இலக்கியம்
ஆட்டிஸம் – பகுதி 4
(ஆட்டிஸம் – பகுதி 3) ஆட்டிஸத்துடனே வாழ்வை நடத்திச் செல்வது என்பது நிரந்தரமாகிவிட்டது எங்களுக்கு. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தினசரி வாழ்வை நடத்திச் செல்வது, எங்களைச் சுற்றியுள்ள உலகுடன் ஒட்டி வாழ்வது என்பதற்காகப் பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றறிய வேண்டிய சூழல். எங்களைப் போலவே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுடன் பழகுவதன் மூலம் இதனைக் கற்றறிவது எளிதாகும் என்று கண்டோம். எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கமான இடங்களான மருத்துவமனை, சிறப்புப் பள்ளிகள் ஆகிய […]
சாருலதா
ஆண்டு 1940 : அதி காலைச் சூரியன் இன்று சோம்பலுடன் இருந்தான் போல. அந்த மார்கழிக் குளிரில் மேகப் போர்வையைக் கலைத்தபடி மெல்ல எழுந்தான். ஆனால் சாருவிற்கு முழிப்பு வந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். வெளியில் இருந்த சின்ன செடியில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தபடி படுத்திருந்தாள் சாரு. அந்த அதிகாலையில் சிறிய குருவி மெல்ல இலைகளில் இருந்த பனியை அருந்திய அழகு பார்க்க […]
இதழ்
உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!
உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!
ஆத்ம சாந்தி
காஷ்மீர், அதற்கு இரண்டு தலை நகரங்கள். குளிர் காலத்தில் ஜம்மு மற்றும் வெயில் காலத்தில் ஸ்ரீநகர். அந்த ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் செல்வம். பசி வயிற்றைக் கிள்ளியது. தால் ஏரிக்கு அருகிலிருந்த கடையில் சப்பாத்தியும், பன்னீர் சாமனும் வேண்டுமென்று சொல்லி விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சங்கரும், அவனும் குளிர்கால ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்கள். இன்று சங்கர் வியாபார விஷயமாக வேறு நண்பரைக் […]
எங்கேயும் எப்போதும் எம் எஸ் வி – பகுதி 5
(எங்கேயும் எப்போதும் எம்.எஸ்.வி. பகுதி 4) ஃபிப்ரவரி மாதத்துக்கென பல சிறப்புகள் இருந்தாலும், தற்காலத்தில் இம்மாதத்துக்காகவே பலர் காத்திருப்பது வாலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினத்துக்காகத்தான். அன்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம் மகிழ்ச்சி, பரவசம் எனப் பல பரிமாணங்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும், எளிதில் விவரிக்க முடியாத மெல்லிய உணர்வே காதல். ‘ஐ ஆம் கமிடட்..’ என ஒப்பந்தமிடும் உறவுகளைப் போலல்லாமல் இதயப்பூர்வமாக உணரப்படும் மிக மிக மெல்லிய உணர்வு காதல். தங்கள் மெல்லிசையால் இசையுலகைக் கட்டிப்போட்ட […]
மெழுகுவர்த்தி
அப்பா இப்பொழுதல்லாம் அடிக்கடி கனவில வருகிறார். கூடவே அம்மாவும். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். பழைய காலத்தைப் பற்றிக்கூடப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடன் பணி புரிந்தவர்களைப் பற்றி, வேலை செய்யும் போது நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றி எனச் சாவதானமாக என்னுடன் உரையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஏதோ சொல்ல வருகிறார் அது மட்டும் சரியாகக் கேட்க மாட்டேனென்கிறது. திடீரென விழிப்பு வரும்போது யாருமில்லாமல் மனசு கனத்துப் போகிறது. திரைப்படத்தில் மூன்று மணி நேரம் முடிந்த பின்னாலும் திரைப் […]
கன்னியும் காதலியும் !
கருணை இல்லாத
காட்டுமிராண்டி
நாட்டுக்குள்ளே
புகுந்தது போல்
விம்மி நிற்கும்
விரதாபம் !
உள்ளே பதுங்கும்
வெண்புலியாய்
அவனது
விரகதாபம் !
அவன் அவளில்லை
“எல்லாம் சரி… ஆனா நான் எப்டி….?” “ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்….?” “ஹெலோ…. எல்லாமே குறைச்சல்தான்…. ஏதோ ஒரு நாளுக்குதான் நான் ஓகே… வாழ்நாள் எல்லாம் எப்படி…?” என்ற சாய்பல்லவி… தன்னையே ஒரு முறை குனிந்து ஒரு தாழ்வு மனப்பான்மையோடு பார்த்துக் கொண்டாள்……. “எல்லாம் சரியா வரும்… உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா… அதுதான் முக்கியம் பல்லவி….” என்றான்.. கண்களைப் பார்த்த… கெளதம்… “அது இல்ல கெளதம்… காதல், கல்யாணம்…. குழந்தை, குடும்பம் இப்படி வெறும் ஆசைகள் மட்டுமே […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2
(அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..) சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி அயோவா காகஸ் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. அவற்றின் முடிவுகளை அறியும் முன்னர் காகஸ் மற்றும் ப்ரைமரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். காகஸ் (Caucus) காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் […]
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் (Net Neutrality)
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் Net Neutrality உங்கள் கைத்தொலைபேசியில், கணனியில் ஓடும் படம் சற்று வேகம் குறைந்து காணப்படுகிறதா? சிலசமயம் ஒட்டு மொத்தமாக இணைப்புத் துண்டிக்கப் பட்டு விட்டதா? அது பற்றி எவ்வளவு தூரம் சிந்தித்திருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக நாம் அதை பொருட்படுத்தாமல் மீழ படத்தைப் பார்க்க முனைவோம் என்பதே பொதுவான பதில். ஆயினும் நீங்கள் பார்க்கும் படம் பற்றிய தகவலைப் பின்னணியில் ஒரு கணனியில் இருந்து மற்றய கணனிக்குப் பரிமாற பல […]






