admin
admin's Latest Posts
சொர்க்கத்திலே முடிவானது
அதிகப் பரபரப்பில்லாமல் இருந்தது நெடுஞ்சாலை. துலூத் – 94 மைல்கள் எனக் காட்டியது வண்டியிலிருந்த ஜி.பி.எஸ். அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரத்தன். முன்னால் செல்லும் வண்டி மெதுவாகச் செல்வது போல தோன்றியது. பொதுவாகச் சாலையில் குறிப்பிட்ட வேகத்துக்கும் குறைவான வேகத்தில் செல்வோர் இடத்தடத்தில் சென்றால் அவர்கள் மீது அவனுக்கு கடுங்கோபம் வரும். அதுவும் அவர்கள் கையில் கைப்பேசியோ, உதட்டுச்சாயக் குச்சியோ இருந்துவிட்டால் அவர்களைக் கடக்கையில் கண்களில் கோபத்தைக் காட்டிச் செல்வான். இன்று அப்படியில்லாமல் வலத்தடத்துக்கு மாறி […]
மலர்க் கண்காட்சி
உள்ளுர்த் தொலைக்காட்சி விளம்பரத்தில் மேசிஸ் (Macy’s) பாக்மன்ஸுடன் (Bachman’s) இணைந்து மினியாபொலி்ஸ் மேசிஸ் வளாகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 7 வரை மலர்க்கண்காட்சி ஒன்று நடத்துவதாகச் சொன்னார்கள். இந்தியப் பின்னணியில் அமைந்திருப்பதாகச் சொன்னது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. வானம் மழை பெய்யட்டுமா அல்லது பனி பொழியட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நன்னாளில் குடும்பத்துடன் கிளம்பிப் போனோம். நகர மையத்தில் கார் நிறுத்த இடம் தேடி அலைந்த போது, இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டாமோ […]
அடைந்ததென்ன? இழந்ததென்ன?
இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?
சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்
சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்
மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்
மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்
உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்
ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்
மனசாட்சி
விடிந்தும் விடிந்திராத காலைப் பொழுது.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் தன் தலையில் இடி விழுந்தது போன்றதொரு பெரும் சத்தமொன்றை உணர்ந்தான். மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அவனுக்குள் ஏதோவொன்று தூங்காமல் விழித்துக் கொண்டு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்குமாம், அதனால்தான் பத்துக் குழந்தைகள் அடுத்தடுத்துப் படுத்து தூங்கும் கல்யாண மண்டப வராந்தாவில் கோபியின் அம்மா வந்து “கோபி, கோபி” என்றழைக்கும்போது கோபி மட்டும் எழுகிறான், மற்ற ஒன்பது சிறுவர்களும் நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்கின்றனர். உறங்கும் கோபியினுள்ளே உறங்காமல் விழித்துக் […]
திரைப்படத் திறனாய்வு – பரதேசி
65 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களே தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திய உண்மைப் பதிவுகளை மையமாக கொண்டு படைத்திருக்கும் பாலாவின் மற்றுமொரு சீரிய படைப்பு. ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவது சமரசம் செய்யாமல் கதை சொல்லும் பாங்கில் தான். மனிதக் குலத்தின் கருமையான பகுதியைத் துகிலுரித்துக் காட்டுவதில் வல்லவர் பாலா. வேறு நாடுகளுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர் அனுபவித்த பல துன்பங்களைக் கதைகளாகப் படித்திருப்போம். ஆனால் நம், சொந்த மண்ணிலேயே கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்ட மக்களின் கதை தான் பரதேசி. […]
பாவேந்தர்
“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் – தமிழென்
அறிவினில் உறைதல் கண்டீர்!”
உலகச் செம்மொழி – அத்தியாயம் 3
போன அத்தியாயத்த படிச்ச ஒரு தமிழ் ஆய்ந்த நண்பர் ஒருத்தர், தமிழ் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வழங்கியுள்ளது என்று நீங்க எழுதுனதப் படிக்க. ஆச்சரியமாகவும், அருந்தகவலாகவும் இருந்தது. இச்சொற்கள் மற்ற மொழிகளில் கையாளப்பட்டது எப்போது எனும் ஆதாரக் கட்டுரைகள், குறிப்புகள் ஏதும் உங்களிடம் இருப்பின் அவற்றின் விவரங்களை வெளியிட முடியுமான்னு கேட்டாங்க.. ஏன்னா அவுங்க, இணயத்துல பல வார்த்தைகளுக்கு மூலம் தேடி பார்க்கும் போது அது பெரும்பாலும் old French, Latin , Greek, middle English லேயிருந்து வந்ததாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் இருந்து வந்ததாக இருக்குன்னு ஒரு சந்தேகத்த கேட்டு இருந்தாங்க.
மினசோட்டா
கனடாவின் எல்லைக் கோடாய்
அதன் உறவுப் பாலமாய்
கனடாவுடன் இணைத்தும் பிரித்தும்
அழகான அமைவிடத்தில் மினசோட்டா
இது கவிதைக்கான வெறும்
கற்பனைச் சிதறல்கள் அல்ல
உண்மை ஊற்றுக்களின் பிரவாகம்
அன்புள்ள அம்மாவுக்கு
சிறையிலிருக்கும் என் அன்புள்ள அம்மாவுக்கு
பாசமுடன் உன் இளைய மகன்
நான் எழுதிக் கொள்வது
நலம், நலமறிய ஆவல்.
அம்மா நான் இப்போது
ஆசிரமத்தில் நன்றாகப் படிக்கிறேன்
ஆனாலும்…







