இலக்கியம்
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்
இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]
வறுமை
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
பெற்றதும் இழந்ததும்
உயர் வடையவே உறவினை இழந்தேன்
உடமை பெறவே உரிமை இழந்தேன்
பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்
பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.
நகரமும்! கிராமமும்!
அடுக்கு மாடி கட்டிடமாம் இடுக்கில் கூட குடித்தனமாம்! மடக்கு நீருக்கு வழியில்லையாம். மிடுக்கு மட்டும் குறையலையாம்! பஞ்சு மெத்தை வகைவகையாம் படுத் துறங்க நேரமில்லையாம்! பல்லு துலக்க பலபசையாம். பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்! உரசாம நடக்க முடியலையாம் உரையாடு வதற்குத் துணையில்லையாம் உதவிக் கொரு ஆளில்லையாம் உறவுக் கூட நிலைக்கலையாம்! அழகு ஏடிஎம் அணிவரிசையாம் அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்! அலைபேசி இருபதாயிரம் விலையாம். அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம். அருகம் புல்லுக்கு இடமில்லையாம் அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்! […]
பயணங்கள் முடிவதில்லை!
“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல். “ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்” அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா. “ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப் பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து […]
இந்தியப் பயணம்
உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் […]
வாங்க ப்ரீயா பேசலாம் !!
என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]
ஏன் கடவுளே?
கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…
பணிதற்குரிய பணி
”கரணம் தப்பினால் மரணம்” கேள்விப்பட்டதுண்டு. உணர்ந்ததில்லை. நாம் செய்யும் வேலைகளில் ஏதேனும் பிழை நேருமானால், ஏற்படும் சேதமென்ன? பிழை திருத்தக் கிடைக்கும் இரண்டாவது, மூன்றாவது சந்தர்ப்பங்கள் எத்தனை? பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரின் பிழைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும், பிழைகளைத் திருத்திக் கொள்ளப் பல வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. உலகில் மிகவும் வணக்கத்திற்குறிய பணிகள் என மிகச்சில பணிகளை மட்டுமே குறிப்பிட முடியுமென நினைக்கிறேன். தான் எட்டி பார்த்திராத உயரங்களைத் தங்கள் மாணவர்கள் முயற்சித்துப் பிடிக்கத் […]
மனப் போராட்டம்
“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.






