சிறுவர்
தேன்குருவித் தோழமை

முன்குறிப்பு – கோடைகாலத்தில் எமது மினசோட்டா மாநிலத்தில் சுற்றாடல்களில் நமது பெருவிரல் பருமன் அளவே உள்ள வெட்கம் கொண்ட அழகாகவும் வேகமாகவும் பறக்கும் சின்னச் சிறிய தேன்குருவிகளை அவதானித்திருப்பீர்கள். இயற்கையில் விறுவிறுப்பான இந்தக் குட்டிக்குருவிகளுடன் நாம் வேண்டினால் சிநேகிதம் கொள்ளலாம் என்பதே இந்தக் கட்டுரை. சிறகடிக்கும் சின்னப்பறவை மினசோட்டா மாநிலவாசிகள் பலர் அன்றாடம் வசிப்பதற்கு ஒரு வீடும், விடுமுறை நாட்களைச் செலவிடுவதற்காக ஒரு வனக்குடிலும் (cabin) வைத்திருப்பதே பாரியவழக்கம். எனது நண்பன் ஒருவன் தனது காணிப் பொட்டலத்தில் […]
ஸ்வெனும் மரநீர்த் தொட்டியும்

முதற்குறிப்பு: இளைஞர்களால் தங்கள் கை கால்களைக் கட்டி வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? முடியாது. ஏதாவது ஒரு கும்மாளம், கோஷ்டியுடன் குதித்தல் என்று உயிராபத்துக்குப் போகக்கூடிய சாகசங்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்தவாறு போகுதலே ஒரு வாழ்க்கை. இதுபோன்ற உற்சாகமான பண்டைய மினசோட்டா நொர்வீஜியன் பையனொருவனின் கதைதான் இது. பனிக்காலத்திற்கு ஆயுத்தமாகுதல் ”ஓடு ஓடு சீக்கிரம் வா, பொழுது நேரத்தை வீணாக்கக்கூடாது, ஏயிங்கர், கரேன் இந்த வாளிகளை உடன் ஓலினாவிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். ம்…… ஸ்வென் […]
பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

மினசோட்டா மாநிலத்தில் பிள்ளைகளும், ஆர்வமிக்க பெற்றோரும் சேர்ந்து மகிழ இயங்கும் மாதிரி உருவகப் புகையிரத நுதனசாலை ஒன்று உண்டு. இவ்விடத்தில் மூன்று தலைமுறைகள் வந்து போவது சகசமான விடயம். பாட்டன், பாட்டி தொட்டு, அப்பா, அம்மா குழந்தைகள் குழுவினர் பலரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது செயின்பால் (St Paul) நகரில் உள்ள 1880களில் கட்டப் பட்டு மீண்டும் பழமை பேணி மீள் சீரமைக்கப்பட்ட பண்டானா சதுக்கத்தில் (Bandana Square) இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. இந்த நூதனச் […]