\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?

chippikkulmuththu_620x658முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா?

சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும்.

மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் கொண்டமைந்தது சிப்பி உயிரினம். சிப்பியின் வெளிச்சுவர் கடினமாக இருப்பினும் அதன் உட்பகுதி பளிங்கு போன்று மினுக்கமுடைய பவளம் எனப்படும். பவளம் ஆங்கிலத்தில் Mother of Pearl என்று கூறப்படும். தொல்காலத்தில் பவளமானது இந்து சமுத்திரத்தைச் சார்ந்த பூர்வீகத் தமிழரின் ஆபரணங்களில் ஒன்றாகும்.

சி்ப்பியானது தனது உணவைக் கடல் அலைகளில் வரும் நுண்தாவரங்களாகிய பிளாங்டனில் இருந்து பெறும். இதற்காக இடையே தனது வெளி்ச்சுவரைச் சற்றுத் திறக்கும். இவ்வாறு திறக்கும் போது ஒரு சில மணற் குறுமணிகள் சிப்பி்க்குள் சென்று அதன் மிருதுவான சதையில் படிந்து விடும். இந்த அந்நிய மணல் சிப்பியின் சதையை அரிப்பூட்ட அதன் பரிவிளைவாக சிப்பி சுரக்கும் பவளத்திரவியம் மணலைச் சுற்றி அதன் கூரான பாகங்களை மழுப்பிவிடும். இதுதான் முத்து. முத்தானது தொடர்ந்தும் சிப்பியின் உள்ளே இருந்து பவளச்சுரப்பிகளினால் வளரந்து பெரு முத்தாக வரும்.

தமிழ் நாட்டிலும் ஈழநாட்டிலும் இராமேச்சரம், தனுக்கோடி, மன்னார், சிலாபக் கடல்களிலும் ஏறத்தாழ தமிழர் 10,000 ஆண்டுகளிற்கு மேல் முத்து அறுவடை செய்துள்ளனர். முத்து ஆழ்கடலில் நீந்திப் பொறுக்கி வருவது முத்துக் குளித்தல் என்று கூறப்படும்.

தஹீட்டித் தீவுகளிலும், பிரன்சு போலினேசியத் தீவுகளிலும், யாப்பானிய நாட்டிலும், அவுஸ்திரேலியா, மற்றைய தென் ஆசிய நாடுகளிலும் செயற்கை முத்து உருவாக்கல் பிரபலமான கடல் விவசாயம் ஆகும். இயற்கையில் சிப்பிக்குள் முத்து உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். ஆயினும் முத்து விவசாயிகள் செயற்கையாகவே சிறு உடைந்த சிப்பித்துண்டுகளை உயிருள்ள சிப்பிகளினுள் நுழைத்து ஏறத்தாழ 3 வருடங்களில் புதிய முத்தை உருவாக்குவர்.

அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஆரம்பிக்கும் மிசிசிப்பி ஆறு ஆனதும் எம நாட்டின் தென்பகுதி கடல் முகத்துவாரங்களில் இயற்கையாகவே முத்துச்சிப்பிகளை உருவாக்குகிறது. உலகில் விலையுயர்ந்த முத்துக்கள் இயற்கை முத்துக்களே, ஆயினும் செயற்கை முத்துக்கள் விவசாயம் இயற்கை முத்துக்கள் அதிகமாக அறுவடை செய்யப்பட்டு அழிந்து போகாமல் இருக்கு உதவுகின்றன எனலாம்.

–          யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad