\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பழங்கஞ்சி

Filed in அன்றாடம், சமையல் by on November 3, 2013 1 Comment

pallamchoru_620x413கிராமப் புறங்களில்  தயாரிக்கப்படும் காலை உணவுகளில் பழஞ்சோறு முதியத் தலைமுறைகளில் முக்கியமானதொன்று. சோறு அல்லது சாதம் எனப்படும் பகல் நேர உணவுக்காக அவித்த அரிசியின் மீதியை இரவில் சிறிதளவுத் தண்ணீரை ஊற்றி உலைப்பானையில் வைக்கப்படும். இது சாதாரணச் சூழல் வெப்பநிலையில் குளிர்ச்சாதன ஒழுங்குகள் இல்லாமல் இரவு சற்றுப் புளிக்க விடப்படும்.

காலையில் சிலர் உப்பு, தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிடுவர். யாழ்ப்பாணக் கிராமப் புறங்களில் தேங்காய்ப்பால் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்துப் போட்டுச், சற்று எலுமிச்சைக்காய் புளிந்து உட்க்கொள்ளப்படும்.

தயாரிப்பு முறை

முதல்நாள் இரவு

  • 1 கோப்பைச் சோறு
  • ½  கோப்பை தண்ணீர்

விட்டு உலோகத்தினால் இல்லாத பாத்திரத்தில் மூடிவைக்கவும்.

காலையில்

  • 1 மிளகாய்
  • 1 சின்ன வேங்காயம்
  • 1 கோப்பை தேங்காய்ப்பால்
  • ½  எலுமிச்சை
  • உப்பு வேண்டியளவு

வெங்காயம், மிளகாயைச் சிறிதாக வெட்டி,தேங்காய்ப்பால் உடன் உப்புச் சேர்த்து இறுதியில் எலுமிச்சைவிட்டுப் பரிமாறிக்கொள்ளலாம்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Mrs RaniRaj says:

    பழைய சோறும், பொறிச்ச கருவாடும்;
    பழைய சோறும், பழைய மீன் குழம்பும்
    ஆகா!!இதை அடிச்சுக்க இந்த உலகில் எந்த உணவும்
    இதுவரை கண்டு பிடிக்கவில்லை..

    ராணிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad