\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினியாபொலிஸில் ஒரு காதல் கதை

 

    ‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி.!!! இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72  வைக்கவா..? ரொம்பக் குளுருது டா.” 

“நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக்

“வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.”

“ஹீட்டரையும், போர்வையும்  பயன்படுத்திக் குளிர் போக்க என்னை ஏன் கல்யாணம் செய்தாய் கண்மணி?” என்றவன் ப்ரியாவை இழுத்து  கட்டிலில் தள்ளி  அவள் பாதி உடல் மேல் படர்ந்தான்

தெரியாம பண்ணிட்டேன்டா சாமி.. அதுக்காக என்ன இப்படி தினமும்  துவைக்காத..!!” என சிணுங்கலாய்ச் சொல்லிக்கொண்டே அவன் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டாள். 

மிருதுவான கருங்கூந்தல் மெத்தையில் படர்ந்திருக்க, அதன் மேல் அவளின் மஞ்சள் நிற முகம், ப்ளூ பெர்ரி கண்களும், ஆரஞ்சு உதடுகளும் பொருத்திய பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் போல இருந்தது. பேசும் பட்டர் ஸ்காட்ச். “உன் குளிருக்கு என்னை கொளுத்து  கண்மணி” என்ற கார்த்திக், லேசான பூனை மயிர் தட்டுப்படும் அவள் மேல் உதட்டை ருசி பார்த்து, அவளின் சுத்தமான பற்களை தன் நாவினால் எண்ணத் தொடங்கினான். மூச்சு சூட்டில் உருகிய பட்டர் ஸ்காட்ச் தன் வாய்மலர் திறந்து வழிவிட, இருவரின் நாக்குகள் கலவி கொள்ளத் தொடங்கிய மூன்றாவது நிமிடம், மூச்சு விடும் இடைவேளையில் பிரியா கேட்டாள், “ஏன்டா என்ன கல்யாணம் பண்ணி மூணாறு, கொடைக்கானல் னு எங்காவது ஹனிமூன் கூட்டிட்டு போகாம நேரா இங்க குடும்பம் நடத்த கூட்டிட்டு வந்துட்ட.?” தன் வலது கைக்கும் உடலுக்கும் உள்ள இடைவெளியில் கச்சிதமாய் பொருந்தி விட்ட, தன் மனைவியை இன்னும் தன் உடலோடு நெருக்கிக்கொண்டே சொன்னான், “கண்மணி நாம எங்க வந்துருக்கோம் பாரு, இது மினியாபொலிஸ். இங்க வருஷம் முழுக்க குளிரும். நாம இப்படி ஒருத்தர ஒருத்தர் சூடாக்கி குளிர் காயலாம்.” 

“ச்சீ.. ஹனிமூன்னாலே அது மட்டும்  தானா.? நீ, உன் ஆபீஸ் டென்ஷன் இல்லாம., நான், எங்கேயோ தூரத்துல தனியா இருக்கோமே என்ற கவலை இல்லாம, பேசி பழகி, ஒவ்வொருத்தரோட விருப்பு, வெறுப்புலாம் என்னென்னன்னு தெரிஞ்சிக்க நமக்கு தனியா கிடைக்குற நேரம் அது தானே.!! அதெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன். ப்ச்”.., என பிதுக்கிய அவளின் கீழுதட்டுக்கு ஒரு முத்தம் குடுத்தான். 

“அவ்ளோதான, இனிமே நான் வீட்ல ஆபீஸ் பத்தி பேச மாட்டேன். “

“சரி இப்போ சொல்லு, உனக்கு என்னெல்லாம் ஆசை, எதெல்லாம்  பிடிக்கும்..? “

“அப்படி கேளு .. ம்ம்ம்ம்ம்தியேட்டர்க்கு போய் பிரெண்ட்ஸோட சினிமா பாக்கறது பிடிக்கும், பீச்ல  மிளகா  பஜ்ஜி சாப்பிடுறது பிடிக்கும்” என விரல் விட்டு எண்ணத் தொடங்கிய  ப்ரியாவை இடைமறித்தான்

“பாப்பா ப்ளீஸ்.., அந்த விஷயமெல்லாம் நாளைக்கு கேட்டுக்குறேன். இப்போ பெட்ரூம்ல இருக்கோம்.. அதனால, இதுல என்னலாம் பிடிக்கும், மனசுல உள்ள ஆசையெல்லாம் என்னென்னு  சொல்லு. எல்லாத்தையும் நிறைவேத்திடலாம்.. “

ஓஹோ..,  என சொல்லி சிரித்தவள்,  அவன் கன்னத்தை இரு கைகளாலும் கிள்ளிக்கொண்டே சொன்னாள், “என் ஆசை புருஷா, மனசு கனவு காண்கிற சுகத்தையெல்லாம் உடல் அனுபவித்து சமநிலையை ஒருபோதும்  அடைய முடியாது கண்ணா..!! உடல் வாசலை தாண்டும் நேரத்தில், மனசு ஆகாயத்தில் பறக்கும். மனசை பிடிக்க உடல் சதா ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்வு ஒரு ஒத்திசைவு இயந்திரம்.”

யு மீன் சின்க்ரோனோஸ் மோட்டார். ?”

“அதேதான் என்ஜினீயர் சார். “

“வாவ்..!! நீ இப்படிலாம் அறிவாளித்தனமா  பேசும் போது உன் மீதான என் மோகம் வானத்தையும் தாண்டி பறக்கிறதடி, என் செல்ல பூனைக்குட்டி” , என கூறிக்கொண்டே அவள் உடை தளர்த்தி இடை புகுந்து  இயங்கியதில், உடல் சுரந்த தேனை இருவரும் கனவில் கண்டனர். வேகமான மூச்சால் ஏறி இறங்கும் , கணவனின் மார்பில் தலைவைத்து அதன் முடிகளை கோதியபடி பிரியா கேட்டாள், “எனக்கு இப்போ ஒரு ஆசை தோணுது, சொன்னா நிறைவேத்துவியா..?” 

“ஒரு பத்து நிமிஷம் ஆகட்டும்டி” என்று கண்ணடித்து சொன்ன  கார்த்திக்கை செல்லமாய் அடித்து.. “ச்சீ.. அது இல்லை” என சொல்லி அவன் காதுகளில் அவள் ஆசையை  சொன்னாள் பிரியா. கார்த்திக்கின் முகம் மாறியது. “உனக்கு ஏண்டி இப்படி  ஒரு ஆசை?” என சற்று இரைந்தே கேட்டான்.

        கார்த்திக் அலுவலகம் சென்றுவிட்ட ஒரு  முற்பகலில் பிரியா ஆடையை கழட்டி, பயன்படுத்திய துணிகள் போடும் கூடையில் போட்டாள். குளியறைக்குச் செல்லும் முன் கதவு தாழிடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டாள். கடைசியாக களைந்த தன் உள்ளாடையை ஆழமாய் முகர்ந்து அதில் கார்த்திக்கின் எச்சில் வாசனை கண்டுபிடித்து, முகம் சிவந்தாள். அவனை பைத்தியமாக அடிக்கும் இந்த உடலை இளமையுடன் வைத்திரு இறைவா.., என வேண்டிக்கொண்டாள்கொரகொரவென்று அரைத்த சீனியில், சிறிது தேனும், எலுமிச்சை சாரும் கலந்து முகத்தில் தேய்த்து, இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு  ஆக்சிஜெனை சுவாசிக்கத் தந்தாள். பின்னர் கலப்பட காற்றிலிருந்து தோலினைப் பாதுகாக்கும் பொருட்டு ஐஸ் கட்டியை முகத்தில் தேய்த்து திறந்துவிட்ட தோலின் நுண்துளைகளை மூடினாள். ஒரு குழந்தையின் கன்னம் போல மென்மையாக, சுத்தமாக இருக்கும் தன் கன்னத்தைக் கடிக்க கார்த்திக் இப்போதே வர வேண்டும் என நினைத்துக் கொண்டாள்நீர்த்தொட்டியில் கதகதப்பான தண்ணீரைப் பிடித்து, அதில் ரோஜாவின் நறுமணம் கொண்ட குளியல் தைலத்தின் சில துளிகளைக் கலந்தாள். மெல்லிய இசையைக் குளியறையில் கசிய விட்டாள். பின்னர் காடுகளின் மணம் பரப்பும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து மின் விளக்கை அணைத்தாள். மின் விளக்குகள் தரும் வெளிச்சம் உயிரற்றவையாக இருக்கின்றன. காற்றில் அலைவுறும் மெழுவர்த்தியின் வெளிச்சம் அந்த அறையை அசையும் ஒரு உயிராக மாற்றுகிறது. நீர்த்தொட்டியில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டாள். நீரின் மேல் தலைதாழ்த்தி நிற்கும் மலராத தாமரை பூக்களையும், அவை இந்த பல் உள்ள குழந்தையிடம் படும் பாட்டையும் நினைத்து தன் உதட்டை கடித்துக் கொண்டாள். பின்னர் உடல் முழுவதிலும் நீர் படும்படி படுத்துக்கொண்டு, இசையில் லயித்து கண்களை மூடினாள்.  அடர்ந்த மரங்கள் கொண்ட வனத்தில், காற்றில் அசையும் அதன் கிளைகளின்  ஊடாக விட்டு விட்டு வரும் நிலவொளி விழும், மாலை நேரத்து வாசனை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் ஒரு தடாகத்தில் குளிக்கும் ஒரு இளவரசியைப் போல் இந்தத் தொட்டிக்குள் கிடந்தாள்.  

  அரைமணி நேரத்தில் குளியலை முடித்துக்கொண்டு, வெறும் துண்டை மட்டும் உடுத்தி வெளியே வந்தவள், கால்சட்டையும் டீ ஷர்ட்டும் அணிந்த 6 அடி உயரமும், கிட்டத்தட்ட 100 கிலோ எடையும் கொண்ட ஆஜானுபாகுவான கருப்பு மனிதன் தன் வீட்டின் நடுவில் நிற்பதை கண்டு “வீல் “என கத்திக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினாள். சிறிது யோசித்தவள், இவன் ஒரு வேளை கார்த்திக் சொன்ன ஆளாக இருப்பானோ? பூட்டிய வீட்டிற்குள் எப்படி உள்ள வந்தான்? ஒருவேளை  கார்த்திக் தான் அழைத்து வந்தானா..? என குழம்பினாள். அரக்கன் போன்ற அவன் தோற்றத்தை நினைத்து பார்த்து நிறையவே பீதி அடைந்தாள். அவள் பூவுடல் ஒரு முறை நடுங்கியது.  

கல்மணிக்கு மிகச் சோம்பலாக, அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். அலுவலக தோழன் டெரெக், அவனை காபி குடிக்க அழைத்து சென்றான். இருவரும் அப்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் கால்பந்தாட்ட போட்டியைப் பற்றி பேசிக்கொண்டே நடந்த போது, பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சாமுவேலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“ஹலோ சாம்.,”

“கார்த்திக், உங்கள் வீட்டில் எதோ பிரச்னை என்று நினைக்குறேன். போலீஸ் வந்திருக்கிறது, உங்கள் மனைவியிடம் எதோ விசாரிக்கிறார்கள், அவள் மிக பயந்து போய் இருப்பது போல் இருக்கிறது. உடனே வீட்டுக்கு செல்லுங்கள். நான் இப்போது தான் வீட்டுக்கு வந்தேன். எனக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை” என்று இணைப்பைத் துண்டித்தான்.

