\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

உலகச் செம்மொழி – அத்தியாயம் 4

உலகச் செம்மொழி – அத்தியாயம் 4

அத்தியாயம் 3 செல்ல இங்கே சொடுக்கவும் வணக்கம்! மனிதகுலம் தோன்றி வளர்ந்து பரவிய விதத்தை இருவிதக் கொள்கைகளில் விளக்குகின்றனர்.  1.மேல்நாட்டவர் சொல்கின்றபடி மனித இனம் ஆப்பிரிக்கா பகுதியில் தோன்றி உலகம் முழுதும் பரவியது.  2.தென்னாட்டு அறிஞர்களின் கருத்தான மாந்த இனம் முதலில் கடல் கொண்ட தென்னாடான குமரிக்கண்டம் என்ற இலமுரியா கண்டத்திலேயே தோன்றி உலகம் முழுதும் பரவியது.  இந்த இரண்டு கருத்துக்களுக்கும் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும், அவற்றை ஆராய்வது நம் நோக்கமில்லை.  தமிழ் அறிஞர்களின் கூற்றுப்படியும் நம் […]

Continue Reading »

இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!

Filed in இலக்கியம், கவிதை by on May 24, 2013 2 Comments
இது குற்றமில்லை!  வெறும் பருவமாற்றம்!

பட்டமரங்கள் துளிர்த்திடக் கண்டேன்!
கலி முற்றிட வில்லை!
காய்ந்த புல்வெளி பிழைத்திடக் கண்டேன்!
இது அதிசய மில்லை!
வெண்ணிறச் சாலைகளவை கறுத்திடக் கண்டேன்!

Continue Reading »

மதுரை

மதுரை

 சில நகரங்கள் தோன்றும் மறையும் அது உலக இயல்பு. ஆனால் ஒரு சில நகரங்கள் மட்டுமே தொடர்ந்து மக்கள் வாழத் தகுதி உள்ளதாகவும் அதன் பெருமை குறையாமலும் இருக்கும். அத்தகைய ஒரு மாநகரம் மதுரை. கடைச்சங்கம் வளர்த்தப் பாண்டியத் தலைநகர், மல்லிகை நகரம், தூங்கா நகரம் என மக்களால் புகழப்படும் மாநகரம் மதுரை. எந்தப் பக்கச் சார்புள்ள வரலாற்று ஆசிரியர்களாலும் இதன் இருப்பைக் குறைந்தது 2500 ஆண்டுகளுக்குக் கீழ் சொல்ல இயலாது. மதுரையின் வரலாற்றைச் சொல்லக் கி.மு,கி.பி […]

Continue Reading »

நான் நாத்திகன்

நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]

Continue Reading »

மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

ஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம். குடியேற்ற அமைப்பு இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர்  சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் […]

Continue Reading »

காய்கறித் தோட்டம்

Filed in இலக்கியம், கதை by on May 24, 2013 1 Comment
காய்கறித் தோட்டம்

பக்கத்தில் படுத்திருந்த, முன்தூங்கி பின் எழும் பத்தினி இடுப்பில் குத்தினாள். “ஏண்டி உயிர வாங்கற.. கொஞ்ச நேரம் தூங்க விடு …” “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஹோம் டிப்போவில கார்டனிங் வொர்க் ஷாப் .. மறந்துட்டேளா?” என்றவாறு வசதியாகத் திரும்பிப் படுத்து கொண்டாள். ஓ… அந்த நாள் வந்து விட்டதா? மினசோட்டாவில் ஏன் பன்னிரண்டு மாதங்களும் பனிக்காலமாகவே இருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு. “காப்பின்னு ஏதோ ஒண்ணு குடுப்பியே, அதையாவது கலந்து குடேண்டி” “ஏன்? […]

Continue Reading »

உலகின் முதன்மொழி

உலகின் முதன்மொழி

உலகின் முதன்மொழி தமிழ் மொழியாக இருக்குமோ? சமீபத்திய செய்தியில் 15,000 ஆண்டுகளாகச் சில சொற்கள் மாறவில்லை என்ற செய்தியைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது, மொழிக்குடும்பங்களின் வீச்சும் அவற்றின் படர்த்தியும் காண முடிந்தது. ஆசிய ஐரோப்பா மொழிக்குடும்பங்களைப் பற்றிய இந்தச் செய்தியில் புதைந்து கிடக்கும் பிற உண்மைகளையும் நாம் இங்கே பார்ப்போம். கீழ்க்கண்ட உலக வரைபடத்தைப் பாருங்கள், திராவிட மொழிக்குடும்பத்தின் ஆதி மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது, இதைத் தென் இந்தியா முழுவதும் பயன்படுத்தினார்கள் (நீல […]

Continue Reading »

இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை. வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை […]

Continue Reading »

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சென்ற சனிக்கிழமை, ஏப்ரல் 13 ஆம் திகதி, தமிழ்ப் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டங்கள், மேப்பிள் குரோவ் (Maple Grove) நகரிலுள்ள இந்து ஆலயத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ”பனிப்பூக்கள்” இதழை உள்ளூரில் வாழும் தமிழர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த அதன் ஆசிரியர் குழுவின் அனுபவம் பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சிக் குறிப்பு; மேப்பிள் குரோவ் கோயிலுக்கு சென்றவர்களுக்குத் தெரியும்; முதன்மை வாசலில் நுழைந்தவுடன் வலது புறம் திரும்பினால் கோயிலுக்கான பகுதிகளும், இடது புறம் திரும்பினால் […]

Continue Reading »

குழந்தை மனசு

Filed in இலக்கியம், கதை by on April 16, 2013 0 Comments
குழந்தை மனசு

விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.  “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”  “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”  “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”  நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad