\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ரோஜா

ரோஜா

பலர் உன்னைப் பார்த்து புகழ்ந்தார்கள் அவர்களுக்கு உன் அழகு மட்டுமே தெரிந்தது!   உன்னை உன் தாயிடமிருத்து பிரித்தவர்களென அவர்களை நீ வெறுக்கவில்லை!   இப்போது உணர்ந்தேன் உனது  அழகு – உன் தியாகம் மட்டுமே!     ச.கிருத்திகா பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி கோபி.

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 3

அழகிய ஐரோப்பா – 3

அந்த ஏழு நாட்கள் (அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்) “ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள் “சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன். வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள். “குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் […]

Continue Reading »

விடியாத இரவென்று எதுவுமில்லை

Filed in கதை, வார வெளியீடு by on October 14, 2018 0 Comments
விடியாத இரவென்று எதுவுமில்லை

  செப்டம்பர் மாத மாலை நேர வெயில் அந்த இடத்தைச் செம்மஞ்சளில் முக்கி எடுத்தது போல் மாற்றியிருந்தது. மினசோட்டாப் பனியை நன்கறிந்த வாத்துகள் கூட்டமாகப் பறக்கப் பழகிக் கொண்டிருந்தன. எட்டுக்குப் பனிரெண்டு அளவிலிருந்த அபார்ட்மென்ட் பால்கனியில் அமர்ந்திருந்தனர் சத்யனும்  நர்மதாவும். தூரத்தில் ராச்சஸ்டர் கேஸ்கேட் ஏரியில் ஒற்றையாக அலைந்து கொண்டிருந்த படகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நர்மதா. அவள் கையிலிருந்த காஃபி இந்நேரம் ஆறிப் போயிருக்கும். லேசான குளிருக்குப் பயந்து பால்கனியின் பக்கவாட்டு சுவர் மறைப்பில் அவள் உட்கார்ந்திருந்தாலும், […]

Continue Reading »

இதுவும் கடந்து போம்

Filed in கவிதை, வார வெளியீடு by on October 14, 2018 1 Comment
இதுவும் கடந்து போம்

மனதிற்கு இனிய மழலையாய் வந்துதித்தேன்.. மழலையும் மெதுவாய்க் கடந்தே போனது…… கொள்ளை அழகுக் குழந்தையாய்த் தவழ்ந்திருந்தேன் கொடுத்ததை எடுத்ததுபோல் கடந்தே போனது…. படிப்பதில் பிடிப்பால் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.. பள்ளிப் பருவமதுவும் கடந்தே போனது.. கட்டிளங் காளையாய்க் கல்லூரியை வலம்வந்தேன்.. கல்லூரி நாட்களும் கடந்தே போனது… காளைப் பருவத்தில் காதலிக்காகத் தவமிருந்தேன் காதலும் மறைந்து கடந்தே போனது.. துயரத்தின் மத்தியில் தொழில்பல புரிந்திருந்தேன் துயரமும் கூட கடந்தே போனது…. மனையாளின் சுகமதை மலரென நுகர்ந்திருந்தேன் மனத்தாங்கலால் சுகமது கடந்தே […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2

பாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 2

அழகிய ஐரோப்பா – 2

முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.   ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு…  அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் […]

Continue Reading »

சூதாட்டம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
சூதாட்டம்

காசாசைச்  சூதாட்டம் காலத்தை வீணாக்கும் நாசமாக்கும் வாழ்வை நாளும்    சிதைக்கும் பேராசை என்றுமே பேரழிவைத்  தரும் ஏசப்படாமல் வாழ்வதே ஏற்றத்தைத்  தரும்   நாசம் விளைவிக்கும் நஞ்சுச்  செயல்களை வீசி எறிந்துவிடு விவேகத்தோடு வாழ்ந்திடு அசலாகி  வாழ்தலே ஆக்கம்  அளிக்கும் நிசமான  உழைப்பே நன்மை  செய்யும்   அறிவாய் இருத்தல் அனைவருக்கு மழகே   – சரஸ்வதி ராசேந்திரன்

Continue Reading »

வானத்தின் நாணம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
வானத்தின் நாணம்

கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல், அந்தி மயங்கும் நேரத்திலே ஆதவனின் பொற்கரங்கள் அன்பு கொண்டு தழுவியதால் அந்தி வானம் சிவந்ததுவோ!.   சித்தினியின் சித்தமது சிறகடிக்க வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க கைகளினால் முகம் மறைத்த காதலி போல், கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 1

அழகிய ஐரோப்பா – 1

உல்லாச உலா அமெரிக்காவில் பனியும் பணியுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பூட்டிய அறைகளிலேயே பிள்ளைகள் நாளாந்த வாழ்க்கையைக் கடந்து போகிறார்கள். பிள்ளைகளின் மகிழ்வுக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியூர் பயணம் மேற்கொள்வது என்பதை ஒரு நோக்கமாக வைத்துள்ளோம். நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தோம். அமெரிக்கா வந்தபின் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் அது என்பதால் மறக்கமுடியாத நினைவாக இன்றும் இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு துபாய் மற்றும் இலங்கை சென்றிருந்தோம். இவ்வருடம் ஐரோப்பா போவதென முடிவெடுத்திருந்தோம். […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது பிறந்த தினத்தையொட்டி பனிப்பூக்கள் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்து, ரசித்த சில நண்பர்கள் கண்ணதாசன், விஸ்வநாதன்–ராமமூர்த்தி கூட்டணியில் வந்த, சுவாரசியமான  பாடல்களைப் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். இக்கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் தனித்துவமானவை என்றாலும் கூட சில பாடல்களில் ஒளிந்திருக்கும் நுட்பம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பொதுவாக காதல் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad