admin
admin's Latest Posts
பொருளுடன் திருக்குறள் – அந்தாதி வடிவில்
குறள் பொருள் வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (861) நம்மிலும் வலிய பகைவரை எதிர்ப்பதைத் தவிர்த்து; நம்மிலும் மெலியரை உடனே எதிர்த்துச் செல்க. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (146) பிறர் மனை நோக்குபவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (571) அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் கொண்டவர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் […]
வண்ணம் தீட்டுக
சற்றுப் பொறுங்கள்… நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படங்களும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை படைப்புகளும் இதோ: இவ்விடம் தொடர்ந்து வண்ணம் தீட்டுங்கள்
ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்
தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) […]
சித்திரை சிறுவர்கள் நிறந்தீ்ட்டல்
நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படைப்புகள் இதோ:
சமூக வலைத்தளங்களும் அதன் பயன்பாடுகளும்
இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன. தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும். எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட […]
தலையங்கம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியோம் பராபரமே!! – தாயுமானவர் “மினசோட்டா வாழ்த் தமிழர்களுக்கும் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து எங்களின் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்களின் வணக்கம். ஒரு வழியாகப் பனிக்காலம் முடிந்து, மினசோட்டாவில் வசந்தக் காலம் என்றோ கோடைக் காலம் என்றோ அழைக்க இயலாத ஒரு மாதிரியான குழப்பக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். மனிதர்களைப் போலவே புள்ளினங்களும், புல்லினங்களும் குழப்பமடைந்துள்ளன போலத் தெரிகிறது. வழக்கமாக இந்த நாட்களில் […]
வந்த காலம் இது வசந்த காலம்
சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் – நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்
இசையுதிர் மாதம்
ஏப்ரல் மாதம், தமிழ் இசைத்துறை மூன்று பெரும் மேதைகளை இழந்து விட்டது. பி.பி. ஸ்ரீனிவாஸ் தோற்றம்: 09/22/1930 மறைவு: 04/14/2013 பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் – பெயர் அச்சுறுத்தும் வகையில் அமைந்தாலும் இனிமையான, அமைதியான குரலும், மனமும் கொண்டவர் பி.பி.எஸ். PBS (P.B.Sreenivos) is the best PBS (Play Back Singer) எனச் சொல்வார் திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ். விசுவநாதன். தன் தந்தையின் நண்பர் திரு. சங்கர சாஸ்திரியின் இசையில் மிஸ்டர், சம்பத் இந்தித் திரைப்படத்தில் […]
மூளைவளர்ச்சியும் மொழி கற்றலும்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது நம் முதுமொழி. இது மூளை வளர்ச்சியிலும் மொழிகற்றலிலும் தகுமான அறிவுரை என்பது தற்போதைய மொழியியல் கல்வி ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொழி தெரிந்து கொள்ளல் மனித இனத்தின் பிரதான குணாதிசயங்களில் ஒன்று. மொழி கற்றல் மூளை வளர்ச்சியில் பிரதான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என தற்பொழுது பரீட்சார்த்த ஆராய்ச்சி மூளைப் படங்கள் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் பிரதான அவதானிப்பு என்ன வென்றால், மனித மூளை […]







