இலக்கியம்
இணையச் சுழல்….
இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் […]
நிறமற்ற சினிமா
படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]
குமரிக்கண்டம் எதிர்கோணம்
குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும் தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் […]
உலகத் தாய்மொழி தினம் – 2016
அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]
கவித்துளிகள்
பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி
ஆணவம் கொ(ல்)ள்வோம்
உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3
2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை. பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது. நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் […]
நாப்பதுக்கு மேலே…
ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]
முதுமையும் மழலையே
அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான். “பத்ரி எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு, “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]
கலைகளின் சங்கமம்
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பிப்ரவரி 6 சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் சங்கமம் 2016 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. குழந்தைகளும், பெரியவர்களும் பங்கு கொண்ட பல கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் பழமை மாறாது கருப்பட்டி பொங்கல் சேர்ந்த விருந்து என பல சிறப்புகள். இதற்கெல்லாம் மகுடமாக இருந்தது என பலரும் புகழ்ந்தது கலைகளின் சங்கமம் நிகழ்ச்சியைத் தான். பதினோரு வகையான தமிழர் கலைகளை முழு முயற்சியுடன் பயின்று […]






