\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவித் துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments

கவித் துளிகள்_620x403-240x180

இதழ்கள்

மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ….
அவளின் இதழ் மடல்கள் !!!

இதழில் உழன்று
மயங்குகிறேன் ….
அவள் மடல் விரிக்கையில்
நான் வீழ்கிறேனே ….
எழ மனமின்றி!!!

தரிசு
தரிசு நிலத்தில்
கரிசல் காட்டில் பூத்த
கள்ளிக் காட்டுப் பூவே …

உனை என்னுள் சூடுவது எப்பொழுதோ!!!

காதல் ரசத்தில் மலர்ந்த
கம்பங்காட்டுக் கிளியே….

உனை ஆள்வது
எப்பொழுதோ!!!

தரிசு நிலத்தில்
பந்தலிட்டுப் பரிசம்
போட
பாவிமனம் ஏங்குதடி!!!

எனையாளும் உனை
நான் ஆளுவது…
எப்பொழுதோ!!!

பெண்ணே – அழகு

அந்தி வானம் அழகு ; உன்
கடைவிழிப் பார்வை அழகு!!!

இஞ்சி இடையழகு ; அதில்
கொஞ்சும் மடிப்பழகு!!!

வஞ்சியவள் நடை அழகு ; அதில்
சலங்கை ஓலி அழகு!!!

மிஞ்சியவள் கொஞ்சும் அழகு ; அதில்
செவ்விதழ் உதடு அழகு!!!

எண்ணமெல்லாம் அவளே அழகு ;
அவளுக்கு நிகர் அவளே அழகு!!!

உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad