இலக்கியம்
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
தமிழ்த் திரைப்படங்கள் இதிகாசம், புராணம் என்பதைக் கடந்து சமகாலத்துக் கதைகள் என்ற தளத்துக்கு வந்தபோது, பெரும்பாலும் உணர்வுகள் மேலோங்கி நிற்கும் படங்களே வெற்றி பெற்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சூழலைச் சில படங்கள் தோலுரித்தன. கூட்டுக் குடும்பங்களில் நிலவும் முரண்பட்ட மனங்களால் வாழ்க்கை சூறாவளியானதைச் சுட்டிக்காட்டின. அந்தச் சமயத்தில் யுவ-யுவதிகளைச் சுண்டி இழுக்கும் சக்தியாய், மென்மையான காதல் படங்களைத் தந்தவர் C.V. ஸ்ரீதர். ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று உத்தமபுத்திரனில் சரித்திர வசனம் எழுதிய ஸ்ரீதர், […]
அழகிய ஐரோப்பா – 10
(அழகிய ஐரோப்பா – 6/திருவிழா) அழகிய ஐரோப்பா – ஃபெரி தக்காளி சாதம் சாப்பிட்டு பசிக்களை போனதும் அடுத்த பயணத்துக்கான அடுக்குகளுடன் எல்லோரும் வேனில் ஏறி டோவர் நோக்கி விரைந்தோம். டோவரை நெருங்க நெருங்க வீதியின் இரு புறமும் இராட்சத கோட்டைகளும் அரண்களும் என வீதியின் இருபுறமும் வரிசைக் கட்டி நின்றன. இரண்டாம் உலக யுத்த காலத்தில் அயல் நாடுகளைக் கண்காணிக்க உயர்ந்த மலை உச்சிகளில் அமைக்கப்பட்ட அரண்களெல்லாம் இன்றும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. […]
ஐராவதம் மகாதேவன்
கல்வெட்டியியல், தொல்லியல், பத்திரிக்கையாசிரியர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை பெற்றிருந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் மாதம், 26ஆம் நாள் மூப்பு காரணமாக காலமானார். தமிழின் தொன்மை, எழுத்தியல் வளர்ச்சி குறித்து சிந்திக்கும் எவராலும் தவிர்க்க முடியாத பெயர் ஐராவதம் மகாதேவன். தனது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மூலம் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும், திராவிட மொழிக் குடும்பத்துக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சிந்து சமவெளி கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவி தமிழ் […]
ஆச்சர்யக்குறிகள்
கேள்விக்குறிகளான மெய்யை ஆச்சர்யக் குறிகளாக்கும் மாற்றுத்திறனாளிகளே! திறமைகளின் குவியலே! தன்னம்பிக்கையின் உருவமே! விழிகள் செயலிழந்தவர்களே! உங்கள் வாழ்க்கை விழி திறந்து படிக்கப்பட வேண்டிய பாடம்! கைகள் இழந்தவர்களே! தன்னம்பிக்கை தந்திடும் உங்களின் போராட்ட வாழ்க்கை! செவித்திறன் இழந்தவர்களே! உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் தொடர் வெற்றிகளை! மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்! உங்கள் உதட்டினில் தானே தவழ்கிறது தூய புன்னகை! உலகின் கோணப்பார்வைக்குத் தானே குறை பிறை! நிலவுக்கு ஏது? திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு! விழிகள் மூடுவதில்லை என்றும் […]
துணுக்குத் தொகுப்பு-2
புலன் புறத்தெரிவு (Extra Sensory Perception) பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகளைத் தாண்டி மன உணர்வு எனும் ஆறாம் புலன் மனிதனை மற்ற உயிரினங்களிலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனித மனங்களில் இயற்கையாக நடைபெறும் இந்தத் தொடர் நிகழ்ச்சி, சிந்தித்து முடிவெடுத்து செயல்படும் திறனை அளிக்கிறது. இவ்வகை சிந்தனைகள் பெரும்பாலும் அறிவு (கற்றல், கேட்டல் போன்றவை மூலம் பெறுவது) அல்லது அனுபவ அடிப்படையில் அமைகிறது. சில சமயங்களில் அறிவு, அனுபவம் இவற்றைக் கடந்த உள்ளுணர்வு […]
அழகிய ஐரோப்பா – 9
(அழகிய ஐரோப்பா – 6/சிங்கார நதி) திருவிழா லண்டனில் காலை ஏழு மணிக்கே வெயில் போட்டு வாங்கத் தொடங்கியிருந்தது. இரவு முழுவதும் வீசிய குளிர் காற்று சற்றுத் தணிந்து வெளியில் ஒருவகையான உஷ்ணம் தெரிந்தது லண்டனில் இருந்து ஏனைய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவென ஒன்பது சீட் உள்ள வேன் ஒன்றை ஒரு வார வாடகைக்கு எடுத்திருந்தோம். லண்டனில் இருக்கப் போகும் கடைசி நாளான அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும், லண்டனில் மிகவும் பிரசித்தமான […]
அழகிய ஐரோப்பா – 8
(அழகிய ஐரோப்பா – 6/அழகோ அழகு) சிங்கார நதி மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளங் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ் என்ற இந்தப் பாலம். லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான […]
அழகிய ஐரோப்பா – 7
(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை) அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்துக்குப் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை […]
பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்
”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான் ……. […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கும் சில சமயங்களில் சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. எதுகை, மோனை, இயைபு நயங்களுக்காகச் சொற்கள் திணிக்கப்பட்டிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். இவ்விதச் சொற்கள் வரிகளில் துருத்திக்கொண்டு நின்று அழகையும், கருத்தையும் கெடுத்துவிடும். சினிமாப் பாடல்களில் இந்தக் குறையற்ற கவிநயத்தைப் பலரும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சொற்கள், தேர்ந்த சேவகன் ஒருவன் சிந்தாமல் சிதறாமால் தேனைக் கோப்பையில் ஊற்றினால் அந்தத் தேன் எப்படி கோப்பையின் வடிவத்துக்கேற்ப பரவி நிற்குமோ அது போல வரிகளில் அழகாகப் பொருந்தி அடைக்கலமாகும். […]






