இலக்கியம்
கோமகன்
சிவகங்கை மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்துப் பெரிய கோவில் பரபரத்துக் கொண்டிருந்தது. பூசாரி சுப்ரமணிய ஐயரும் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனும், சிவனுக்கும் அம்மைக்கும் அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணிய ஐயர் செய்கின்ற சந்தனகாப்பு அலங்காரம் சுத்துப்பட்டுப் பதினெட்டு கிராமத்திலும் பிரபலம். பதினெட்டு கிராமத்திலும் எல்லா கிராமத் திருவிழாக்களிலும் சுப்பிரமணிய ஐயரின் சுவாமி அலங்காரமே பேசும் பொருளாக இருக்கும். கடந்த இரண்டு வருடமாகத்தான் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனைக் கோவிலில் சுவாமி கைங்கரியங்களுக்கு அனுமதித்திருக்கின்றார். “மணி இத கவனமா பார்த்துச் […]
இது கவியல்ல நிஜம்
வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12) அந்நிய மனோநிலை உணர்வு புதிய உணர்வு நிலைகளும் அந்நிய மொழியின் ஆதிக்கமும் தமிழ்க் கவிதை மரபில் சில மாற்றங்களை விளைவிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் அதிகமானவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டனர். எம்மவர்களின் நாளாந்த வாழ்க்கை மேலைத்தேச நாட்டினர் போல் அமைந்ததல்ல. சமூகப் பொருளாதார ரீதியாகக் குடும்ப உறவுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை எமக்குத் தனித்துவமானது. ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் முற்றிலும் புதிதான ஒரு வாழ்வியற் […]
வாடகை சைக்கிள்
நம் சிறுவயது மகிழ்ச்சியும், நினைவுகளுமான கூட்டாஞ்சோறு, நொண்டி, கில்லி-தாண்டு, பல்லாங்குழி, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிய மண் கோவில், அதற்கு நடத்திய திருவிழா, இதன் வரிசையில் வாடகை சைக்கிளுக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில், எனது பார்வையில் பட்டது வாடகை சைக்கிள், இதைப் படித்த நொடிப் பொழுதில் என் நினைவுகள் என் பால்ய பருவத்திற்குச் சென்றதை என்னால் உணர முடிந்தது. நாம் மறந்த, நம்மை விட்டு மறைந்த வாடகை சைக்கிள் பற்றிய நினைவு […]
மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்
‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்! தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் […]
சர்வம் தண்ணீர் ம(மா)யம்
இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) […]
கடவுளுமில்லை… கர்மமுமில்லை..
‘கடவுள் இல்லைன்னு இப்ப சொல்லு பாக்கலாம் ..’ அவன் பேசிய பாஷை புரியாவிடினும் இதைத்தான் சொல்கிறான் என்று ஊகிப்பதற்குள், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் தலையைக் குறி வைத்து அடித்தான் அவன். அவனது கை பின்னுக்குப் போன வேகத்தில் முகத்தை லேசாகத் திருப்பினார் தீனா. தலையைக் குறி வைத்த அந்த அடி சற்றுக் கீழிறங்கி நெற்றிப் பொட்டுக்கும் கண்ணுக்கும் இடையில் கிழித்துக் கொண்டு சென்றது. இருட்டிக் கொண்டு வந்தது தீனாவுக்கு. ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. முடியவில்லை அவரால். கையால் […]
தமிழனென்று சொல்லடா – கவிமணி
”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும். பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா ! கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! […]
காணாமல் போன வாழ்வு
இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி
மறை நூலில் இறை வாக்கு
புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்






