\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிங்கறால் பொரித்த சோறு

வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

தேவையானவை:

1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika)

1 – 2 கரண்டி கறித் தூள்

2 கோப்பை –  வெள்ளை அரிசி

1 பச்சை மிளகாய்

5-8 சிறு வெங்காயம்

1 சிறிய கேரட்

1 பிடி பச்சை வெங்காயத்தண்டு (spring onion)

2 முட்டைகள்

1 ஒரு பெரிய சிங்க இறால் (large Lobster) அல்லது 3 மூன்று சிறிய சிங்க இறால் வால் (Rock lobster tail) பாகங்கள்

½ தேக்கரண்டி கரண்டி சீரகம்

¼ தேக்கரண்டி கடுகு (விரும்பினால் சேர்க்கலாம்)

½ தேக்கரண்டி உடன் குத்தி எடுத்துக் கொண்ட மிளகு

1 கிளை கறிவேப்பிலை

சமையல் எண்ணெய் – நல்லெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் பாவிக்கலாம்

செய்முறை

பொதுவாக இந்தத் தயாரிப்பு இலகுவானது. ஆயினும் சிலவற்றைத் தனித்தனியே சமைத்து இறுதியில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே இந்தச் சமையல் மூன்று படிமுறைகளைக் கொண்டது

  • சோறு சமைத்தல்
  • சிங்கறால் அவித்துக் கோது அகற்றல்
  • பொரித்த சோறு தயாரித்தல்

சோறு சமைத்தல்

அரிசியை, குளிர் நீரில் அலசி, சிறிதளவு உப்பு, ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து, ¾ பாகம் பதமாக வரும் வரை அவித்து தனியே வைத்துக் கொள்ளவும்.

விளக்கம் :-சோற்றை நாம் முழுதாக அவித்துக் கொள்ளாததன் காரணம்  இறுதியில் யாவற்றையும் சேர்த்து சமைக்கும் போது, அதிகமாக சோறு வெந்து போகாமல் இருக்கவே.

சிங்கறால் அவித்துக் கோது அகற்றல்

இது வழக்கமாகத் தமிழ் கரையோர நண்டு சமைப்பதிலிருந்து சற்று வித்தியாசமானது. சிங்கறால் நண்டு போன்ற மிகவும் சுவையான உணவு. ஆயினும் அதிகம் அவித்தால் உருசியற்றதாகவும் மாறலாம்.

சிங்கறால் வர்க்கங்கள்

வட அமெரிக்காவில் சிங்கறால் பொதுவாக இரு வகையில் கிடைக்கின்றன. முழுமையான இறால் பொதுவாக மெயின் (Maine) , மஸச்சூசெட்ஸ் (Massachusetts) போன்ற மாநிலங்களிலிருந்து பெறப்படுகின்றன. வட குளிர்ப்பிரதேச சிங்கறால்கள் அளவில் பெரியவை.

பாறையடிச் சிங்க இறால்கள் உருவத்தில் சிறியவை ஆயினும் சுவையில் சிறப்பானவை அத்திலாந்திக், பசிபிக் சமுத்திரக் கடல்களில் அதிகம் தென்படும். இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் சிங்க இறால்கள் சுவை இன்னும் விசேடமானது.

குறிப்பு :-முதல் முறை சமைப்பவர்கள் உள்ளூர் கடைகளில்  சிங்கறால் வால்கள் வாங்கிக் கொள்ளலாம் (Lobster tails).

சிங்க இறால் சுவையைப் பேண அவற்றை நீராவியில் அவித்துக் கொள்ளலாம். சிங்க இறால்கள் செம்புச் சிவப்பு, கரு நீலப் பாசிப் பச்சை என அவை வாழும் சூழலிற்கு ஏற்ப நிறம் கொண்டிருப்பன. ஆயினும் நாம் நீராவியில் அவித்து எடுக்கும் போது, நண்டு, பெரும் இறால்கள் போன்று அவற்றின் கோது இளம் சிவப்பு, பிரகாசமான செம்மஞ்சள் நிறமாக மாறும்.

சிறப்பான பலனிற்கு, சிங்கறால்களைக் குளிர்ந்த நீரில் சில நிமிடங்கள் வைத்து,  பின்னர் நீராவியில் அவிக்கலாம்.

5-7 அவுன்ஸ் சிங்க இறால் வால்கள் சுமார் 7 – 10 நிமிடங்களில் நீராவியில் அவிந்து .கோது செம்மஞ்சளாக மாறிவிடும். கோது அகற்ற சில யுக்திகளைக் கையாளலாம். அவிந்த இறாலை வெளியில் எடுத்து, சிறிய கத்தி, அல்லது கத்தரிக்கோலினால் வால் பகுதியை நறுக்கி அகற்றலாம். அடுத்து கத்தரிக்கோல் கொண்டு கோதின் மேற்பகுதியை அதன் நீளப் பக்கமாக நடுவில் கத்தரித்து கோதைப் பிளந்து கொள்ளலாம். அடுத்து, கோதை இரண்டு கைப் பெருவிரலால்  பிரித்து, விரல்களால் அல்லது முள்ளுக் கரண்டியினால் சுவையான சதைப் பாகத்தை ஒரு தட்டில் சேகரிக்கலாம்.

அடுத்து சிங்கறால் துண்டுகளைச் சமமான சிறு பாகங்களாக அரிந்து கொள்ளலாம்.

பொரித்த சோறு தயாரித்தல்

அகன்ற பாத்திரத்தில், அல்லது வாணலியில் சீரகம், கடுகு, பகுதி கறிவேப்பிலையை 1- 2 நிமிடங்கள் தாளிக்கவும். அடுத்து

நல்லெண்ணய் அல்லது சமையல் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், மிளகாய்களை, மஞ்சள் தூவி நன்றாகத் தாளிக்கவும். அடுத்து முட்டைகளை உடைத்து, ¼ தேக்கரண்டி உப்பு, மற்றும் குத்திய மிளகு சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

முட்டை பொரிந்து வந்ததும்,  நீளமாக அரிந்து எடுத்துக் கொண்ட கேரட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். அடுத்து சிங்கறால் துண்டுகள், பப்பிரிக்கா, மற்றும் கறித் தூள் சேர்த்து ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.

அடுத்து, சோற்றை சேர்த்து அத்துடன்  அரிந்து எடுத்த வெங்காயத்தண்டு, தேவையானால் சிறிது நல்லெண்ணெய், உப்பு, எஞ்சிய கறிவேப்பிலை சேர்த்துப் பிரட்டி எடுக்கவும். பின்னர் இதனை மூடியால் மூடி, குறைந்த வெப்பத்தில்  இன்னும் 10 நிமிடங்கள் வரை விட்டு இறக்கிப் பரிமாறலாம்.

தொகுப்பு – யோகி

Tags: , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. andrew says:

    I am intrigued by this receipe, I was born and and raised in the eastern province. I never had any lobster there. Only think they said, a singa raal is a jumbo prawn. the real one gets exported I assume.
    nevertheless it is a great recipe, infusing an exotic expensive item into our cuisine. well done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad