admin
admin's Latest Posts
ஒரு துளி கண்ணீர்
“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]
சமத்துவம்
அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]
சம்மதம் முதல் 5 நிமிடங்களில்
Category – career, business, personal development அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் […]
சொற்சதுக்கம் 5 – விடைகள்
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த பால் பாரம் பல் மாதா மாதம் தபால் அம்மா அதம் அரம் பதம் […]
சொற்சதுக்கம் – 5
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த (சொற்சதுக்கம் 5 – விடைகள்)
ஞாயிறே போற்றி!
தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு. நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு […]
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் டிசம்பர் – சனவரி மேடம் (மேஷம்) – பலவிதப் பொருட்கள் வருகை, மற்றும் காரியங்களில் வெற்றிகள் மாதக் கடைசியில் வரலாம். வேலைத்தள இடையூறுகள் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் தடைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் குன்றுதல். அவதானம் தேவை வயிற்றில் கோளாறுகள் வரலாம். பண்டிகை காலமெனினும் உணவு உட்கொள்ளல் குறைந்த நிலை. இடபம் (ரிஷபம்) – இம்மாதம் முக்கியமாக வாழ்க்கைச் சமநிலையில் […]
மாரியால் மாறினோம்
மரத்துப் போன ஜனங்கள்
மடங்கிச் சுருங்கிய மனங்கள்
மானுடம் மறந்த தன்னலம் ; யாவும்
மாறிடக் கண்டோமே மாரியால்!!
மண்டியிருந்த பேதங்கள் மக்கிப் போயின!
மதர்த்திருந்த மதங்கள் மரித்துப் போயின!
கண்டறியா அண்டைமனிதர் கடவுளாயினர்;
கடல்கடந்த அன்னியமனிதர் வள்ளலாயினர்!
யார் அந்த இராவணன் பகுதி – 3
(பகுதி – 2) இராவணன் எப்படி அரக்கன் ஆக்கப்பட்டான் இராவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்றும் பேரழகன் என்றும் பொருள் உண்டு. “இரா” என்றால் ‘இருள்’ அல்லது ‘கருமை’ என்பது பொருளாகும். இருள் போன்ற கரிய நிறத்தினை உடையவனாதலால் இராவணன் (இராவண்ணன்) என அழைக்கப் பட்டான். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். கதைக்காகத் தமிழ் அரசனான இராவணனை அப்படிக் காட்டியிருந்தாலும் அவனின் வீரம் என்றுமே போற்றுதலுக்குறியது. மாற்றான் […]
திருவிவிலியக் கதைகள்: மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் பனிப்பூக்கள் இதழின் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைமகனான இயேசு பாலன் அன்பையும் சாமாதானத்தையும் நற்சுகங்களையும் நிரம்ப அருள வாழ்த்துக்கள். “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பது ஆழமான கருத்துடைய தமிழ்க் கூற்று. அன்பும் சமாதானமும் என்றன் வீட்டையும், நாட்டையும் ஏன் உலகத்தையே பிணைக்க வல்லது. அப்பேற்பட்ட அன்பும், சமாதானமும், மன்னிப்பும் நம்ப குடும்பத்தில இருக்கணும். அப்போதுதான குடும்பத்தில மகிழ்ச்சி இருக்கும். முன்னொரு காலத்தில நடந்த……….. அப்படின்னு சொல்லுறதவிட, 6000ம் ஆண்டுகளுக்கு முன்னாடி […]







