இலக்கியம்
கண்ணிவெடிப் பூமியிலே
அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்
ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…
வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்
வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்
பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்
இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]
வாங்க ஃப்ரீயா பேசலாம்
“என்ன அண்ணாச்சி? சொகமா இருக்கீயளா?” “அடடே .. வாடே மாப்ளே .. நல்லா இருக்கம்டே. என்னடே விடியாலைல வேட்டியெல்லாம் கட்டி அசத்தறீரு? இங்கிட்டு என்ன வெய்யிலா அடிக்கி? வெறக்கீயில்லா?” “பண்டிக நாளல்லா.. வேட்டி கட்டியாகோணுமுன்னு ஊர்லேருந்து ஆத்தா தாக்கீது அனுப்பிருச்சு .. “ ”அப்படித்தாம்ல நடந்துகிடோனும்… கெடக்கட்டும் … ஏது இந்தா தூரம்?” “சும்மாதாம் … கனநாளாச்சுல்லா இந்தப் பக்கம் வந்து ..” “ஆமாம்லே.. கடையில கொள்ளச் சோலி கெடக்கும் ..அங்கன போய் வாறதுக்கே நேரம் வெருசா […]
வறுமை
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
பெற்றதும் இழந்ததும்
உயர் வடையவே உறவினை இழந்தேன்
உடமை பெறவே உரிமை இழந்தேன்
பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்
பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.
நகரமும்! கிராமமும்!
அடுக்கு மாடி கட்டிடமாம் இடுக்கில் கூட குடித்தனமாம்! மடக்கு நீருக்கு வழியில்லையாம். மிடுக்கு மட்டும் குறையலையாம்! பஞ்சு மெத்தை வகைவகையாம் படுத் துறங்க நேரமில்லையாம்! பல்லு துலக்க பலபசையாம். பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்! உரசாம நடக்க முடியலையாம் உரையாடு வதற்குத் துணையில்லையாம் உதவிக் கொரு ஆளில்லையாம் உறவுக் கூட நிலைக்கலையாம்! அழகு ஏடிஎம் அணிவரிசையாம் அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்! அலைபேசி இருபதாயிரம் விலையாம். அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம். அருகம் புல்லுக்கு இடமில்லையாம் அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்! […]
பணிதற்குரிய பணி
”கரணம் தப்பினால் மரணம்” கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் […]
மனப் போராட்டம்
“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆசை
உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
மதுவின் இரு பக்கம்
அச்சம் நீக்கும் நம்மில் உறவாடும் கவிதை
ஆழ்ந்த துயரை துரத்தும் அருமை அன்னை
இன்பம் தரும் பாதகம் இல்லாக் கணிகை
ஈதல் வளரச் செய்யும் பண்பான தாதை
உளரல் தந்து மழலை ஆக்கும் தாய்மை






