நிகழ்வுகள்
மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம்

மின்னியாபொலிஸ் நகரில் உள்ள மிகப்பெரிய மால் ஒஃப் அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைப்பெற்றது. -சரவணகுமரன்
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]
அஹிம்சை தினம் 2017

மினசோட்டா மாநிலத்தில், இந்திய அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி. அஹிம்சை தினம் (NON-VIOLENCE DAY) கொண்டாடினர். சென்ற ஆண்டைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக் கொண்டாடப்பட்ட இந்த தினம், மினசோட்டா மாநிலத்தின் தலை நகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா கவர்னர் மார்க் டேட்டன் கையெழுத்திட்ட, மாநிலச் சான்றிதழ் வழங்கப்பட்டு இந்திய அசோசியேஷன் […]
தமிழ்த் தலைநகரத் தெருவிழா 2017

எமது வாசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பனிப்பூக்கள் சஞ்சிகை வட அமெரிக்கத் தமிழ்த் தலைநகராகிய டொரண்டோ மாநகரத் தமிழர் திருவிழாப் படத் தொகுப்பைத் தருகிறோம். படங்களை வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப, பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளோம் படத்தொகுப்பு – பனிப்பூக்கள் சிறப்புக் கனேடியப் படப்பிடிப்பாளர்
மினசோட்டா மாநிலச் சந்தை 2017

மாநில அந்தஸ்தைப் பெற்ற ஆண்டான 1859 துவங்கி, மினசோட்டாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெருவிழா மினசோட்டா மாநிலச் சந்தை. அடிப்படையில் மினசோட்டா வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டு வளர்ந்த மாநிலம். விளைபொருட்கள், கால்நடைகள் போன்ற வேளாண்மை அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் உருவான சந்தை இது. துவக்கத்தில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தச் சந்தை,பின்னர் மினியாபொலிஸ், செயிண்ட் பால் என இரு நகரங்கள் சந்திக்கும் ஸ்நெல்லிங் அவென்யூவில் நிரந்தரமாக நடைபெற, சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் […]
அஷ்டவிநாயகா பிரதிஷ்டை

ஹரி ஓம் வாசகர்களே! மின்னசோட்டாவில், சாஸ்கா நகரில் உள்ள சின்மயா மிஷன் நிறுவனத்தின் பெயர் சின்மய கணபதி. பெயருக்கேற்ப இந்த அமைப்பின் பிரதானக் கடவுள் கணபதி ஆகும். ஒவ்வோர் ஆண்டும் இங்கே ஹிந்துப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இங்கே பால விஹார் என்னும் குழந்தைகளுக்கான ஹிந்து கல்விக் கூடமும் இருக்கிறது. அந்தக் குழந்தைகளும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்பர். இந்தப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து, செப்டெம்பர் மாதத்தில் துவங்கும். விநாயகர்ச் சதுர்த்திக் கொண்டாட்டங்களுடன் தொடங்கி வைப்பர். இந்த ஆண்டு […]
வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)

நடுத்தெருவில் குத்தாட்டம் வேண்டுமா, கொம்பனாட்டம் வேண்டுமா, இல்லை சிலம்பாட்டம் வேண்டுமா? அல்லது பாட்டுக் கேட்டு ஆடணுமா, மெட்டுப்பாட்டு முணுமுணுக்கணுமா எல்லாமே உண்டு இந்தத் தமிழர் தெருத் திருவிழாவில். கனேடியத் தமிழ் மக்களின் தரமே வட அமெரிக்காவில் ஒரு தனி விசேடம். ஏறத்தாழ 300,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வாழும் ரொன்ரோ மாநகரில் ஸ்கார்பரோ பகுதியில் மூன்றாவது வருடமாக நடைபெறும் கனேடியப் பண்டிகை இது. இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஊர்க் கோயில் […]
இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) வருடம் தோறும் இந்தியச் சுதந்திரத் தினத்தையொட்டி மினசோட்டாவில் வசிக்கும் இந்தியர்களையும், இந்திய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மினசோட்டா ஸ்டேட் கேப்பிடல் (State Capitol) மைதானத்தில் நடத்தும் இந்தியா ஃபெஸ்ட் (India Fest) நிகழ்வு, இந்தாண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெகு விமரிசையாக நடந்தது. அன்றைய தினம் வெளிப்புற நடமாட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் அமைந்திருந்தது, இந்த நிகழ்வுக்குச் சாதகமாக இருந்தது. காலை பதினொரு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாமன்றக் கட்டிடத்தின் முன்பாக மேடை […]
பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

மினசோட்டா எங்கும் ஏரிகளாக இருப்பதால், விதவிதமான நீர் சார்ந்த விளையாட்டுகளை இங்குள்ளோர் விளையாடுவதுண்டு. அதில் வாட்டர் ஸ்கீ (Water Ski) எனப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டும் ஒன்று. பனியில் சறுக்கிச் செல்வது போல், தண்ணீரின் மேல் சறுக்கிச் செல்லும் விளையாட்டு இது. வேகமாகச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு குழுவாகப் பிடித்துக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் மேல் ஒருவராகப் பல நிலைகளில், பார்வையாளர்களைக் கவருமாறு சாகசம் புரியும் விளையாட்டு இது. மினசோட்டாவில் நீர்ச் சறுக்கு […]
மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)

முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மினசோட்டாவின் தலைமையகத்தில் 2013இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருக்கைகளை அதிகரிப்பது, பொதுமக்களுக்கான புதிய கலந்துரையாடல் அறைகள் அமைப்பது, கழிப்பறைக் கட்டுமானங்கள், புதிய விருந்தினர் மையம் எனப் பல விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றன. இதற்காகச் சுமார் 310 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இச்சமயத்தில், கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தலைமையகம் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. […]