“டெரெக்”, நான் அவசரமாக வீட்டுக்குச் செல்லவேண்டும், நாளை சந்திக்கலாம் எனச் சொல்லிவிட்டு, காரை நோக்கி கிட்டத்தட்ட ஓடியவனின் மூளையில் ஆயிரம் சிந்தனைகள். என்ன ஆயிற்றோ தெரியவில்லையே, போலீஸ் வரும் அளவுக்கு என்ன ஆகியிருக்கும் . பாவம், பயந்து போயிருப்பா. எனக்கு கால் பண்ணி இருக்கலாமே. அதற்கு நேரம் கொடுக்கப்படவில்லையா, அல்லது அவ்வளவு பதட்டமா என யோசித்துக்கொண்டே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வண்டியை வீட்டை நோக்கி விரட்டினான். மூன்று காவல் அதிகாரிகளுக்கு நடுவில், மிகுந்த பீதியில் அபலையாய் நின்றிருந்தாள் பிரியா. இவனைக் கண்டவுடன் ஓடி வந்து நெஞ்சில் சாய்ந்து விம்மத்   தொடங்கினாள். “ஒண்ணும் இல்ல..! ஒண்ணும் இல்ல..!! நான் தான் வந்துட்டேன்ல..!!” என அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டு   இருக்கும்போதே, காவல் அதிகாரிகள் இவனிடம்இந்த முறை வார்னிங் மட்டும் தான், அடுத்த முறை இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என சொல்லிக் கிளம்பினார்கள்.  

அழாத பாப்பா.,!!” என அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் நுழைந்தவன் , வீட்டில் லேசான புகையும் திறந்து விடப்பட்டிருக்கும் பேட்டியோ கதவையும் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டான். இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாத ப்ரியாவைப் பார்த்து, சரி நான் போய் டீ போட்டு எடுத்துவரேன் என்று கிச்சனை நோக்கி நகர்ந்தவனை இழுத்து உட்கார வைத்தாள். “நான் உனக்கு ஈவினிங் டிபன் பண்ணிட்டு இருந்தேன். சப்பாத்தி போடும் போது வீடெல்லாம் புகை, இந்தபயர்  அலாரம் கத்த ஆரம்பிச்சது, இதுவரைக்கும் இது கத்தினதே இல்லை, எனக்கு என்ன பண்றதுனே தெரியலை, வாசல் கதவைத் திறந்து விட்டேன், வெளியில் சென்ற புகைனால இந்த அபார்ட்மெண்ட் அலாரம் அடிக்கத் தொடங்கியது.. ஒரே சத்தம்.. நான் பயந்துட்டேன். அலாரம் அடிச்ச அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வந்து எல்லோரையும் வெளில போகச் சொல்லிட்டாங்க. எனக்குப் பதட்டத்துல இந்த போனை வேற  எங்க வச்சேன்னு தெரில, நானும் வெளியே போய்ட்டேன். நம்ம வீட்லேர்ந்து தான் புகை வந்ததுனு என்கிட்ட விசாரிச்சாங்க, நான் நடந்ததைச் சொன்னேன். அப்புறம் எல்லோரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. இது மாதிரி நடந்தா என்ன பண்ணனும்னு சொன்னாங்க, அப்போ தான் நீ வந்த.” என கண்ணீரோடு தழு தழுப்பான குரலில் சொல்லி முடித்தாள்.  

“சாதாரண விஷயம்., விடு” எனச் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டு, “இப்போ டீ எடுத்து வரேன், டின்னர்க்கு  வெளில போலாம்” என்றான்.

“இந்த வில்லியம் நான் பதட்டமா இருக்கறதப் பார்த்துட்டு, ஆறுதல் சொல்லிக்கிட்டு என பக்கத்துலயே இருந்தான். நான் இங்க புதுசா வந்திருக்கேன், எனக்கு இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாம் அப்படினு  போலீஸ் கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினான். அவனும் இல்லனா நான் அழுதே இருப்பேன்” என்ற ப்ரியாவிடம்,அவன் கூட எப்போபிரெண்ட் ஆன..?” என கிச்சனிலிருந்து கேட்டான்.

“அதச் சொல்ல மறந்துட்டேனே, ரெண்டு வாரத்துக்கு முன்னால, ஒரு நாள் நான் குளிச்சிட்டு பாத்ரூம் விட்டு வெளியே வரேன்.., இவன் நடுவீட்ல வந்து நிக்குறான். நான் திருடன் தான் வந்துட்டான்னு பயந்து கத்தி, ரூம்க்கு உள்ள ஓடிட்டேன். அத பார்த்து அவன் என்ன விட பயந்துட்டான்போல. “என் பெயர் வில்லியம்.. நான் இந்த அபார்ட்மெண்ட்ல தான் வேலை செய்யுறேன். டிஸ்போஸர் வேலை செய்யலன்னு புகார் கொடுத்தீர்கள் அல்லவா..? அதைச் சரி செய்ய தான் வந்தேன். நான் கதவைத் தட்டினேன், பதிலேதும் இல்லாததால் யாரும் இல்லை என எண்ணி கதவைத்  திறந்து வந்துவிட்டேன். உங்களை பயமுறுத்தியிருந்தால் மன்னியுங்கள், மன்னியுங்கள்..!! என பலமுறை சொல்லிவிட்டு, நான் பிறகு வருகிறேன்னு சொல்லிட்டு போய்ட்டான். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்ப வந்தான், எனக்குச் சிரிப்பு வந்திடுச்சு , நானும் சாரி சொல்லிட்டு, ஆரஞ்சு ஜீஸ் குடுத்தேன். அப்புறம் நாங்க நெறைய  கதை பேசிபிரெண்ட்ஸ் ஆயிட்டோம்” என்றாள். அவளிடம் ஒரு ஆசுவாசம் தெரிந்தது, சகஜ நிலைக்கு திரும்பி விட்டாள் ..

“சரி.. சரி.., இன்னைக்கு டின்னர் முடிச்சிட்டு, அந்த இடத்துக்கு போலாம்” என்றான். ப்ரியாவின் கண்கள் ப்ரகாசமாயின..!!        

முன்னிரவு பதினோரு மணிக்கு, “Dream girls” ஸ்ட்ரிப் கிளப் முன்பு கார்த்திக் காரை நிறுத்தி,  “பிரியா.., ஆர் யு சுயூர் அபௌட் திஸ்? உள்ள போகணுமா..? நீ முதல் தடவை உன் ஆசையை என்கிட்ட சொல்லி நிறைவேத்துவியான்னு கேட்டதால தான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். இப்போ கூட ஒண்ணும் இல்ல., உனக்கு ஓகேனா திரும்ப போய்டலாம்.” என்றான்.  

“டேய் ரொம்ப சீன் போடாத. கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை தடவை இங்க வந்திருப்ப. இப்போ என்ன நடிக்கிற..!! போய் பார்க் பண்ணிட்டு வா , நான் வெயிட் பண்றேன்.” 

மிதமான வெளிச்சம், வசீகரிக்கும் இசை ஒலிக்கும் அரங்கின் மையத்தில்  ஒரு மேடை, அதில் வழுக்கும், பளபளப்பான   இரும்பு தூண்கள். அதனை சுற்றி சுற்றி ஆடும் ஒரு இளம்பெண் தன் ஆடைகள் ஒவ்வொன்றாய் களைந்து கொண்டிருந்தாள். மேடையை சுற்றிலும் ஆண்களும் பெண்களும் அழகியின் ஆட்டத்தை மிக நெருக்கத்தில் ரசித்தார்கள். சிலர் மேடையில் டாலர்களை வீசி எறிந்தார்கள். அப்படி பணம் போடும் ரசிகர்களுக்கு அவர்களின் முகத்துக்கு மிக அருகில்  வந்து சிறப்பு தரிசனம் காட்டிக்கொண்டிருந்தாள் ஒருத்திகார்த்திக்கும், ப்ரியாவும் மேடையை விட்டு சற்று தொலைவில் உள்ள ஒரு  டேபிளில் அமர்ந்தார்கள், கார்த்திக் கிரான்பெர்ரி ஜூசும் பிரியா ஒரு சாம் ஆடம்ஸ் பீரையும் வாங்கி குடித்துக்கொண்டே ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினார்கள். அறையெங்கும் அழகிகள் நடந்துகொண்டும் பேசி சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தங்க நிறத்தில் மின்னும் கூந்தலுடன்நடுத்தர உயரம் மற்றும் கவர்ச்சியான அங்கங்களைக்  கொண்ட ஒரு வெள்ளை நிற அழகி மிக குறைவான ஆடை அணிந்து இவர்களின் அருகில் வந்தாள். கார்த்திக்கும் அவளுக்குமான பேரத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியது.

