admin
admin's Latest Posts
கலைகளின் சங்கமம்
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பிப்ரவரி 6 சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் சங்கமம் 2016 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. குழந்தைகளும், பெரியவர்களும் பங்கு கொண்ட பல கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் பழமை மாறாது கருப்பட்டி பொங்கல் சேர்ந்த விருந்து என பல சிறப்புகள். இதற்கெல்லாம் மகுடமாக இருந்தது என பலரும் புகழ்ந்தது கலைகளின் சங்கமம் நிகழ்ச்சியைத் தான். பதினோரு வகையான தமிழர் கலைகளை முழு முயற்சியுடன் பயின்று […]
துருவக்கரடி தோய்தல் 2016 (Polar Bear Plunge)
துருவக்கரடி தோய்தல் (Polar Bear Plunge) கொண்டாட்டம் ஒவ்வொறு ஆண்டும் குளிர் காலத்தில் நடை பெறுகிறது. இதில் பலதரப்பட்ட தன்னார்வலர்களும் மற்றும் தன்னார்வல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாய்க் கலந்து கொள்கிறார்கள். உறைந்திருக்கும் ஏரிகளில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து, வெறும் நீச்சலுடையுடன் பனிக்கட்டிகளின் அடியில் இருக்கும் நீருக்குள் பாய்ந்து, கடும் குளிரில் நீந்துவது இங்கு ஒரு பிரபலமான விளையாட்டு . இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை விசேட ஒலிம்பிக் […]
காதலாகிக் கசிந்துருகி…..
“ மங்களம், சமையல் ஆயிடுத்தா… டைம் ஆறதுடி….” சாம்பு மாமா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். ”ஆயிண்டே இருக்குன்னா.. என்னத்துக்கு இப்டி வெந்நீரக் கொட்டிண்ட மாதிரி பதற்றேள்” – இது மங்களம் மாமி. “இல்லடி, நம்ம தியேட்டர்ல முதல் மரியாதை படம் போட்ருக்காண்டி, ரெண்டாவது ஆட்டம் போலாமேனுட்டு…” ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த சாம்பு மாமாவுக்கும் நாற்பதுகளின் இறுதியிலிருந்த மங்களம் மாமிக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். குழந்தைகள் இல்லை, ஆனால் அது பற்றிய கவலையை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் […]
நிழலும் அரசியல்வாதிகளும் !
நிழல் …. காலையில் முன்னே சென்று வணங்குகிறது ! தேர்தலின்போது நம்மையெல்லாம் அரசியல்வாதிகள் வணங்குவதைப் போல. நிழல்… பிற்பகலில் நம் பின்னே தொடர்கிறது ! தேர்தல் நாளன்று நம் ஓட்டுக்காக. நம் பின்னே வரும் அரசியல்வாதி போல. நிழல் … இரவில் அது இருக்கும் இடம் தெரியாமல் மறைகிறது ! வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கமே வராத அரசியல்வாதி போல ! பூ. சுப்ரமணியன்,
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் (Net Neutrality)
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் Net Neutrality உங்கள் கைத்தொலைபேசியில், கணனியில் ஓடும் படம் சற்று வேகம் குறைந்து காணப்படுகிறதா? சிலசமயம் ஒட்டு மொத்தமாக இணைப்புத் துண்டிக்கப் பட்டு விட்டதா? அது பற்றி எவ்வளவு தூரம் சிந்தித்திருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக நாம் அதை பொருட்படுத்தாமல் மீழ படத்தைப் பார்க்க முனைவோம் என்பதே பொதுவான பதில். ஆயினும் நீங்கள் பார்க்கும் படம் பற்றிய தகவலைப் பின்னணியில் ஒரு கணனியில் இருந்து மற்றய கணனிக்குப் பரிமாற பல […]
தெறிக்க விட்ட சங்கமம் 2016
வருடா வருடம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கொண்டாட்டத் திருவிழாவான ‘சங்கமம்‘, இவ்வருடம் ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ் மக்களின் பேராதரவுடனும், பல தன்னார்வலர்களின் கடும் உழைப்பினாலும், பல்வேறு கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பினாலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமாகப் போட்டுத் தாக்கும் குளிர், அன்று கொஞ்சம் போல் கருணை காட்டியது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அதற்கு முன்பே கூட்டம் குவியத் தொடங்கி இருந்தது. நுழைவு கை வளையம் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2
(அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..) சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி அயோவா காகஸ் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. அவற்றின் முடிவுகளை அறியும் முன்னர் காகஸ் மற்றும் ப்ரைமரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். காகஸ் (Caucus) காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் […]







