இலக்கியம்
மறவாத அந்த நாள் !
அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !
மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !
அப்பாவை காணவில்லை
அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு […]
குறை ஒன்றும் இல்லை
“கோகி வீட்டில பிறந்த நாள் அழைப்பு குடுத்திருக்காங்க மனோ ” கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி மனோவிடம் பேசினாள் பிருந்தா. “யாருக்குப் பிறந்த நாள் ?” ” அவங்க பெரிய பையன் ஆகாஷ்க்கு 9 வது பிறந்த நாள்”. “எப்போ?, எங்கே?”. “வர சனிக்கிழமை , ஒரு விளையாட்டுத் திடலில் “. “எங்கே?” மறுபடியும் மனோ வினவ, ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் பெயரைக் குறிப்பிட்டாள் பிருந்தா. “அங்கே என்ன இருக்கு?” “மினி golf, அப்புறம் குதிக்கறதுக்கு ஒரு […]
மழைத் துளிகள்
மழையின் கேள்வி !!!
விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!
மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்
தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.
யார் அந்த இராவணன் பகுதி – 3
(பகுதி – 2) இராவணன் எப்படி அரக்கன் ஆக்கப்பட்டான் இராவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்றும் பேரழகன் என்றும் பொருள் உண்டு. “இரா” என்றால் ‘இருள்’ அல்லது ‘கருமை’ என்பது பொருளாகும். இருள் போன்ற கரிய நிறத்தினை உடையவனாதலால் இராவணன் (இராவண்ணன்) என அழைக்கப் பட்டான். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். கதைக்காகத் தமிழ் அரசனான இராவணனை அப்படிக் காட்டியிருந்தாலும் அவனின் வீரம் என்றுமே போற்றுதலுக்குறியது. மாற்றான் […]
மாரியால் மாறினோம்
மரத்துப் போன ஜனங்கள்
மடங்கிச் சுருங்கிய மனங்கள்
மானுடம் மறந்த தன்னலம் ; யாவும்
மாறிடக் கண்டோமே மாரியால்!!
மண்டியிருந்த பேதங்கள் மக்கிப் போயின!
மதர்த்திருந்த மதங்கள் மரித்துப் போயின!
கண்டறியா அண்டைமனிதர் கடவுளாயினர்;
கடல்கடந்த அன்னியமனிதர் வள்ளலாயினர்!
சம்மதம் முதல் 5 நிமிடங்களில்
Category – career, business, personal development அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் […]
சமத்துவம்
அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]
ஒரு துளி கண்ணீர்
“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]