“அன்பாளனே..!! இன்னும் இளமையாக இருக்கும் இந்த இரவில்  சிறிது நேரம் மகிழ்ந்திருக்கலாம்.., என்னுடன் வருகிறாயா..?”

“கண்ணே..!! என் மகிழ்ச்சிக்கான கோப்பையில் உள்ள பானங்கள் எதுஎதுவோ..? நான் அறியலாமா?”

“அதை பருகி, ருசித்து  நீயே அறிந்து கொள்ளக்கூடாதா..? முன்கூட்டியே சொன்னால் சுவாரசியம் போய்விடும் அல்லவா..?”  

“முன்பே தெரிந்தால் ஒவ்வாமையைத் தவிர்த்துவிடலாம் என்பதால் கேட்கிறேன்., மேலும் உன் குரலின் இனிமையும், காதல் வார்த்தைகளும் என்னை இப்போதே பாதி மயக்கத்தில் தள்ளுகிறது.. அதை நிறுத்த மனம் இல்லை.,

“நீ அனுபவசாலி, இதற்கு முன் இங்கு வந்திருக்கிறாயா?”

“ஓரிரு முறை, ஆனால் உன்னை போல் ஒரு அழகிய பூவை நான் இதுவரை பார்த்ததில்லை, இன்று தான் மலர்ந்தாயா..?”

“நீ கெட்டிக்காரனும் கூட.., என் தற்காலிக காதலா, சொல்கிறேன் கேள்

நான், நீ பார்க்க மட்டுமே நடனம் புரிவேன். என் பொன்னிற அங்கங்களின் அசைவுகளை நீ கண்களால் தின்னலாம். மிச்சமிருக்கும் என் சொற்ப உடைகளையும் உனக்காக களைந்து  புது மலரான என் உடலின் நறுமணத்தை  உனக்கு நுகர தருவேன்நாம் சந்தித்த நொடியிலிருந்து பதினெட்டு முறை உன் பார்வை பதிந்த என் மென் மார்பகங்களை, உன் முகத்தில் மோதி உன் ஏக்கம் தீர்ப்பேன். உன் மடியில் அமர்ந்து, என் பின் அழகைக்கொண்டு உன்னை  எழுச்சிகொள்ள செய்வேன். உடைகளற்ற என் உடல் சட்டென்று உணர்ந்துவிடும், உன் கம்பீரத்தின் பெருமையை உன் காதுகளில் சொல்லிப் பரிகசிப்பேன். வாசனை எண்ணெய் பூசிய மிருதுவான என் கூந்தலை உன் முகத்தில் படரவிட்டு, சூடான மூச்சுடன் உன் காதில் நான் கிசுகிசுக்கும், சில நிமிடங்கள் நீ செத்து பிழைக்கலாம். “

“சாவின் விலை என்னவோ..?”

“பத்து நிமிடத்திற்கு ஐம்பது டாலர்கள், 30  நிமிடத்திற்கு 120 டாலர்கள். என்னை அதிக நேரம் காத்திருக்க வைக்காதே, இப்போதே என்னைத்  தனியாக அழைத்து செல், என் குறும்பு காதலா..!!” எனக் கொஞ்சினாள் அந்த அழகி

கார்த்திக் ப்ரியாவைத் திரும்பி பார்த்தான். இதுவரை இருவரையும் ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவள், லேசான கோபத்துடன் மேடையை நோக்கி பார்வையைத் திருப்பினாள்

“கண்ணே, இன்று இரவு முழுவதும் நான் இங்கு தான் இருப்பேன், வெகு தூரம் சென்று விடாதே, விரைவில் உன்னை அழைக்கிறேன்.” எனச் சொல்லி அவளை அனுப்பிவிட்டு, “பாப்பா.., அவளை எனக்கு பிடிக்கவே இல்ல.., போக சொல்லிட்டேன், அப்புறம், இன்னொரு பியர் குடிக்கிறியா..?” எனக் கேட்டான்.

டேய், புளுகாத  அவளை பாத்தா எனக்கே மூட் வருது.. உன் மூஞ்சிக்கு அவ ரொம்ப ஓவர். சரி .. சரி,, வா வீட்டுக்கு போகலாம்..”  என பிரியா சொன்னவுடன், மெலிதாய்ச் சிரித்துக்கொண்டு உடனே கிளம்பினான். நெரிசலான டௌன்டவுன் சிக்னலைப் பொறுமையாக கார் கடந்துகொண்டிருந்தது. அமைதியாக இருந்த ப்ரியாவிடம், என்னாச்சு பாப்பா..? எனக் கேட்டான்.

“இல்லப்பா.., உன்னோட எக்ஸ் கேள்பிரெண்ட் பத்தியெல்லாம் என்கிட்டே சொல்லும்போது, அவங்க கூட இருந்தா நீ எப்படி நடந்துப்ப, என்னென்ன பேசுவ,அதெல்லாம் பாக்கணும்னு ஆர்வமா இருந்துச்சு. உன்ன இன்னொரு பொண்ணுகூட பார்த்தா இன்னும் செக்சியா இருப்ப, அதை ரசிக்கலாம் னு நினைச்சேன். ஆனா அவ கூட நீ பேசுறப்போ எனக்கு கோபம் தான் வந்தது”, எனச் சொல்லும்போதே ப்ரியாவின் கண்களில்,சில துளி கண்ணீர்

“கண்மணி, இது இப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும், நீ கேட்டியேனு கூட்டிட்டு வந்தேன். உண்மையைச் சொல்லட்டுமா, கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும்  இதெல்லாம் ஜாலியா தான் இருந்தது, ஆனா இப்போ நிலைமையே வேற. இந்த மாதிரி சிந்தனை வரும் போதெல்லாம் உன் குழந்தை முகம் என் கண் முன்னால நிக்குது பாப்பா. உடனே உன்ன தேடி ஓடி வந்துடறேன். உனக்கு எதாவது ஒண்ணுன்னா மனசு பதறிடுது” என கார்த்திக் பேசி முடிக்கும் முன்,

 “தெரியும்பாஎன்றாள் பிரியா. ஃபயர் அலாரம் அடிச்ச அன்னைக்கு நான் உன் நெஞ்சிலே சாஞ்சப்போ, உன் இதயம் அவ்ளோ வேகமா துடிச்சத கேட்டேன்.. அது, எனக்கு எதாவது ஆயிடுச்சோன்னு தானே.?.!! அந்த நிமிஷமே எனக்கு எல்லா பயமும் போய்டுச்சுப்பா..” நீ எனக்கானவன் என்ற நம்பிக்கை வந்திடுச்சு” என பேசிக்கொண்டு இருவரும் கண்கள் கலந்தார்கள். திருமணம் ஆன இந்த ஆறு மாதத்தில் இது முதல் பார்வை. கண்கள் வழி காதல் புகுந்த மறுகணம் ,உயிரை உதட்டில் குவித்து இருவரும் பரிமாறிக் கொண்டனர். முத்தத்தின் கிளர்ச்சியில் கார் ஸ்டேரிங்ன் volume control இல் விரல் பட்டு சத்தத்தைக் கூட்ட, பாடல் ஒலிக்கத் தொடங்கியது.. “காதலே.. காதலே.. தனிப்பெருந்துணையே..!! கூட வா.. கூட வா…   போதும்.. போதும்…!!!”  

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், உடலில் தொடங்கி, உள்ளத்தைக் கண்டடைந்து, காதலில் உயிர்த்திருக்கிறது.!!

                       மனோ அழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad