\n"; } ?>
Top Ad
banner ad

முத்துகள் மூன்று

அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு.

குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள்.

“புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ …”

“இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிகளுக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour. 

 

எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி -> நம்பிக்கை -> மக்கள் ஆதரவு -> துரோகம் -> சூழ்ச்சி -> வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்.

 

இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.

 

நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல் மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்”

 

  • மனநல மருத்துவர் ஷாலினியின் முகநூல் பதிவு , செப்டம்பர் 28, 2025.

******

“பேசாம நீ..”

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க்கில் மிகவும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் டெவலப்பராக அறியப்பட்ட நான், டொனால்ட் ஜே. டிரம்ப், இந்த ஐக்கிய நாடுகள் வளாகத்தை புனரமைக்கவும் மறுகட்டுமானம் செய்யவும் விடப்பட்ட ஏலத்தில் பங்கெடுத்தேன்.  

அப்போது “நான் 500 மில்லியன் டாலர்களுக்கு எல்லாவற்றையும் மறுகட்டுமானம் செய்து தருகிறேன். அது அழகாக இருக்கும். நான் உங்களுக்கு பளிங்குத் தரைகளைத் தருவேன், ஆனால் அவர்கள் (மற்ற கட்டுமான போட்டியாளர்கள்) உங்களுக்கு டெராஸோ தரைகளைத் தருவார்கள். நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தருவேன். உங்களுக்கு மஹோகனி மரச் சுவர்கள் கிடைக்கும், ஆனால் அவர்கள் உங்களுக்கு பிளாஸ்டிக் சுவர்களைத் தருவார்கள்.” என்றேன்.

ஆனால் (ஐ.நா) வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு உண்மையில், விலையுயர்ந்த, தரமற்ற கட்டடம் தான் கிடைத்தது. அவர்களுக்கு (ஐ.நா) கட்டுமானம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதையும், அவர்களின் கட்டுமானக் கருத்துக்கள் முற்றிலும் தவறாக இருந்தன என்பதையும் நான் உணர்ந்தேன்.

செப்டம்பர் 23, 2025 – உலக நாட்டுத் தலைவர்கள் பலர் கூடியிருந்த  ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பேசியதன் ஒரு பகுதி.

*******

நாம ஒன்னு கேட்டா ..

நான் நினைக்கிறேன் இது குடியரசுத் தலைவரின் முடிவு. குடியரசுத் தலைவர் ஒரு மாஸ்டர் கட்டிடக் கலைஞர். மற்றும் நான் பல ஆண்டுகளாக கிளாசிக்கல் அமெரிக்கன் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தின் குழுவில் இருந்தேன். நான் முழுமையாக குடியரசுத் தலைவர் இங்கு ‘பால் ரூம்’ அறை கட்டுவதை ஆதரிக்கிறேன். ஒருவேளை கிழக்கு பிரிவின் சில பகுதிகள், உங்களுக்கு தெரியும், ஆஸ்பெஸ்டாஸாக இருக்கலாம், பூசணம் (mold) இருக்கலாம்; வடிவமைப்புக்கு பொருந்தாமல் இருக்கலாம். இதைச் செய்யும் கிளாசிக்கல் கட்டிடக்கலை நிறுவனம். இது ஒரு அற்புதமான கட்டமைப்பு உருவாகி வருகிறது, என் அலுவலகத்திலிருந்து இதைப் பார்க்கலாம்.. இடிப்பு வேலைகளையும், ஏற்கனவே தொடங்கிய கட்டுமானத்தையும் பார்க்கிறேன், இது அதிரலை (warp) வேகத்தில் நகர்கிறது.

– அக்டோபர் 26, 2025 – NBCயின் Meet the press நிகழ்ச்சியில் கிறிஸ்டன் ‘ஜூலை மாதம் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் கட்டப்படும் புதிய ‘பால் ரூம்’ கட்டுமானம், கிழக்கு பகுதி கட்டிடத்தை சேதப்படுத்தாது என்று சொல்லியிருந்த நிலையில், இப்போது அந்தப் பகுதி இடிக்கப்படுவதை ஏன் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு, கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் சொன்ன பதில். 

*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad