\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள்


2019 ஆண்டின் மினசோட்டா மாநிலத்தின் தமிழ்த் தேனீக்கான போட்டிகள் மார்ச் மாதம் 17ஆம் தேதி ஞாயிறன்று மினியாபொலிஸ் நார்த் ரீஜினல் நூலகத்தில் நடைபெற்றன. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறாம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என மொத்தம் மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. சிறுவயது மாணவர்கள் பெரும் திரளாக இப்போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பாகத் தங்கள் தமிழ்த் திறனை வெளிக்காட்டினர்.

ஒவ்வொரு பிரிவுகளிலும் பல சுற்றுகள் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகள் அறிவிக்கப்பட்டனர். கடுமையான போட்டி இருந்ததால், சில பரிசுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வென்று பங்கிட்டனர். இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு ஊக்கமளித்துப் பயிற்சியளித்த பெற்றோர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad