இலக்கியம்
உழைப்பு
ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…
இதுவும் ஒரு அஸ்வமேதம்
சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார். வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் […]
தீங்கற்ற வீட்டு விலங்கு
நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…
கணவரை இழந்த பெண்ணே
வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்
கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5
தென்றலான காதல் சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. […]
காதலியே …
காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4
உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.
சத்யா நாதெல்லா
ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்
ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.
அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்
2014ஆம் ஆண்டு மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் இருந்த நிகழ்ச்சி தெருக்கூத்து. ஒரு மணிநேரம் நடந்த இந்தக் கூத்து நிகழ்ச்சி பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. மின்னசோட்டாவிலுள்ள வளங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்திய உயர்திரு சச்சிதானந்தன் அவர்களுடன் ஒரு நேர்முக பேட்டி நடத்தினோம். கேள்வி : வணக்கம் சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன், உங்களைப் பற்றியும் நீங்க வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். […]






