நிகழ்வுகள்
5 மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் (Are you hungry MN)

ஜூலை 22ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள ஸ்டாரிங் ஏரிப் பூங்காவில் (Staring Lake Park) நடைபெற்றது. இப்போட்டியை ‘ஆர் யு ஹங்ரி?’ நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். போட்டி 9 மணிக்கு ஆரம்பித்தது சுமார் 10:30 மணியளவில் போட்டி நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 214 பேர் ஓடி […]
வண்ணப் பட்டங்கள் விழா 2017

மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்டன் நகரில் உள்ள வேலி பூங்காவில், பட்டங்கள் பறக்கவிடும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை ப்ளூமிங்டன் நகர சபையினர் மற்றும் மினசோட்டா பட்டம் விடுவோர் சங்கம் சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்று வண்ண வண்ணப் பட்டங்களைச் செய்து, பறக்கவிட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பான பட்டம் செய்தவர்கள், உயரமாக பறக்கவிட்டவர்கள் மற்றும் அதிக நேரம் பறக்க விட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்விழாவில் குழந்தைகள் விளையாட செயற்கை […]
விவசாயிகள் சந்தை – 2017

விவசாயத்தைப் பிரதான உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி செய்யும் மினசோட்டா மாநிலத்தில் கோடைக் காலம் குதூகல என்பது உள்ளூர் காய்கறி வாங்கியோ அல்லது சொந்தத் தோட்டத்தில் வளர்த்தோ, சமைத்துச் சுவைக்கும் காலம். கோடை கடந்தால் குளிர் வந்துவிடும். எனவே, சுறுசுறுப்பாக பொடிநடை போட்டு, அழகான உணவுகளைப் பதமாகத் தெரிவு செய்து, மிகக் குறைந்த சில்லறைக் காசுகளால் பை முழுதும் பல கறிவாங்க ஒரே சந்தர்ப்பம் விவசாயிகள் சந்தையே. இதோ உங்கள் அருகாமையில் உள்ள இவ்வருட உள்ளூர் விவசாயச் சந்தைகள் அட்டவணை. […]
ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017

ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மினியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துகொண்டனர். முன்னதாக, 31 ஆம் தேதி வெள்ளியன்று மாலை, வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் […]
ஜெகத்காரணி

அகம் குளிர்ந்திடவே “ஜெகத்காரணி” எனும் தெய்வீக ஆடற் கதை, அழகுறு சக்தி வடிவங்களாய் , ‘நிருத்திய கலாசேக்ஷ்தினரால்’ சித்தரிக்கப்பட்டு, 2017 ஆனி மாதம் 17ஆம் நாள் சனிக்கிழமையன்று, வண்ணமுற வழங்கப்பட்டது. மினசோட்டாவில் அமைந்திருக்கும் மகிமைமிகு இந்து ஆலயத்தில், ‘நவ சந்தி’ எனும் மாபெரும் ஹோமம் நிகழ்ந்து , 11ஆவது வருட விழாவாகிக் கனிந்திடவே, ஜெகம் புகழுறு “ஜெகத்காரணி”யின் அருட்பிரசாதமாய், இக்கலை நிகழ்ச்சி, இனிதாய் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடற்கதையினை வடிவமைத்து நெறிப்படுத்தியவர் , “நிருத்திய கலாசேஷ்திர […]
ஃபெட்னா பேரவை விழா – தயாராகும் மின்னசோட்டா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்த ஆண்டு மின்னசோட்டாவில் மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினாய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் […]
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 2

(பாகம் 1) கேள்வி (சிலம்பரசன்): உங்களுக்குப் பல கருவிகள் வாசிக்கத் தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா? சிலம்பரசன்: சொல்கட்டு எடுத்து கொண்டால், லயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கருவிகளுக்கும் “தா தீ தம் நம் தகிட” போன்று சொல்கட்டுகள் அமைந்திருக்கும். ட்ரம்ஸ் போன்ற கருவிகள் மேற்கத்தியக் கருவிகள். அதன் வாசிப்பு முறையே வேறு. அதற்கும் வாத்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ட்ரம்ஸ் கருவிக்கு வெஸ்டர்ன் நோட்ஸ், நான் பயன்படுத்துவது […]
23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)

ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது. இது மிசிசிப்பி […]
கர்நாடக இசை நிகழ்ச்சி

மினசோட்டா மாநிலத்தின் மேப்பிள்க்ரோவ் நகரில் அமைந்துள்ள ஹிந்து தேவாலயத்தில், ஜூன் மாதம் 10ஆம் திகதி கர்நாடக இசைக்கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. இதில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சங்கரன் நம்பூதிரி மற்றும் வயலின் வித்வான் பகல ஜெயப்பிரகாஷ், புல்லாங்குழல் வித்வான் கோ. நடராஜ் மற்றும் தவில் வித்வான் கணேஷன் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு: – புகைப்படம்: இராஜேஷ் கோவிந்தராஜன்.