இலக்கியம்
காமத்தின் தொடக்கம்
அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?
செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?
நிலாவரை
யாழ்ப்பாணத்தில் உள்ள நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]
அந்தமும் ஆதியும்
இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1
Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]
எசப்பாட்டு
மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்
அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]
கொலைபேசி
உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்
சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15
பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]
விநாயகர்ச் சதுர்த்தி
கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்






