\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

நிழலும் அரசியல்வாதிகளும் !

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
நிழலும் அரசியல்வாதிகளும் !

நிழல் …. காலையில் முன்னே சென்று வணங்குகிறது ! தேர்தலின்போது நம்மையெல்லாம் அரசியல்வாதிகள் வணங்குவதைப் போல. நிழல்… பிற்பகலில் நம் பின்னே தொடர்கிறது ! தேர்தல் நாளன்று நம் ஓட்டுக்காக. நம் பின்னே வரும் அரசியல்வாதி போல. நிழல் … இரவில் அது இருக்கும் இடம் தெரியாமல் மறைகிறது ! வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கமே வராத அரசியல்வாதி போல ! பூ. சுப்ரமணியன்,

Continue Reading »

காதலாகிக் கசிந்துருகி…..

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 3 Comments
காதலாகிக் கசிந்துருகி…..

“ மங்களம், சமையல் ஆயிடுத்தா… டைம் ஆறதுடி….” சாம்பு மாமா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். ”ஆயிண்டே இருக்குன்னா.. என்னத்துக்கு இப்டி வெந்நீரக் கொட்டிண்ட மாதிரி பதற்றேள்” – இது மங்களம் மாமி. “இல்லடி, நம்ம தியேட்டர்ல முதல் மரியாதை படம் போட்ருக்காண்டி, ரெண்டாவது ஆட்டம் போலாமேனுட்டு…” ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த சாம்பு மாமாவுக்கும் நாற்பதுகளின் இறுதியிலிருந்த மங்களம் மாமிக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். குழந்தைகள் இல்லை, ஆனால் அது பற்றிய கவலையை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் […]

Continue Reading »

மழைப்பாட்டு

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 1 Comment
மழைப்பாட்டு

பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த பதமழையின் வாசம் அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து வழுக்கேறிய வண்டல் மண்ணை பதப்படுத்தத் தொடங்குகிறது தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து அவன் இசைக்கத் தொடங்குகிறான் அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு […]

Continue Reading »

சென்ரியு கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
சென்ரியு கவிதைகள்

கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்

Continue Reading »

Bollywood Dance Scene – Interview

Bollywood Dance Scene – Interview

On the evening of December 12, 2015, the Panippookkal team arrived at Tapestry Folkdance Center to chat with the Bollywood Dance Scene Twin Cities. All sorts of colors and shades came into view as the energetic team entered the dance area. I understood that it was their last class for 2015, but I wouldn’t have […]

Continue Reading »

காதலும் கடந்து போகுமோ?

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments
காதலும் கடந்து போகுமோ?

பனிக்காலங்களில் போர்ச்சில் அமர்ந்து அந்த ஏரிக்கரையைப் பார்த்துக் கொண்டிருப்பது விக்கிக்கு மிகவும் பிடிக்கும். உறைந்து போய் வெண்படுகையாய் மாறிப் போன ஏரி; இலைகள் உதிர்ந்து கிளைகள் பரவிக் கிடக்கும் மரங்கள்; ஒரு பக்கமாகக் காற்று வீசியதால் அவற்றில் பாதிப் பக்கங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித்துகள்கள்; இரவு தொடங்கப் போகிறது எனக் கட்டியங்கூறும் தூரத்து வீடுகளில் மஞ்சளாய் எரியும் விளக்குகள்; எங்கிருந்து வந்தன என்று அறியாத வண்ணம் விர்ரென்று பறந்து போகும் சிறு பறவைகள் […]

Continue Reading »

மறவாத அந்த நாள் !

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments
மறவாத அந்த நாள் !

அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !

மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !

Continue Reading »

அப்பாவை காணவில்லை

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments
அப்பாவை காணவில்லை

அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு […]

Continue Reading »

குறை ஒன்றும் இல்லை

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 4 Comments
குறை ஒன்றும் இல்லை

“கோகி வீட்டில பிறந்த நாள் அழைப்பு குடுத்திருக்காங்க மனோ ” கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி மனோவிடம் பேசினாள் பிருந்தா. “யாருக்குப் பிறந்த நாள் ?” ” அவங்க பெரிய பையன் ஆகாஷ்க்கு 9 வது பிறந்த நாள்”. “எப்போ?, எங்கே?”. “வர சனிக்கிழமை , ஒரு விளையாட்டுத் திடலில் “. “எங்கே?” மறுபடியும் மனோ வினவ, ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் பெயரைக் குறிப்பிட்டாள் பிருந்தா. “அங்கே என்ன இருக்கு?” “மினி golf, அப்புறம் குதிக்கறதுக்கு ஒரு […]

Continue Reading »

வழிகாட்டும் வள்ளுவம்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments
வழிகாட்டும் வள்ளுவம்

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து வாழ்க்கையின் தத்துவத்தை இக்குறள் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது.  மனித நேயம் என்றால் என்ன என்பதனை மிக உணர்வு பூர்வமாக இக்கட்டுரை வடிவமைத்துள்ளது.  என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னைக் கவர்ந்த கட்டுரை: ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வு: ஒரு மாணவர் கல்லூரி வகுப்பறை நோக்கி நடந்து வருகின்றார்!  திடீரென மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.  வலுத்த மழைத் துளிகளில் மாணவர் நனைந்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad