\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)

வட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா? அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் தங்க மஞ்சள் நிற மேப்பிள் இரசமும் ஆகும்.

இந்தச் சுவையான மேப்பிள் கிடைப்பது வட அமெரிக்காவில், வடகிழக்கு முனையில் வளரும் அழகிய சர்க்கரை மேப்பிள் மரங்களில் மாத்திரமே. சரி இனி எவ்வாறு ஐரோப்பிய மோர் பான் கேக் சமைக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தோசைக்கல்லு அல்லது கிரிடில் சமையல் தட்டு

மோர் பான் கேக் செய்யும் பொழுது பக்குவமாக உலர், ஈர மூலப்பொருட்களைப்  ingredients சேர்த்துக் கொள்வது திடகாத்திரமான வகையில் இந்த இனிய ஆப்ப வகையைப் படைத்திட உதவும்

உலர் பொருட்கள் (dry ingredients)

2 கோப்பை கோதுமை மா (all purpose flour)

3 தேக்கரண்டி சீனி

1 தேக்கரண்டி – அகல் அடுப்பு பொங்கும் மா – (Baking powder)

½ தேக்கரண்டி – சமையல் சோடா – (Baking soda)

1 தேக்கரண்டி உப்பு

ஈரப் பொருட்கள் – (wet ingredients)

2 பெரிய முட்டைகள்

2 கோப்பை மோர் ( தண்ணி விட்ட கட்டித்தயிர்)

4 மேசைக்கரண்டி உப்பில்லா வெண்ணெய்

செய்முறை

  • கிரிடில் அல்லது தோசைக்கல்லை ஏறத்தாழ மிதமானச் சூட்டில் வைத்து 350 F  கொண்டு வரவும்
  • உப்பைத் தவிர்த்த உலர் பொருட்களை ஒன்று சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • முட்டைகளை அடித்து, மோர் சேர்த்து, அடுத்து வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
  • அடுத்து மெது மெதுவாக சிறிது சிறிதாக உலர் கலவையை ஈரக் கலவையுடன் பக்குவமாகக் கலந்து எடுக்கவும். பிரதானமாகக் கோதுமை மா குமிழிகள் இல்லாது ஈரப் பொருட்களுடன் கலந்து குழைந்து வரும் வரை பக்குவமாகச் செய்யவும்
  • இறுதியில் உப்பு சேர்க்கவும்.
  • தற்போது பான் கேக் ஆப்ப மா பதமாக அகப்பை – கரண்டியால் கிள்ளி எடுக்க இலகுவாக வந்திருக்கும்.
  • தேவைக்கல்லில் வேண்டியளவு உப்பில்லா வெண்ணெயைப் பரவிக் கொள்ளலாம்
  • அடுத்து ஒரு அகப்பை (laddel) ஆப்ப மாவை எடுத்து தோசைக் கல்லில் வார்க்கவும்
  • குமிழிகள் போய் தட்டை பான் கேக் ஆப்பம் சிறிதளவு பொங்கி வரும்
  • கலவையில் உள்ள முட்டை, சீனி 2 -3 நிமிடங்களில் பொன்னிறத்திற்கு கொண்டு வர அதை மறுபுறம் பிரட்டி இன்னும் 2 நிமிடங்களில் எடுக்கவும்
  • அடுத்து சுடச் சடப் பொங்கி வந்த பஞ்சு மெத்தைப் பான் கேக் மீது மேப்பிள் இரசம், வேண்டினால் சற்று வெண்ணெய் சேர்த்துப் பரிமாறலாம்.

தொகுப்பு – யோகி

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad