இலக்கியம்
லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி
மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்‘திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். ‘என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?’ என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களில் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color […]
எச்சம் (ஒரு சிறு விளக்கம்)
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை “எச்சம்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு ‘’எஞ்சுபொருட்கிளவி ‘’ என்பதாகும். பொருள்எஞ்சிநிற்கும் சொல் என்பது இதன் விளக்கம். பிரிநிலை எச்சம் வினை எச்சம் பெயர் எச்சம் ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் உம்மை எச்சம் என எச்சம் சொல் எச்சம் குறிப்பு எச்சம் இசை எச்சம் எனப் பத்து வகையான எச்சங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. “பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்பறை […]
உலகம்
இயற்கையெனும் இனிய அன்னை
இளம்பொன் சூரியக்கதிர் கொண்டு
இருள்நிறைக் கருப்பைக் கிழித்து
இன்னொரு நாளை ஈன்றெடுத்தாள்!
வேலை
கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]
இந்தியா 69
29 மாநிலங்கள் தமிழ் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட அலுவலக மொழிகள், சில மதங்கள், பல சாதிகள், கணக்கில் அடங்கா கடவுள்கள், இயற்கை மற்றும் இன வேறுபாடுகள், அனைத்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் , இத்துணை வேற்றுமைகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகக் கடந்த அறுபத்தி ஒன்பது ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பது நம் இந்திய நாடாகும். பல தலைவர்களின் வழிகாட்டுதல்கள், பல்லாயிரக் கணக்கில் களபலிகள் மற்றும் தொடர்ச்சியான தியாகங்களின் பயனாக நம்மை ஆண்டு வந்த அங்கிலேயர்களை […]
இலட்சிய சிகரம்
நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா? நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா? இறைவா நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும் இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக !!! பாரத ரத்னா, அறிவியல் அறிஞர், அரசியல் வாதி, தமிழ்க் கவிஞர், இளந்தலைமுறையினருக்குச் சிறப்பான ஒரு வழி […]
மினியாபோலிஸ் ஸ்கைவே – சமத்துவ நடைபாதை
சென்ற வருடம், ஆகஸ்ட் மத்தியில் வேலை மாற்றம் காரணமாக மினசோட்டா வந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், முதன்முதலாக இங்குள்ள அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் இருக்கும் இடம், மினியாபோலிஸ் நகர மத்தியில் டவுண்டவுனில். ஞாயிற்றுக் கிழமை சாயந்திர வேளையில், அடுத்த நாள் செல்லப்போகும் அலுவலகத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று காரை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜி.பி.எஸ் வழி காட்ட, அலுவலகம் அருகே சென்று, பிறகு பக்கத்தில் இருக்கும் ஒரு பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, மீண்டும் […]
எசப்பாட்டு – இரண்டாம் காதல்
உசுருக்கு உசுரா ஆச வச்சோம்
உறவா மாறிப்போக ஆச வச்சோம்
உடனே சேந்துவாழ ஆச வச்சோம்
உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்
உலகம் சுத்திவர ஆச வச்சோம்
உலவும் தென்றலாக ஆச வச்சோம்
மெல்லிதழ் முத்தம்
பனிக்கால மினசோட்டா நதிகளாய்
இறுகிப் போன முகத்துடன்
கண்ணாடி வீட்டில் இருந்து
கல்லெறிய முயல்கிறான்…
கிடைத்த ஒரு முத்தத்தைச்
சரிசமமாகப் பகிர்ந்து கொண்டபின்
மீண்டும் முடியாது என
அடம்பிடித்து முறித்துக் கொண்டவளிடம்
வானவில்லின் மறுபக்கம்
“நீ இன்னும் மேல மேல பறந்துகிட்டே இருக்கணும்மா.. எழுந்திரு ..” அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்புக் கிடைத்த விஷயம் அறிந்தவுடன் அவளது அக்கா சாந்தி அவளை ஆசிர்வதித்துச் சொன்னது ராஜியின் மனதில் ஓடியது. எவ்வளவு பெருமைப்பட்டார்? ‘எங்க வம்சத்தில யாருமே வெளிநாட்டுக்குப் படிக்கப் போனதில்லை .. இவ அமெரிக்கால நாலு காலேஜுக்கு அப்ளை பண்ணா .. நாலு காலேஜ்லேயிருந்தும் சேரச் சொல்லி லெட்டர் அனுப்பியிருக்காங்க .. எங்க சேர்றதுன்னு அவ தான் டிசைட் பண்ணணும்..’ கிட்டத்தட்ட திருவான்மியூர் […]






