\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

மீண்டும் தேவதாஸ் !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
மீண்டும் தேவதாஸ் !

அவள் பெயரோ
கவிதா
அவன் அவளிடம்
‘கவி’ தா ! என்றான்
அவளோ
தன் காதலைத்
தந்தாள்.

Continue Reading »

மனிதனாக இரு !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
மனிதனாக இரு !

சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?

Continue Reading »

மறதிக்குப் பின் வருவதே மரணம்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
மறதிக்குப் பின் வருவதே மரணம்

படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…

Continue Reading »

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!

கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !

Continue Reading »

வேலையில்லாப் பட்டதாரி !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
வேலையில்லாப் பட்டதாரி !

நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !

என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !

Continue Reading »

சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்

சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்

வட அமெரிக்கக் கண்டமும் மெதுவாக இளவெனிலை நோக்கி நடையெடுக்கிறது. இந்தத் தருணத்தில் சக்கரைக் கிழங்குச் செடியை எவ்வாறு நமது யன்னலோரத்தில் வளர்க்கலாம் என்று பார்ப்போம். தேவையானவை நீண்ட நீர் குடிக்கும் கண்ணாடிக் குவளை/Water glass அல்லது பூ வைக்கும் சாடி பெரிய நீளமான சக்கரைக் கிழங்கு ஒன்று பற்குத்தி (Toothpick), அல்லது சான்விச் குச்சிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் (Bamboo skewers) சாதாரண வீட்டுக் குழாய்த்தண்ணீர் சக்கரைக் கிழங்கான மரக்கறி, மளிகை வாங்கும் கடைகளில் மிகவும் சொற்ப […]

Continue Reading »

இணையச் சுழல்….

இணையச் சுழல்….

இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் […]

Continue Reading »

நிறமற்ற சினிமா

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நிறமற்ற சினிமா

படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]

Continue Reading »

குமரிக்கண்டம் எதிர்கோணம்

குமரிக்கண்டம் எதிர்கோணம்

குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும்  தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு   வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் […]

Continue Reading »

ஆணவம் கொ(ல்)ள்வோம்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
ஆணவம் கொ(ல்)ள்வோம்

உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !

காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !

Continue Reading »

ad banner
Bottom Sml Ad