\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

எரிபொருட்கல சாலையூர்திகள் (Fuel-Cell Vehicles – FCVs) மெய்மை

எரிபொருட்கல சாலையூர்திகள் (Fuel-Cell Vehicles – FCVs) மெய்மை

தற்காலமாகிய இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் பயணியூர்திகள் எரிபொருட்கலங்களை வைத்து ஓடும் என்றால் யாவரும் சகசமாக நம்பக்கூடிய விடயம். காரணம் நாம் ஏற்கனவே சாலையில் புதிய ஃபோட் (Ford) , டொயோட்டா (Toyota), ஹொண்டா (Honda) போன்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து கலப்பின (hybrid) வாகனங்கள் பாதி நில எண்ணெய் பாதி எரிபொருட்சேமிப்புக்கலங்கள் கூடிய வாகனங்களை ஓட்டுவதும், இல்லை தெரிந்தவர்கள் ஓட்டுவதை அவதானித்துள்ளமையே. எரிபொருட்கலங்கள் சாதாரண விடயமாக தற்போதைய தலைமுறை நினைப்பினும் இந்த முன்னேற்றம் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேல் […]

Continue Reading »

தொலைத்து விட்ட நாட்கள்

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 1 Comment
தொலைத்து விட்ட நாட்கள்

ஆடித்திரிந்த வண்ணத்துப் பூச்சி
அழகாய் விரித்த இறகினில்
அடையாய்ப் பொழிந்த மழையிலும்
அழியா திருந்த ஓவியத்தில்
அகலா திருந்த மனம் ….

Continue Reading »

பாமா ராஜன்

பாமா ராஜன்

சங்கமம் 2014 தெருக்கூத்தின் உடை வடிவமைப்பாளர் மினசோட்டாத் தமிழ் சங்கம் நடத்திய சங்கம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில மூவேந்தர் கலைக்குழாம் நடத்திய தெருக்கூத்து நிகழ்சியின் உடை வடிவமைப்பாளர் திருமதி பாமா ராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டிக் கண்டோம். அவர்  வடிவமைத்திருந்த ஆடைகள் அந்த நிகழ்ச்சியின் தரத்தை ஒருபடி அதிகரித்துக் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு நம் பாரம்பரியம் மாறாமல் வடிவமைத்திருந்த விதம் மிக அருமை. கேள்வி […]

Continue Reading »

பிள்ளைக் கனி அமுதே

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 1 Comment
பிள்ளைக் கனி அமுதே

பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?” “சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?” “ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.” “சின்னப் […]

Continue Reading »

புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

நிக்கொட்டீன் (Nicotine) போதைப்பொருளானது புகைத்தலின் போது உட்கொள்ளப்படும் போதைப்பொருளாகும். இது மன அழுத்தம், உளைச்சலை உண்டு பண்ணும் உடல் உட்சுரப்பிகளில் (Hormones) உடன் கலந்து மூளையின் இரசாயன அமைப்பை மாற்றி மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறது. தலைப்புச் செய்தி – புகைப்பிடித்தல் மதுபானத்தையும் அருந்தத்தூண்டும் என்று உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். நவீன மயமான இருப்பத்தியோராம் நூற்றாண்டில் மனித வர்க்கம் புதுமை பலவற்றைச் சாதிப்பினும் சுகாதார ரீதியில் பார்க்கும் போது பழமையான சில கடைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடவும் தொடர்ந்தும் பாடுபடுகிறது எனலாம். […]

Continue Reading »

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், […]

Continue Reading »

மேய்ப்பனை இழந்த மந்தைகள்

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
மேய்ப்பனை இழந்த மந்தைகள்

காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.

Continue Reading »

வயற்காற்று (பாகம் – 01)

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]

Continue Reading »

விதி

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
விதி

விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!

Continue Reading »

விமானப் பயணம்

விமானப் பயணம்

விமான நிலையத்தில், கடைசிக் கதவு வரை சென்று, கண்ணாடி வழியாகப்  பயணம் செல்லவிருக்கும் நண்பர்கள் விமானத்தின் உள்ளே ஏறி அமர்ந்து விட்டனரா எனப் பார்த்து, வழியனுப்பிய நாட்கள் நினைவிருக்கிறதா? வயதான பெற்றோர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், விமானத்தின் உள்வரை சென்று அமர்த்திய அனுபவம் கூட ஒரு சில முறை ஏற்பட்டதுண்டு. ஏதோ இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளல்ல இவையெல்லாம், சரியாக ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்பொழுது விமான நிலைய […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad