admin
admin's Latest Posts
அப்பாவை காணவில்லை
அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு […]
ஆதாம் ஏவாள்
அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…
வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…
மழலை
நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !
பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !
ஆட்டிஸம் – பகுதி 3
(ஆட்டிஸம் – பகுதி 2) இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி பார்க்கலாம். அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள் பயோமெடிக்கல் சிகிச்சை முறை பொருத்தமான உணவு வகைகள் ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். முதலில் […]
தலையங்கம்
வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் பலர் பல விதமான தீர்மானங்களைச் செய்திருக்கலாம். அது இன்றிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்பதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால் அதனைக் கைவிடுவதாக இருக்கலாம். அது எதுவாக இருப்பினும் அந்தத் தீர்மானத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டுமென்று இதன்மூலம் வேண்டிக் கொள்கிறோம். 2015 ஆம் வருட சாதனைகள் என்றும், 2016 […]
“குத்துக்கல்…!”
அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]
உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை ! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் ! அந்த தமிழ் மறையை, வெறும் மூன்று மணி ஐம்பத்தி இரண்டு மணித்துளிகளில் ஒரே மூச்சாக மழை போல் பொழிய முடியும் என்று நிரூபித்தார் திருமதி பிரசன்னா சச்சிதானந்தன். மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ஜனவரி 24 அன்று மதியம் 12.05 தொடங்கியது. இடைவிடாத உரையாக 1330 குறள்களையும் , பொருளுடன் உரைத்தார். […]
பகுத்தறிவு – பகுதி 2
(பகுதி – 1) இந்தப் பகுதிக்கான முன்னுரையை எழுதி இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டாம் பகுதி எழுதும் “மனநிலை” (மூட்) வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கடவுளுக்கு நான் இதுபற்றி எழுதுவது பிடிக்கவில்லையோ? அவன்தான் தனது திருவிளையாடலினால் எனக்கு “மூட்” வரவிடாமால் செய்கிறானோ? இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடவுளுக்கு இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களில், அடுத்த வீட்டு மனிதருக்குக்கூட அவ்வளவாக அறிமுகமில்லாத என்னைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருப்பது சாத்தியமோ? அப்படியே தெரிந்து […]
எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை
திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும். என்ன வியப்பாயிருக்கா? ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார். அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம். கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில […]
கவித் துளிகள்
மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ….
அவளின் இதழ் மடல்கள் !!!
இதழில் உழன்று
மயங்குகிறேன் ….
அவள் மடல் விரிக்கையில்
நான் வீழ்கிறேனே ….
எழ மனமின்றி!!!







