நிகழ்வுகள்
MNTS வழங்கும் – லக்ஷ்மண் ஸ்ருதி இசைத் திருவிழா…!

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் (MNTS) வழங்கும் – லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர்களுடன், பிரபல பின்னணிப் பாடகர்கள் இணையும் இசைத் திருவிழா…! இன்னிசையில் இணைய வாருங்கள் !! உங்கள் இருக்கையை இன்றே பதிவு செய்யுங்கள் !!!
ஸ்பைசி மசாலா சாய் – ஒரு கலக்கல் கலாட்டா

“ஸ்பைசி மசாலா சாய்” என்ற நிகழ்வைக் கேட்டதும் என்னதான் டீ ஆத்தறாங்க என பார்த்துவிட ஆர்வம் தொற்றிக் கொண்டது. சனிக்கிழமை ஆகஸ்ட் 1 மாலை 5:30 மணி U O M Rarig centerல் நிகழும் காட்சிக்கு 5 மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்த எமக்கு பெரும் வியப்பு. இந்த நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டுபெறும் வரிசை மட்டும் சாலை வரை நீண்டுகொண்டே போனது. காட்சி நேரத்திற்குச் சரியாக அனுமதிக்கப் படுவோமா என்ற ஐயம் ஒருபுறம், இந்த நிகழ்வை ரசிக்க […]
கோடை மகிழ்வுலா

ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று 2015க்கான கோடை மகிழ்வுலாவை (Summer Picnic), மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஹைலேண்ட் ஏரிப் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. ஏரிக்கரையோரம், மரக்கூடாரம், புல்வெளி மைதானம் என ரம்மியமான லொக்கேஷன் பிடித்திருந்தார்கள். சூரிய வெளிச்சத்தில், புல்வெளியின் பச்சை மின்னிக் கொண்டிருந்தது. காலை பதினொரு மணிவாக்கில் இருந்து, மினசோட்டாத் தமிழர்கள் அங்கே கூடிக் கொண்டிருந்தனர். எண்பதுகளின் இளையராஜா பாடல்களை, ஏரிக்கரைக் காற்றில் கரைய விட்டு, சங்கத்தின் நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் வந்தவர்களைச் சிறு இனிப்பு மிட்டாய் கொடுத்து […]
ஒற்றைக் கூடாரத்தில் உலகக் கலாச்சாரங்கள் (Festival of Nations)

ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதி வரை செயிண்ட் பால் ரிவர் செண்டரில், இவ்வருடத்திய பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் நடைபெற்றது. இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டிடூட் ஆஃப் மினசோட்டா என்ற அமைப்பால், வருடா வருடம் நடாத்தப்படும் இந்தக் கலாச்சாரப் பரிமாறல் திருவிழா, இந்த வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இது எண்பத்தி நான்காம் வருடம். இவ்வளவு வருட காலம், இது போல் தொடர்ந்து வேறெங்கும் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. முதலில் இதுபோல் ஒரு நிகழ்வை, எல்லா […]
வாழையிலையும் 26 வகைகளும்

“கல்யாணச் சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடல் “ஐம்பது ஆண்டுகளையும் கடந்து, இன்றும் நம்மிடையே பிரபலமாகவும் சுவை மாறாமலும் இருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் பாடலில் உணவை மையப்படுத்தி வரும் வரிகளும், காட்சிகளில் காண்பிக்கப்படும் உணவு வகைகளேயாகும். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல்உணவை உண்பது, எதற்குப் பின் எதை உண்பது என்ற வரைமுறை வகுத்து , உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம், நம்மில் பலருக்குப் […]
மினசோட்டா ஹிந்து மந்திர் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு இது கொஞ்சம் பிசியான வாரயிறுதி. ஆரம்பித்து வைத்தது, ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று மெபில் க்ரோவ் (Maplegrove) ஹிந்து மந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள். ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும், பொதுவாக அமெரிக்காவில் அனைத்துக் கடவுள்களுக்கும் அனைத்து இடங்களிலும் கோவில்கள் இருப்பதில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளை விதிவிலக்கு எனலாம். மற்ற பகுதிகளில் வெகு சொற்பமே. அந்த வகையில், மினசோட்டா இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். பெரும்பாலான கடவுள்களின் […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge)

உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துவதா? யார்தான் இப்படிச் செய்வார்கள் என்று வெப்பவலயத் தக்கிணபூமியில் பிறந்த தமிழன் யோசிக்கக் கூடும். ஆனால் எமது மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம். இந்தப் போட்டிகளும், கொண்டாட்டங்களும் உறைபனி அதிகமாக உள்ள மினசோட்டா மாநில ஏரிகளிலும், ஆறுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் நிகழ்வாகும். […]
சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்

‘சங்கமம்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ரஹ்மான் ‘சிந்ததசைசரில்’ நாட்டுப்புற மெட்டில் இசையமைத்த படம் நினைவுக்கு வருகிறதோ அல்லது, அந்தப் படத்தை ஒரே மாதத்தில் டி.வி.யில் போட்டது நினைவுக்கு வருகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் மினசோட்டாத் தமிழர்களுக்கு இனி நினைவுக்கு வருவது – இங்குள்ள தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் ‘சங்கமம்’ நிகழ்வாகத்தான் இருக்கும். மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மினசோட்டா வாழ் தமிழர்கள் கூடிக் கொண்டாடும் திருவிழா தான் […]
பொய்க்கால் குதிரை ஆட்டம்

கடந்த வருடம் அலுவலகப் பணி காரணமாக தமிழகத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது. அமெரிக்காவிலிருக்கும் எங்கள் கணிப்பொறிக் குழுவின் தலைவரிடம் பேசிப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய, மல்லிகைக்குப் பெயர் பெற்ற, தூங்கா நகர் என்று புகழ் பெற்ற, தமிழிற்குச் சங்கம் வைத்து வளர்த்த, நான் பிறந்த (இது முக்கியம்) பெருமைமிகு ஊரான மதுரையில் இருந்து பணி செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். தினமும் கிடைத்த காலை நேர வேளையில் ஏதேனும் ஒரு தமிழர் கலையை நமது ஊரிலேயே பயின்றால் […]
சங்கீதமே என் பிராண வாயு – திருமதி. நிர்மலா ராஜசேகர் பேட்டி

கர்நாடக சங்கீத சூப்பர் ஸ்டார் திரு. பால முரளி கிருஷ்ணாவின் கையால் சங்கீத விபன்ஷி என்ற விருது பெற்றவர். எம். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் கையால் தொடங்கி வைக்கப்பட்ட, கல்லூரிக் கால கர்நாடக சங்கீத அமைப்பு ஒன்றின் தொடக்க கால உறுப்பினர், திரையிசை மற்றும் கர்நாடக இசையில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் பல சங்கீத மாமேதைகளுடன் நட்புக் கொண்டுள்ள இனிய தோழி, திருமதி. கற்பகம் சுவாமிநாதன், திரு. டி.ஆர். சுப்பிரமணியம், வீணை காயத்ரியின் தாயார் திருமதி. கமலா […]