இலக்கியம்
காணாமல் போன வாழ்வு
இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி
கடவுளுமில்லை… கர்மமுமில்லை..
‘கடவுள் இல்லைன்னு இப்ப சொல்லு பாக்கலாம் ..’ அவன் பேசிய பாஷை புரியாவிடினும் இதைத்தான் சொல்கிறான் என்று ஊகிப்பதற்குள், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் தலையைக் குறி வைத்து அடித்தான் அவன். அவனது கை பின்னுக்குப் போன வேகத்தில் முகத்தை லேசாகத் திருப்பினார் தீனா. தலையைக் குறி வைத்த அந்த அடி சற்றுக் கீழிறங்கி நெற்றிப் பொட்டுக்கும் கண்ணுக்கும் இடையில் கிழித்துக் கொண்டு சென்றது. இருட்டிக் கொண்டு வந்தது தீனாவுக்கு. ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. முடியவில்லை அவரால். கையால் […]
தமிழனென்று சொல்லடா – கவிமணி
”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும். பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா ! கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! […]
மழலைதரும் மதுபோதை
உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்
முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்
முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்
பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்
வசீகர வஞ்சி
கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து
புனித வெள்ளி
கிறிஸ்துவ மறை நெறியில் தவக்காலம் மற்றும் புனித வாரம் சேர்த்து 46 நாட்கள் மிகவும் முக்கியமான காலம். இயேசுநாதருடைய தியாகம், பிறருக்காக வாழ்தல் போன்ற நற்பண்புகளை அனைவரும் கடைபிடிக்கவும், ஒவ்வொரு கிறிஸ்துவரும் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனிமனித சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நிதானமான ஆன்மீகச் சிந்தனை மற்றும் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவும் உகந்த நாட்களாக இந்தத் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் (Ash Wednesday) தவக்காலத்தை விபூதி புதன் அன்று கிறிஸ்தவர்கள் […]
அகத்தின் அழகு
உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதன் தான் வெளித்தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறான். இன்பத்தை அடைய எல்லாருமே ஒருவிதத்தில் அல்லது பலவிதத்தில் முயன்று கொண்டு இருக்கிறோம். அனால் வேதங்களோ, நாம் ஆனந்தத்தாலே உருவாக்க பட்டவர்கள். மாயை மறைப்பதால் அதை உணராமல் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதை அப்படியே நம்பச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அனால், அதில் அறிவியலுடன் கலந்து ஆராய்ந்து பார்போம். “இது என் கை” என்று நான் […]
மறை நூலில் இறை வாக்கு
புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
சோர்ந்து போகாதே ! மனமே !
துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே.. கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே.. எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!! – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
தொலைந்து போன சுகங்கள்
காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.






