இலக்கியம்
தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!
எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்
ஊர்ப் புறத்தில் வாழவைக்கும் தர்மம் என்பது வழி தெரியாது வந்தவர்களை வசதியுள்ளதோ இல்லையோ, வரவேற்று உபசரித்தலாகும். இன்றைய வருமானம் மிகுந்த தனிக்குடும்ப வாழ்க்கைச் சூழலிலும், நகர வாழ்வில் பக்கத்து வீட்டாரையே சரியாகத் தெரியாத அநாமதேயச் சூழலில் எமது சமூகத்திடையே வரவேற்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல் எமது மேம்பாட்டிற்கு அவசியம். ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாகப் பதிப்பகம் சார்ந்த தகவல்துறையில் பணிசெய்து வந்தேன். அப்போது எனது பணிகளில் ஒன்று தகவல் சேவைப் பதிவகங்களுடனும், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், சட்டத்துறை, கணக்கியல், கணனியியல், மருத்துவம், […]
மீண்டு(ம்) வரும் சுதந்திரம்
விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !
ஒரே ஒரு சந்திரன் -பாகம் 2
(பாகம் 1) ராமச்சந்திரனின் சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட, அவர்களது குடும்பம் ஏழ்மையில் மூழ்கியது. பின்னர் அவரது தாயார் சத்யபாமா மிகுந்த சிரமங்களுக்கிடையே, ராமச்சந்திரனையும், அவரது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியையும் வளர்க்க வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் தன் பிள்ளைகளுக்கு மூன்று வேளைச் சாப்பாடு கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால், அவர்களை மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார் சத்யபாமா. களையான முகமும், சிவந்த நிறமும் கொண்டிருந்த ராமச்சந்திரனுக்குப் பயிற்சியளிக்கத் துவங்கினர் பாய்ஸ் கம்பெனியினர். போதுமான […]
அந்த 158 நாட்கள்
பெரிய அளவில் அரசியல் அனுபவமும், ஆளுமையும் இல்லாது, புகழ் பெற்ற தொழிலதிபர், தொலைகாட்சியில் மெய்மை நிகழ்ச்சிகள் நடத்துபவர், உலக அழகிப் போட்டிகள் நடத்தும் நிறுவனர் போன்ற சிறப்புகளைப் பெற்றிருந்த டானல்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. பத்து மாதங்களுக்கு முன்பு வரை, சூரியன் மேற்கே உதிக்கவும் வாய்ப்புண்டு ஆனால், ட்ரம்ப் அதிபராக வாய்ப்பேயில்லை என்று ஹேஷ்யம் கூறி வந்தன ஊடகங்கள்; தங்களது பாரம்பரியத்துக்கே பெரிய இழுக்கு என்றனர் குடியரசுக் கட்சியினர்; மிக எளிதாக […]
அம்மா கடை காப்பி…
”ம்ம்…. ஏண்டா அம்பி… எங்க உங்கப்பா… “ கேட்டுக் கொண்டே அந்தத் திண்ணையின் தாவி அமர்ந்து கொண்டார் பக்கத்து வீட்டு கஸ்தூரி மாமா. “தெர்ல மாமா, எங்கயோ போயிருக்கா…” என்று பதில் சொல்லி விட்டு, அந்த இத்துப் போன ரப்பர் பந்தைச் சுவற்றில் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான் கணேசன். இவன் பதிலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மடியில், வேஷ்டி மடிப்பில் சுற்றி வைத்திருந்த வாழைப்பட்டையை வெளியில் எடுத்துப் பிரித்து, அதிலிருந்து டி.கே.எஸ். பட்டணம் பொடியை, ஆட்காட்டி விரல் […]
ஓவியா – தி பிக் பாஸ்
சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பீட்டுக் கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. டிவியில் இருந்து சிவகார்த்திகேயனைச் சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, […]
கண்ணம்மாவின் பாரதி
மாலைச் சூரியன் மஞ்சளாய் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சிங்காரச் சென்னையில் தினந்தோறும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கிட்டத்தட்ட அதே மணித்துளியில்தான்… மாலை 5.55 அல்லது ஓரிரு நிமிடங்கள் முன் பின்னாக இருக்கலாம். அந்த நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், சூரியனும் நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுப்பதற்காக மேகங்களுக்குப் பின்னே ஒளிந்து, வானத்தின் அடிப்பகுதி நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மஞ்சள் கிரணங்கள், மெரினா கடற்கரையின் மணலையும் மஞ்சள் தூள் போலக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த மஞ்சள் கிரணங்களுக்கு […]
செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?
சென்ற சில வருடங்களாகக் கணனித் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியில் முன்னணியை அடைந்துள்ளமை நாம் அறிந்த விடயம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் கணனிகள் தாமாகத் தகவல் ஆராயும் வல்லமையில் பல மடங்குகள் வளர்ந்துள்ளன என்று ஒப்பீட்டளவில் நாம் அவதானிக்கலாம். இந்த வளர்ச்சி கைத்தொலைபேசிக் கமெரா படமெடுப்பதற்கு நமக்கு உபயோகமாகும் போது யாவருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் மனிதன் பகுத்து அறியும், மிகுந்த சம்பளத் தொழில் முறைகளாகிய மனித உரையாடல்களை வர்த்தக, நீதிமன்ற […]
பிக் பாஸ் சர்ச்சைகள்
‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் […]






