இலக்கியம்
அகத்தின் அழகு
உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதன் தான் வெளித்தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறான். இன்பத்தை அடைய எல்லாருமே ஒருவிதத்தில் அல்லது பலவிதத்தில் முயன்று கொண்டு இருக்கிறோம். அனால் வேதங்களோ, நாம் ஆனந்தத்தாலே உருவாக்க பட்டவர்கள். மாயை மறைப்பதால் அதை உணராமல் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதை அப்படியே நம்பச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அனால், அதில் அறிவியலுடன் கலந்து ஆராய்ந்து பார்போம். “இது என் கை” என்று நான் […]
மறை நூலில் இறை வாக்கு
புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
சோர்ந்து போகாதே ! மனமே !
துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே.. கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே.. எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!! – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
மழலைதரும் மதுபோதை
உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்
முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்
முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்
பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்
வசீகர வஞ்சி
கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]
ஊட்டச்சத்தும் ஊகங்களும் – 2
மார்ச் மாதம் ஊட்டச் சத்து மாதம். இதையொட்டி சென்ற இதழில் நம்முடலுக்குத் தேவையான உணவுக் கூறுகளைப் பற்றி, குறிப்பாக பெருவூட்டப் பொருட்களான மாச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்தினைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் சிறுவூட்டப் பொருட்களான உயிர்ச்சத்துகள் பற்றி பார்ப்போம்.
உயிர்ச்சத்துகள் (Vitamins)
நம்முடலுக்கு சக்தியளிப்பது வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள் தான். இயற்கை உணவுகளில், குறைவான அளவில் காணப்படும் உயிரினக் கலவை தான் உயிர்ச்சத்து. மிக குறைவான அளவில் தேவைப்பட்டாலும், வளர்சிதை மாற்றங்களுக்கு (metabolism) உயிர்ச்சத்து மிக அவசியமானது. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து மட்டுமே இவை பெறப்படுகின்றன. உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு உயிர்ச்சத்துகள் மிகவும் அத்தியாவசியமானவை. இவை மற்ற பெருவூட்டச் சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்ந்தால் மட்டுமே நமக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை, தோல், இதயம், நரம்புகள் மற்றும் எலும்புகளின் நலனை நிர்ணயிப்பது உயிர்ச்சத்துகளே. உயிர்ச்சத்தின் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து நாம் எளிதில் நோய்வாய்ப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
எசப்பாட்டு – அக்கரை பச்சை
காசு பணம் அதிகமாக கைகளிலே புரளுமுன்னு காடு கழனி எல்லாம் விட்டு காத்துப் போல பறந்து வந்தோம் அசல் நாட்டு வாழ்க்கையிலே அமைதிக் கொரு பஞ்சமில்ல அன்பாகப் பழக வுந்தான் ஆளுக்கொரு குறைவும் இல்ல கொஞ்ச நாள்ல போயிரவே நெஞ்சு முழுசும் ஆசையிருக்க பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல நம்மப் பெத்தவுக நடுத்தெருவுல நிக்க விட்டு நாம பெத்தவுக நலம் நெனக்கும் செய்கையிதோ? – வெ. மதுசூதனன். […]
தொலைந்து போன சுகங்கள்
காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11) சமூக விரோதச் செயல் சமூகம் மீது பிடிப்பில்லாத சுயநலப் போக்கின் விளைவாக, பிறர்மீது கரிசனை, பற்று என்பன இல்லாதுபோக தன்னைத்தானே சீரழித்துத் தன் சமூகத்துக்கும் சீரழிவை ஏற்படுத்தும் வன்முறைகளில் புலம்பெயர்ந்தோரில் சிலர் செயற்பட்டு வருவதனையும், வெளிநாடுகளில் குழுக்களாகச் சேர்ந்து சீட்டாட்டம், போதைப் பொருள் கடத்தல், குடி, குழு மோதல்களில் ஈடுபட்டுச் சீரழிவதையும் சில கவிதைகள் கூறுகின்றன. மைத்திரேயி எழுதிய ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ என்ற கவிதையில் வரும்; “ஊடறுக்கும் குளிரில் வசந்தத்தை […]






