\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது

1990களில் ஊர்ப்புற, விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது நான் உள்ளூர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போய்ப் பார்ப்பதுண்டு. அதன் பொழுது கிழக்காசிய, பொதுவாக வியட்னாமிய, மொங் இன அடிக் கொடி, அல்லது சில சமயம் கறுப்பின விளையாட்டு வீரர்களை குறித்துக் கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் குரல் கொடுத்ததை அவதானித்திருக்கிறேன். இவ்வகையான எண்ணம், மினசோட்டா மாநில ஊர்ப்புறப் பகுதிகளிலும் பரவலாகயிருந்ததையும்  கண்டதுண்டு. 30 வருடங்களுக்குப் பின்னரும் இந்த இனத்துவேசம் மினசோட்டா பாடசாலைகளிலும் எழுச்சிபெறுவது சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும்.

அண்மையில் நியூ பிரேக் (New Prague) உயர்பள்ளியில் நடைபெற்ற இரண்டு விடயங்கள் உள்ளூர் தகவல்தாபனங்களின் தனிப்பட்ட அவதானிப்பை ஈர்த்தது. இதில் ஒன்று கூடைப்பந்து விளையாட வந்த றோபின்ஸ்டேல் கூப்பர் (Robinsdale Cooper) பள்ளிப் பெண்களை, நியூ பிரேக் மாணவர்கள் சிலர் இனத்துவேசக் கூக்குரல் இட்டு அழைத்தனர், இதைத் தவிர உள்ளூர் பனித்துடுப்பு (Ice hockey) விளையாட்டின் போதும் மீண்டும் நியூ பிரேக் மாணவர்கள் அங்கு விளையாட வந்திருந்த செயின்ட் லூயிஸ் பார்க் (St. Louis Park) மாணவர்கள் மீதும் இனத்துவேசச் கருத்துக்களை கூக்குரலிட்டு கத்தியுள்ளனர். இவை இரண்டும் பல கைத்தொலைபேசிகளிலும், கமெராக்களிலும் பதிவு செய்யப்பட்டு சமூக வலையங்களிலும் உள்ளுர் பத்திரிகைகளிலும் வெளிவந்தது.

பொதுவாக நாம், எமது மாநிலம் அமைதியான, சமரசமான இடம் என்று கூறிக்கொள்வோம். ஆயினும் இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் எமது மினசோட்டா மாநிலத்தில் இனத்துவேச மனத்துவம் தொடர்கிறதென்பதை எடுத்துக்காட்டுகிறது எனலாம். இதைப் பற்றி மினசோட்டாப் பத்திரிகை ஸ்டார் டிரிபியூன் (Star Tribune) மார்ச், 2022இல் அவலமான, அச்சந்தகுக்கிற மறை சக்திகள் மினசோட்டா பாடசாலைகளிலும், சில சமூகங்களிலும் தொடரந்து இயங்கிவருகின்றன என்று கூறியது.

இதனை ஏதோ மறை சக்திகளின் அசிங்கமான, அச்சந்தருகிற நடத்தை என்று கடந்து போய்விட முடியாது. இதை நேரடியாகவே எதிர்கொண்டு, களையப்பட வேண்டியதொன்று. இனஞ்சார்ந்த துவேஷ மற்றும் வெள்ளை ஆதிக்கத்தை விரும்புவர்கள் அமெரிக்க நாட்டின் சமூக விரோதிகளே. இவ்வகையான வன்மம் அமெரிக்க நாட்டிலும் குறிப்பாக மினசோட்டாவிலும் கடந்த 6 வருடங்களின் அதிகரித்துள்ளது. 

உலக இனங்கள் பற்றியும், வரலாற்று ரீதியாக அவை எவ்வாறு முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டன என்பது பற்றியும் எமது கல்வித்திட்டத்தில் சேர்க்கவேண்டியது அவசியம். எனினும் இவ்வகையான பொதுக்கல்வி திட்டத்தினை மண்ணாக்க மாநிலத்திலும், நாடளவிலும் ஒரு சாரார் முயன்று வருகின்றனர். இவர்கள் ஒப்பீட்டளவில் சிறிய குழுவினர்தான் என்றாலும் ஒலிபெருக்கி வைத்து வெள்ளையின வாக்காளரைத் தமது ஆழமற்ற சிந்தனைக்குத் திருப்ப முயல்கின்றனர்.

அமெரிக்கா தொடர்ந்து பன்முகச் சமூகமாகவே வளர்ந்துள்ளது. எமது சமூகம் உறுதி பெற, சமூக ஏற்றத்தாழ்வுகள், காரணிகளை பிள்ளைகளின் முன்னிலையிலும், வயதுக்கு வந்தவர்களிடையேயும் சிந்தனைகளாகவும், சம்பாசணைகளாகவும் உண்டாக்குதல் அவசியம். அடுத்து இன ஒற்றுமைக்கு எந்தப் பரிகாரங்களை உண்டாக்கலாமென சிந்திக்கவேண்டும். சமூகம் மேம்பட சம நீதி, அனைவரையும் சமூகத்தில் உட்படுத்தி அதிமுனைவுடன் அன்பு, ஆதரவு, பொறுமை, பச்சாத்தாபம் உண்டு பண்ணுதல் எமது நிகழ்காலத்திற்கு அவசியமான ஒன்றாகும். இக்கருத்துக்களைப் பிள்ளைகளிடையே வளர்க்கவேண்டியது எமது சமூகப் பணியாகும்.

அதே சமயம் எம்மைச் சுற்றி நடைபெறும் சில அரசியல் சார்ந்த கொள்கைச் சட்டங்களை எடுத்துப் பார்த்தால் அவை எவ்வாறு சமூக இணக்கத்திற்கு முட்டுக்கட்டையாகவுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மினசோட்டா மாநிலத்தின் அருகே தென் டக்கோடா (South Dakota) மாநிலத்தில் அந்த மாநில கவர்னர் கிறுஸ்டி நோம் (Christy Norm), பொது பல்கலைக்கழகங்களில் எந்த இனத்திற்கும் அசௌகரியும் தராத வகையில் பயிற்சிகள், பாடங்கள் படிப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமைத்துள்ளார. இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கு வெள்ளை இனத்தவர், வரலாற்றில் பூர்வீக வாசிகள், கறுப்பின மக்கள் மற்றைய சிறுபான்மை இனத்திற்குச் செய்த பாதக வரலாறுகளைத் தவிர்க்கச் செய்யும் நோக்குடையதாகவே காணப்படுகிறது. இதே போன்று டென்னஸி (Tennessee) மாநிலமும் 14 வகையான இனம், இனஞ்சார்ந்த வரலாற்றுக் கல்வி தனைத் தடை செய்துள்ளது. இவை அந்த மாநிலப் பாடத்திட்டத்தில் தேவையில்லை என்று டென்னஸி கூறுகிறது. இத்துடன் தரமான வரலாறு சார்ந்த புத்தகங்களையும் நூல் நிலயங்களிலிருந்து அகற்றவும் சில அமைப்புகள் முனைந்துள்ளன.

இதில் நியாயமான விடயம் என்னவென்றால் நமது நாட்டின் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் ஒரு தனிநபரின் நடத்தையில் நேர்மையான பிரதிபலிப்பு சுய வெறுப்பை ஏற்படுத்துவதைக் காட்டிலும் இன-வெறுப்பை ஏற்படுத்தாது என்பதே.

ஏதாவது ஒன்றைத் தடை செய்யும் யோசனை – குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் – அது “அசௌகரியத்தை” ஏற்படுத்தக்கூடும் என்பது அபத்தமான, சிரிப்புக்குரிய விடயம் ஆகும். கல்வியின் முழு எதிர்பார்ப்புமே இதுதான்: அதாவது கற்றுக்கொள்வது, அனுபவிப்பது, அதைப் பற்றி வாசிப்பது, கிரகிப்பது மற்றும் புதிய யோசனைகள், சூழல், கருத்தாக்கங்களுடன் பழமைவாத எண்ணங்களுக்கு சவால் விடுவது தான். சிலநேரங்களில், தெரியாதவற்றைப் படிக்கும் போது “அசௌகரியத்தை” ஏற்படுத்தினாலும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும், புதிய முன்னோக்குகளைக் கருத்தில் கொள்ளவும், எமது அறிவை விரிவுபடுத்தவும் உதவும்.

ஒரு வரலாற்ற ஆசிரியர், இனம் மற்றும் சமூக அநீதி பற்றிய விமர்சன சிந்தனையைத் தூண்டும் வகையிலும், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் பற்றிய வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையிலும் வரலாற்றை துல்லியமாகவும் நேர்மையாகவும் கற்பிப்பதே முக்கியம். அமெரிக்க நாட்டைப் பொறுத்தளவில் வெற்றிகளையும் தோல்விகளையும் மட்டுமே உள்ளடக்கிய வரலாற்றைப் பாடமாக வைப்பது முழுமையான வரலாற்று பாடம் அல்ல; அது வெறும் பக்கசார்பான பிரச்சாரத்தைக் கற்பிப்பதாகவே அமையும். இது சமூக மேம்பாட்டிற்க எவ்விதத்திலும் உதவாது..

நேர்மையான மற்றும் துல்லியமான வரலாற்று பாடத்திட்டத்தை ஆதரிக்கும் கல்வியாளர்கள் சிலர், மூடத்தனமான, போலியான, ஆழமற்ற அரசியல் அதிதீவிர இனக் கோட்பாட்டை (Critical Race Theory (CRT)) கற்பிப்பதாக தாக்கப்படுகிறார்கள். CRT என்பது பாலர் பள்ளியில் இருந்து உயர் பள்ளிக் கூடம் வரை கற்பிக்கப்படாத விடயம். மேலும் இது ஒரு பல்கலைக்கழக, குறிப்பாக சட்டவியல் படிப்பு தொடர்பான கோட்பாடு. ஆனால் இதைப் பற்றி விமர்சகர்களுக்கு தெளிவுபடுத்தும் கல்விமான்கள் முயற்சிகள் காது கேளாதோர் காதுகளில் விழுந்ததைப் போல, கவனெமெதுவும் பெறுவதில்லை. அரசியல் ஆதாயக் காரணத்தோடு, மக்களை அறியாமை எனும் இருட்டிலேயே வைத்திருக்க ஒரு சாரார் முயல, அவர்களுக்கு உண்மையான வரலாற்றைக் கற்பிக்க முயற்சிக்கும் ஆசிரியர்களைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குகிறார்கள். இது அமெரிக்காவின் பன்மைச் சமூக எதிர்காலத்தை வீழ்ச்சியடைய வைக்கும் முயற்சியாகும்.

இந்த ஆழமற்ற அரசியல்வாதிகள் தாக்கும் மற்றொரு விடயம் கல்வியாளர்கள் கற்பிக்கும் பாடத்திட்டத்தைப் பிழையாக கற்பிப்பதாகக் குற்றம் சாட்டுவதாகும். பல கஷ்டங்களுக்கு மத்தியில், நேரமெடுத்து கல்விமான்களால் போடப்படும் பாடத்திட்டம், இனக்குற்றம் சாட்டுவதை அல்லது இனவெறுப்பை ஊக்குவிக்கிறது என்கிறார்கள் அரசியல்வாதிகள். இந்த குற்றச்சாட்டு மிகவும் அபத்தமான, சிரிப்பிற்குரிய விடயமே. உண்மை நிலைப்பாடு என்னவென்றால், நம் நாட்டின் கடந்த காலத்தைப் பற்றிய உண்மையான பரிசீலனையையும், தற்போதைய நிலை பற்றிய வெளிப்படையான உரையாடலையும் ஊக்குவிக்கும் அறிவுறுத்தல், ஒருவரின் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையான பிரதிபலிப்பு சுய வெறுப்பை ஏற்படுத்துவதைக் காட்டிலும் இனவெறுப்பை ஏற்படுத்தாது.

நமது அமெரிக்கத் தேசத்தின் வரலாற்றை உண்மையாக பரிசீலிப்பது, நாடு அதன் கொள்கைகளில் எங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும், மக்களாகிய நாம் எதிர்காலத்தில் எவ்வாறு முன்னேற முடியும் என்பதையும் பிரதிபலிப்பதை ஊக்குவிக்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பை எழுதியவர்களால் சிந்தித்துச் செய்யப்பட்ட மிகவும் பரிபூரணமான ஐக்கியத்தை அடைவதற்கான தற்போதைய போராட்டத்தின் ஒரு பகுதியாகும். 

இந்த சமீபத்திய இனத்துவேசம் சம்பவங்களின் வெளிச்சத்தில், நமது பள்ளிகளிலும், நமது பாடத்திட்டத்திலும் – தெற்கு டகோட்டா, டென்னசி அல்லது இங்கே மினசோட்டாவில் இருந்தாலும் சரி – இனம் பற்றிய தலைப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை மட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சிகள் தவறான திசையில் செல்லும் ஒரு பாதையாகும். “அசௌகரியமான” பிரச்சினைகளைப் பற்றி நாம் பேசவோ அல்லது பிரதிபலிக்காவிட்டால், நமது நடத்தையை மேம்படுத்தவோ அல்லது அந்த பரிபூரண ஐக்கியத்தை அடைவதற்கு நெருக்கமாக வரவோ முடியாது.

30 ஆண்டுகள் சென்றும் இதற்குப் பரிகாரத்தை நாம் ஆரம்பித்தாகத் தெரியவில்லை. சமூக ஒற்றுமையே நாட்டின் மெம்பாட்டிற்குத் தொடர்ந்து வழிவகுக்கும். இதற்கு விடிவைத் தேடி இனஞ்சார்ந்த கல்வியினை ஊக்குவிப்போம் தொடர்வோம்.

    ஊர்க்குருவி

 

உச்சாந்துணை

  1.     When racism sullies school sports – StarTribune.com
  2.     Critical race theory – Wikipedia
  3.     SD senators OK bill shielding students from ‘discomfort’ | AP News
  4.       Tennessee House Bill No.580/ Senate Bill No. 623 CC0003.pdf (tn.gov)

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad