\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தைப் பொங்கல்

தைப் பொங்கல்

  • தைப் பொங்கல் தமிழரின் திருநாள்.
  • இது தமிழ் நன்றி நவிலல் நாள்.
  • அறுவடை தந்த சூரியனிற்காகப் பொங்கப்படும்
  • தைப் பொங்கல் ஆனது தை மாதம் முதலாம் திகதியில் கொண்டாடப்படும்.
  • அக்கா முற்றத்தில் கோலம் போடுவார்.
  • அண்ணா தலை வாழையிலை விரிப்பார்
  • அப்பா நிறைகுடம் வைப்பார்.
  • தேங்காய், மா இலைகள், பூக்கள் உடன் அமைந்த நிறைகுடம் கும்பம் எனப்படும்
  • அம்மா குத்து விளக்கை ஏற்றுவார்.
  • அண்ணா தோரணம் கட்டுவார்
  • அக்கா வெற்றிலை, பாக்கு, கரும்பு, பழங்களைப் படைப்பார்.
  • அப்பா அடுப்பில் பானையை வைப்பார்.
  • அண்ணா அடுப்பின் உள் விறகு வைப்பார்
  • அப்பா அடுப்பில் நெருப்பை மூட்டுவார்.
  • அம்மா பச்சையரிசி, பால், பனஞ் சர்க்கரை, பல்வித பண்டங்களுடன் பொங்கல் செய்வார்
  • பானையில் பால் பொங்கும்.
  • தம்பி, தங்கை பட்டாசு வெடிகள், பூந்திரி போட்டு விளையாடுவார்கள்
  • அம்மா சூரியனுக்கு இனிய பொங்கலும், பழங்களும், பலகாரம்களும் படைப்பார்
  • தங்கையும் , தம்பியும் வணங்கித் தேவாரம் பாடுவர்.
  • அனைவரும் பொங்கல், பலகாரம், பழம் உண்டு மகிழ்வோம்.
  • தைப்பொங்கலை அடுத்து வரும் தினம் மாட்டுப்பொங்கல் ஆகும்

 

மேலே வாசித்ததை வைத்து கீழே பதில் தாருங்கள்

 

  1. தைப் பொங்கல் யாரின் கொண்டாட்டம்?
  2. தைப்பொங்கல் எப்போது வரும்?
  3. தைப்பொங்கல் கொண்டாடப் படுவது ஏன்?
  4. பொங்கல் செய்ய உபயோகிக்கும் பண்டங்கள் எவை?
  5. பட்டாசுகள் எப்போது வெடிக்க வைப்போம்?
  6. நிறைகுடத்தை யார் வைப்பார்?
  7. தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் எது?

 

நாம் அறிந்த சொற்கள்

  • தை
  • சூரியன்
  • பச்சை அரிசி
  • கரும்பு
  • பாக்கு
  • வெற்றிலை
  • பானை
  • அடுப்பு
  • விறகு
  • பனஞ் சக்கரை
  • பொங்கல்
  • கோலம்
  • நிறைகுடம்
  • மா இலை
  • தோரணம்

 

தமிழ் பழமொழி

 

நிறைகுடம் தளம்பாது

 

விளக்கம்: நீர் நிரம்பிய குடம் ஆனது சரிந்து விழாமல் நிலைத்திருக்கும். இதே போல் கற்றவர் மனத்திடமானவர்.

 

சிந்தனை :எனவே நாம் கல்லாதவர், விவரம்  தெரியாத சிலர் பயனற்ற பேச்சில் தம் பொழுதைப் போக்குவர் என்றும் கூறலாம்.

 

குறிப்பு :

தைப் பொங்கல் கொண்டாடப்படும் தமிழ் தை மாதம் முதலாம் திகதியானது ஆங்கில மாதம் சனவரி 13, 14 திகதிகளில் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad