\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மிஸிஸிப்பி நதி

mississippi_620x442அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு.

மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் மலைப்பாம்பு போல வளைந்து வளைந்து மினியாப்பொலிஸ் (Minneapolis) செயின்ட்பால் (St. Paul) மாநகரங்களையும் சுற்றி, மினசோட்டா மாநிலத்தில் பல இடங்களிலும் ஒடுகிறது. தவிர, விஸ்கான்சின் மாநிலத்தின் எல்லையாகவும் அமைந்து அமெரிக்கக் கண்டத்தை வளைந்து வளைந்து துண்டு போட்டு இறுதியில் மெக்சிகோ வளைகுடாவில் (Gulf of Mexico) சமுத்திரத்தில் சங்கமிக்கின்றது.

மிஸிஸிப்பி நதி பற்றிய புள்ளிவிபரம்

நீளம்: 2,340 மைல்கள் (3,766 கிலோமீட்டர்கள்)

நீர் உற்பத்தி: 593,000 feet³/ந (16,790 m³/s)

நீர்ப் பரப்பு: 1.151 million sq miles (2.981 million km²)

ஆரம்பிக்கும் இடம்: மினசோட்டா மாநில ஐடாஸ்கா ஏரி (Itasca)

அத்தமிக்கும் இடம்: மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico)

மிஸிஸிப்பி நதி அமெரிக்காவின் பெரும் நதியும் உலகத்திலேயே 3வது பெரும் நதியுமாகும். இந்த நதியானது மினசோட்டாவில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேர வந்த மக்களுக்கு வாழ்வும், வளவும், வர்த்தகமும் கொடுத்து வந்த நதியாகும். இந்த நதியோரம் இன்றும் பல நதி சார்ந்த வரலாற்றுப் பட்டினங்களையும், நூதனசாலைகளையும் மற்றும் பல மணிநேரம் ஏன் ஒருசில நாட்கள் முழுவதும் சைக்கிள் ஓட்டுமளவுக்கு நீளமான பாதைகளையும் காணலாம்.

–          யோகி அருமைநாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad