன்றெழுத்து
மூன்றெழுத்துச் சொல் அந்தச் சொல் காட்டிய நல்ல பாதையிலே நம்மவர் வாழ்க்கையே ஓடிக் கொண்டேயிருக்கிறது ! முழுநிலவின் ஒளியில் புத்துயிர் புத்துணர்வு பெறுவது போல. ஆடும் மயில்கள் பாடும் குயில்கள் பரவசம் அடைவதுபோல் ! அந்தச் சொல்லில்தான் அகிலமும் சுழல்கிறது இயற்கையும் செயற்கையும் கைகோர்த்துச் செல்கிறது ! இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி வேளையில் அந்தச் சொல்லை நாமும் உணரமுடியும்! மதங்களும் சாதிகளும் அந்தச் சொல்லைத் தாங்கிக் கொண்டுதான் ஒற்றுமையாக இருக்கின்றன ! அந்தச் சொல் […]
நிஜம் நிழலாகும்
“பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் . அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள். “கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா? “ பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. “கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR […]
நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!
முதலில், தலைப்பின் நடு வார்த்தையை விவரித்து விடலாம். பிஎம்பி (PMP) என்பதன் விரிவாக்கம் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ப்ரொஃபஷனல் (Project Management Professional) என்பதாகும். எந்தத் துறையிலும் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்கள், தங்கள் தகுதியை நிரூபித்துக் கொள்வதற்கான தேர்வைப் பற்றிய கட்டுரை இது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டிட்யுட் – பிஎம்ஐ (PMI), இதை நிர்வகிக்கிறது. ”மேனேஜராக வேலை பார்க்க ஏதாவது கத்துக்க வேணுமா” என்று நக்கல் அடிப்பவரா? நீங்களும் இதை வாசிக்கலாம். சரி, நிரூபிப்பது இருக்கட்டும். ப்ராஜக்ட் மேனேஜராக […]
சித்திரைத் திருமகள்
மானொத்த விழியாளின் மருகிய பார்வையும்
மாலையற்ற கழுத்தும் மலரில்லாக் கூந்தலும்
மாநிறச் சருமமும் மயக்குகின்ற விழிகளும்
மாலைச் சூரியனாய் மலர்ந்ததந்த வதனமும்
மாண்புமிகு நெற்றியின் மத்தியிலிட்ட சுடரும்
மாங்கனியாய்க் குவிந்த மதுததும்பும் அதரமும்
மாறனின் கணைகளுக்கு மடுவான நாசியும்
மாரிக்கால வருடலாய் மந்தகாசத் தோற்றமும்
நிறமற்ற சினிமா
படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]
குமரிக்கண்டம் எதிர்கோணம்
குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும் தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் […]
உலகத் தாய்மொழி தினம் – 2016
அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]
கவித்துளிகள்
பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி






