admin
admin's Latest Posts
உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப் பயணம்
ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் மினசோட்டாவின் செயிண்ட் பால் ரிவர்செண்டரில் வருடாவருடம் நடைபெறும் ‘ஃபெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்‘ (Festival of Nations) திருவிழா, இவ்வருடம் மே மாதத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சென்ற வருட விழாவைப் பற்றிய நமது கட்டுரையில், இந்த நிகழ்வு பற்றிய பல தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் காணலாம். https://www.panippookkal.com/ithazh/archives/5906 இந்த வருட விழாவின் சிறப்பம்சமாக, நம் தமிழர் (கவனிக்க, நாம் தமிழர் […]
ஆணவம் அழிவைத்தரும் – பைபிள் கதைகள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் ஒருவரைப் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும், அதே சமயம் அடக்கமின்மையும் ஆணவமும், கடவுள் மேல் விசுவாசமின்மையும் நம்மை இருளுக்குள் ஆழ்த்தி அழிவைத்தரும். உருவம் பார்த்து யாரையும் ஏளனம் செய்யக் கூடாது. மற்றவர்களைவிட நானே பலமானவன் என்று நினைப்பதே நம்முடைய முதல் பலவீனம். அதே போல எதிரியின் பலம் நமக்கு தெரியவில்லை என்றால் அதுவே நமது பலவீனம். இது எல்லாமே நாம் கேள்விப்பட்டதுதான். இதை நமக்கு உணர்த்தும்படியாக, […]
கவித்துளிகள்
ஜன்னலின் சத்தங்கள்
கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,
கிராமத்துக் காதல் !!!
ஏரில் பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது களைத்திருப்பார்
அப்பா …
அவர் வியர்வை நிலத்தில்
விழுமுன்னே முந்தானையால்
ஓற்றியெடுத்து நுகர்வாள்
அம்மா ….
ஹைக்கூக் கவிதைகள்
பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்
இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி
மணிக்கொடிக் காற்று
ந. பிச்சமூர்த்தி…. இவரைத் தாண்டி நீங்கள் புதுக் கவிதைக்குள் போய்விடவே முடியாது…. மணிக் கொடி காலத்தில் புதுமைப் பித்தன், கு. பா. ரா வுக்குப் பின் வரும் இவரின் ஆளுமை…. அசாத்தியமானது…. 1930ல் மணிக் கொடி இதழில் எழுதத் தொடங்கினார்….குடும்பப் பிரச்சினைகளை நிறைய எழுதினார்….குடும்பம் என்பதே கலவைகளின் கூட்டு..அதில் எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்.. ஆனாலும் மனங்கள் வேறு படும் தருணங்கள் வந்தே தீரும்.. கருத்துக்கள், அவரவரின் பார்வையில் காட்சியின் பொருள் […]
உலகம் செழிக்கும்
நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
திரைப்படத் திறனாய்வு – 24
சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும். படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற […]







