திரைப்படம்
ரெமோ

ரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]
கபாலி திரைப்படத் திறனாய்வு

ஜுலை 21, 2016 – புலி வருது புலி வருது கதை போல ஏமாற்றாமல் ஒரு வழியாக மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் படம் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாள். அப்படி ஒரு நாளில் தான் அடியேனுக்கும் மினசோட்டா (MINNESOTA) மாநிலத்தில் ரோஸ்மௌன்ட் (ROSEMOUNT) நகரத்தில் உள்ள கார்மைக் (Carmike) திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. படம் பார்த்ததோடு […]
கபாலி கபளீகரம் – திரையிலும், திரைக்கு அப்பாலும்

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் “கபாலி” திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்றவர்களின் பதிலாக இருக்கிறது. அதே சமயம், எவ்வித ரஜினிமேனியாவிலும் தாக்குப்படாமல், படம் பார்க்கச் சென்றவர்களுக்கு, படத்தின் சில அம்சங்கள் பிடித்திருக்கின்றன. இது தவிர, பலவித அரசியல் காரணங்களுக்காகச் சிலருக்குப் படம் பிடித்திருக்கிறது. சிலருக்குப் படம் பிடிக்கவில்லை. எவ்வித அரசியலுக்குள்ளும் நுழையாமல், ஒரு சினிமாவாகக் கபாலி எப்படியிருக்கிறது? தமிழ்த் திரைப்படங்களில், உலகளாவிய அளவில் இந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைக் […]
கபாலி ஃபீவர்

ரஜினி – ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் என்று ஒரு புதிய கூட்டணி உருவான போது ரசிகர்களுக்கு எழும்பிய காய்ச்சல் இது. படத்தைப் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகும் போதெல்லாம், இன்னும் பலருக்கு பரவத் தொடங்கியது. முதல் டீசர் வெளியான நேரத்தில் ‘நெருப்புடா‘ என்று கொதித்தது, தற்போது பாடல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாகக் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லிங்கா சர்ச்சைகளுக்குப் பிறகு, ரஜினி தாணுவின் தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து, இயக்குனராக ரஞ்சித்தைத் […]
தீபன் – துரத்தும் துயரம்

சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற ஃபிரெஞ்ச் திரைப்படமான “தீபன்“, மினியாபோலிஸ் அப்டவுன் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ஃபிரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் – ஃபிரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத். — நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது […]
திரைப்படத் திறனாய்வு – 24

சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும். படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற […]
கணிதன் இயக்குனர் T.N. சந்தோஷ் – நேர்முகம்

கேள்வி: உங்கள் முதல் படம் கணிதன், எந்த வகையைச் சேர்ந்தது. ? படத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: ஒரு ஹீரோ ஒரு வில்லன். இரண்டு பேரும் பெரிய புத்திசாலிகள். அவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் கணிதன். இதுல அதர்வா ரிபோர்ட்டரா நடிச்சிருக்கார். ஒரு ரிபோர்ட்டர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் கதை. எந்த வகைன்னு சொலனும்னா, இது சோசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம். கேள்வி: இந்தப் படத்துல நீங்க திரைக்கதையும் எழுதியிருக்கீங்க, டைரக்டும் செய்திருக்கீங்க. அந்த […]
பாபநாசம்

புத்திசாலித்தனம் ஒவ்வொரு நிமிடமும் இழையோடி, முழுவதுமாய்ப் பின்னிப் பிணைந்து, இணைந்து நிற்கும் கதை, அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று இருக்கையின் நுனிக்கு இழுத்துச் செல்லும் திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இயற்கையும், முதிர்ச்சியும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தெளிவாய்க் காட்டும் நடிப்பு, தேவையான அளவு உணர்ச்சிப் பிழம்புகளை வெளிப்படுத்தும் அழகான உரையாடல்கள், நெல்லைத் தமிழை மண்மணம் மாறாமல் வெளிப்படுத்தும் சற்றும் மிகைப்படுத்தலில்லாத வசனங்கள், இப்படிப் பல உயர்வான, போற்றுதலுக்குரிய விஷயங்களைக் கொண்ட வெற்றித் திரைப்படம் பாபநாசம். மலையாளத்திலிருந்து இறக்குமதி […]
உத்தம வில்லன்

ஒரு ரசிகனின் பார்வை ”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடலை அறியாத தமிழர்களே கிடையாது என்று சொல்லிவிடலாம். அந்தப் பாடல் காட்சியில் நடித்த குழந்தையை அறியாத தமிழ்த் திரைப்பட – ஏன் இந்தியத் திரைப்பட ரசிகர்களே இல்லை என்றும் கூறிவிடலாம். குறுகுறுத்த கண்களுடனும், துடிப்பான முகபாவங்களுடனும், வெடுக்கான வசனம் பேசும் தன்மையுடனும் “களத்தூர் கண்ணம்மா”வில் களம் புகுந்து, ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படத் துறையில் முடிசூடா மன்னனாய்த் திகழும் நடிகர் கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. நடிக்காத […]
என்னை அறிந்தால்

மாசி 2015 இல் வெளிவந்து, இன்றுவரை உலகெங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை திரையில் பார்த்து இரசித்த எனது சுய அனுபவத்தை, இங்கு பரிமாறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். வழமைபோல இங்கும் திரையின் கதையை விவரிக்காமல் அதே நேரத்தில் திரைப்படத்தில் உள்ள குறை நிறைகளை எந்தவித பாரபட்சம் இல்லாமல் எனது சுய கருத்தை, குறிப்பாக இரசித்த காட்சிகளை, இங்கே சுருக்கமாக கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையில் பங்கு பெறும் […]