admin
admin's Latest Posts
எழுதுங்கள் வெல்லுங்கள் – கவிதைப் போட்டி முடிவுகள்
பல மாதங்களாக எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஆழ்ந்து படிக்கையில் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் புதுமையான கவித்திறன் ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. இவர்களின் திறமையை வெளிக்கொணரும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்த எண்ணினோம். இவர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து எண்ணங்களைச் சிறைப்படுத்தாமல், அதே சமயம் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ, விஷயத்தையோ கருவாகக் கொண்டு எழுத வைத்து கவிதைகளைப் பெற எத்தனித்தோம். அதன்படி உருவானது தான் ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ எனும் – படத்துக்குக் கவிதை எழுதும் […]
ஒடுங்கிப் போன நெஞ்சம்
வீதியின் ஓரத்தில் ….!
ஒதுங்கிப் போன சொந்தங்கள்;….!
உதறிப் போன பந்தங்கள் ….!
மூட்டை தூக்க முடியவில்லை
முடக்கி போட்டது முதுமை….!
பனிப்பூக்களின் ஓராண்டு நிறைவு
ஃபிப்ரவரி 21 – உலகம் முழுவதும் தங்களது தாய் மொழியினைக் கொண்டாடும் தினமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தினம். எங்கள் பனிப்பூக்கள் குழுவினருக்கு அதை விட மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்த பொன்னாள். ஆம். இந்த ஃபிப்ரவரி 21ம் நாள் எங்களது சஞ்சிகை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. சென்ற ஆண்டு இதே நாளில் முதல் இதழை வெளியிட்ட போது இருந்த படபடப்பும், பெருமிதமும் இன்னமும் அடங்கியபாடில்லை. அதற்குள் ஓராண்டு ஓடி விட்டது. ஒவ்வொரு இதழையும் வெளியிட நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 10
அத்தியாயம் 9 செல்ல இங்கே சொடுக்கவும் மலாய் மொழி ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. Dr. ரொலண்ட் பிராடெல்,முனைவர் சத்தியானந்தா, மற்றும் ஆய்வாளர் சஞ்சிவி ஆகிய மூவருமே மலாயாவிற்கு நாகரிகத்தை அளித்தவர்கள் தென்னாட்டுத் தமிழர்களே எனக் கருதுகின்றனர். மலாயா என்னும் பெயரிலே தமிழ் மணங்கமழ்வதை போன்றே சிங்கப்பூர் என்ற பெயரிலும் தமிழ் மணம் […]
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்
ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.
என் காதலே
காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்
காதலியே …
காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4
உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.
சத்யா நாதெல்லா
ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]







