இலக்கியம்
மேரி டைலர் மோர் (Mary Tyler Moore)
அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் முன்னோடிப் புதுமைப் பெண்ணாக 1970 களில் இருந்து பிரபல்யமானவர்தான் அண்மையில் மறைந்த நடிகை மேரி டைலர் மோர் அம்மையார் அவர்கள். இவர் எமி (Emmy) டோனி (Tony) அமெரிக்கத் திரை விருதுகளைத் திரைப்பட நடிப்பு, தொலைக்காட்சி நடிப்பு மற்றும் படத் தயாரிப்புக்களுக்காகப் பெற்றவர். அமெரிக்கக் குடும்பங்களைக் கவர்ந்த சிறந்த நகைச்சுவை நடிகை. இவர் பிரபல்ய தொலைக்காட்சி முற்போக்கு மனைவியார் லாரா பெற்றி (Laura Petrie) எனும் கதாபாத்திரத்தை The Dick Van Dyke Show […]
யாரடியோ?
கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !
வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!
பக்குவக் காதல்
சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]
வீட்டுக்கொரு ஜீனோ
எழுத்தாளர் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய கதைகளின் ரசிகர் என்றால், இன்னமும் ஜீனோ என்ற பொம்மை நாய்க்குட்டியை மறந்திருக்க மாட்டீர்கள். நாயகியுடன் எப்போதும் இருக்கும் நாய்க்குட்டி, புத்தகங்களை வாசித்துக் கொண்டு நாயகிக்குப் பல தகவல்களையும், அறிவுரைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வரும். வரும் நாட்களில், நம் வீட்டிலும் இது போன்ற ஒரு ஜீனோ வரலாம். முன்பெல்லாம் ராஜா, ரவி, ரமேஷ் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவர் இருப்பார். வருங்காலத்தில், இதே போல் வீட்டுக்கு […]
பெண்களை அடிமைப்படுத்தாதே !
பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே! கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே பெண்ணினம்! கேட்பதற்கு நாதியில்லா இனமாகிப் போனதே பெண்ணினம்! வயது ஐந்து கொண்ட சின்ன வண்ணக்குயில் கூட உன் கண்ணிற்குப் பதினெட்டாய்த் தெரிவதேன்? பதினெட்டாய்த் தெரிவதேன்? மன்னன் அந்தப்புர மகளிராய் அடிமைப்படுத்தப்பட்டோம் இன்று வரை அடிமை ஆனோம் இன்று வரை அடிமை ஆனோம்! அரசியல் மேடை ஏறி வென்றால் உன் காமப் பார்வையை பாய்ச்சுகின்றாய் பள்ளியிலும் இதுதான் செல்லும் வீதியிலும் இதுதான் எங்கும் இதுதான் உன்னைப் பெற்றவளும் பெண்தானே […]
மார்கழியும் தையும்
எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]
கல்லறை பேசுகிறது
அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]
மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King Jr.)
“ எனக்கு ஒரு கனவுண்டு …” (I have a dream…) என்று அமெரிக்கக் கறுப்பின மக்களின் குடியுரிமைக்குக் குரல் கொடுத்த அகிம்சைவாதி தியாகி போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் குறித்துப் பார்க்கலாம். இவரிற்குப் பெற்றார் கொடுத்த பெயர் மைக்கேல் லூதர் கிங் ஜூனியர் (Michael Luther King Jr). இவர் சனவரி மாதம் 15ம் திகதி, 1929ம் ஆண்டு ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா நகரி பிறந்தார். இவர் ஏப்ரல் 4ம் திகதி 1968ம் […]
நகுலேச்சரம்
இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும். தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள […]
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்
இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]






