\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!

கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !

Continue Reading »

வேலையில்லாப் பட்டதாரி !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
வேலையில்லாப் பட்டதாரி !

நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !

என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !

Continue Reading »

சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்

சக்கரைக் கிழங்கைச் சாமர்த்தியமாக வளர்ப்போம்

வட அமெரிக்கக் கண்டமும் மெதுவாக இளவெனிலை நோக்கி நடையெடுக்கிறது. இந்தத் தருணத்தில் சக்கரைக் கிழங்குச் செடியை எவ்வாறு நமது யன்னலோரத்தில் வளர்க்கலாம் என்று பார்ப்போம். தேவையானவை நீண்ட நீர் குடிக்கும் கண்ணாடிக் குவளை/Water glass அல்லது பூ வைக்கும் சாடி பெரிய நீளமான சக்கரைக் கிழங்கு ஒன்று பற்குத்தி (Toothpick), அல்லது சான்விச் குச்சிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் (Bamboo skewers) சாதாரண வீட்டுக் குழாய்த்தண்ணீர் சக்கரைக் கிழங்கான மரக்கறி, மளிகை வாங்கும் கடைகளில் மிகவும் சொற்ப […]

Continue Reading »

இணையச் சுழல்….

இணையச் சுழல்….

இது சுய விமர்சனம்… அல்லது சக விமர்சனம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான். இந்த வாழ்க்கை எதை நோக்கி? இந்தப் பயணம் எதற்காக? ஏதோ ஓர் உந்துதல் ஏதாவது ஒரு வழியில் நம்மைத் தள்ளிக் கொண்டே செல்கிறது.. சிலர்.. வெட்டியாக உட்கார்ந்தே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிலர்.. விவகாரம் பேசுகிறார்கள்….. சிலர்.. எழுதுகிறார்கள்.. சிலர்.. அரசியல் பேசுகிறார்கள்….சிலர் விளையாடுகிறார்கள்… சிலர் பெண்களை மட்டுமே காவல் காக்கிறார்கள்….. சிலர் வன் கலவியையே வேலையாகச் […]

Continue Reading »

சுறா மீன் கறி

Filed in அன்றாடம், சமையல் by on March 28, 2016 0 Comments
சுறா மீன் கறி

மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம். ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் […]

Continue Reading »

நிறமற்ற சினிமா

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நிறமற்ற சினிமா

படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]

Continue Reading »

ஆணவம் கொ(ல்)ள்வோம்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
ஆணவம் கொ(ல்)ள்வோம்

உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !

காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை. பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர்  தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது.   நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் […]

Continue Reading »

நாப்பதுக்கு மேலே…

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நாப்பதுக்கு மேலே…

ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]

Continue Reading »

முதுமையும் மழலையே

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 4 Comments
முதுமையும் மழலையே

அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான்.    “பத்ரி   எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு,    “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad