\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

ஜேசன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். பள்ளிப் பேருந்து தெரு முனையில் நின்றது. “பேருந்தை விட்டு இறங்க மனமில்லையா?” எனக் கிண்டலாகக் கேட்டார் பேருந்து ஓட்டுனர் மைக். “சாரி .. மிஸ்டர். மைக்..” சொல்லிக் கொண்டே இறங்கினான் ஜேசன். பேருந்தின் முன் பக்கமாகத் தெருவைக் கடந்து வீடு நோக்கி நடக்க துவங்கினான். ஜேசனுக்கு மிசஸ். வீலர் மீது கோபமாக வந்தது. பிராண்டன் மெமோரியல் எலிமெண்டரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிப்பவன் ஜேசன். மிசஸ். வீலர் அவனது […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 5

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 5

முன்கதைச் சுருக்கம்: (பகுதி 4) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]

Continue Reading »

மல்லிகைப்பூ

மல்லிகைப்பூ

எமது தமிழ்க் கலாச்சாரத்தில் பாண்டியர் காலத்தில் இருந்து இன்றுவரை பெண்கள் தலையில் சூடும் மல்லிகை பற்றி பலவித பாக்களும், பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. இலங்கை, இந்திய, மலேசியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மல்லிகைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அவர்கள் தினசரி வாழ்விலும், வழிபாடுகளிலும் மல்லிகைப்பூவை,  தொடர்ந்து பாவிப்பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம். மேலும் தமிழகத்தை எடுத்தோமானால் பல்லாயிரமாண்டு பழமைவாய்ந்த மதுரை மாநகர்  தனக்கென உரிய பூவாக ‘மதுரை மல்லியைச்” (Jasmine சமபக்) சூடிக்கொள்ளுகிறது. மனத்தைச் சாந்திசெய்யும் மல்லிகையின் அற்புதமான மணம் […]

Continue Reading »

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3   

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3   

புகைரதம் (The Train) 1944 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் கர்னல் ஃபிரெஞ்சு கலை பொக்கிஷங்களை ஒரு புகைரதத்தில் ஏற்றி ஜெர்மனிக்கு  அனுப்புகிறார். அதையறிந்த   ஃபிரெஞ்சு போராட்டக்கார புகைரத கண்காணிப்பாளர்  ஒருவர் கலைப் பொருட்கள்  சேதமாகாமல்  புகைரதத்தை தடுத்து நிறுத்த பாடுபடுகிறார். இது 1964 ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போர்காலத்  திரைப்படமான இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. நூற்றிமுப்பத்து  மூன்று  நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம்  5.8 மில்லியன் அமெரிக்க வெள்ளி […]

Continue Reading »

மினசோட்டாவில் ஆன்மீகம் – பாகம் 2

மினசோட்டாவில் ஆன்மீகம் – பாகம் 2

பாகம் 1 இந்தியாவில் தோன்றிய மதங்களில் பலரால் பின்பற்றப் பட்டுவரும் மதங்களில் இந்து மதத்தை அடுத்து புத்த மதத்தை சொல்லலாம். மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதத்தை பெரும்பான்மையோர் பின்பற்றி வருகிறார்கள். சீனாவில் ஜென் (Zen) புத்த வழியைப் பின்பற்றுகின்றனர். இந்துக்களும் புத்த பகவானை விஷ்ணுவின் அவதாரமாக கொண்டு வணங்கி வருகின்றனர். மிகப்பெரிய புத்த சிலைகள் கொண்ட கோயில் எல்லாப் பெரிய நகரங்களிலும் உள்ளது. புத்த மதத்தின் ஈர்ப்பு உலகம் முழுவதும் காணப்படுகிறது. மினசோட்டா மாகாணமும் […]

Continue Reading »

தமிழே அமுதம்

Filed in இலக்கியம், கவிதை by on June 10, 2014 0 Comments
தமிழே அமுதம்

மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்

Continue Reading »

புதுப்பிறவி!

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments
புதுப்பிறவி!

‘நான் பட்டதெல்லாம் போதும், திரும்ப கணவனோட போனா அது எனக்கு வாழ்வா இருக்காது. நரகமாதான் இருக்கும், தயவு செய்து அந்த ஆளு கூட சேர்த்து வச்சு என்ன நரகத்தில தள்ளிடாதீங்க. காதலனோடு நிம்மதியா வாழ விடுங்க…’ பஞ்சாயத்தார், கூடி நின்ற ஊரார் முன்னிலையில் அழுதுப் புலம்பி மணிகண்டனோடு செர்ந்து வாழ முடியாது என்று ஆணித் தரமாகக் கூறிவிட்டாள் காஞ்சனா. குடும்ப மானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வேற்றானுடன் ஓடிவந்து, கற்பிழந்த நிலையிலும், தான் செய்த தப்பை எல்லாம் உணர்ந்து, […]

Continue Reading »

எனது இலட்சியம்

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments
எனது இலட்சியம்

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒரு நாள் தங்களின் விருப்பத்தை மனம் விட்டு பகிர்ந்து கொண்டன. முதல் மரம் சொன்னது…”தங்கம், வைரம் போன்ற செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப் பெட்டியாக நான் ஆகவேண்டும்!”.. “அதிகாரம் நிறைந்த மாமன்னனை சுமந்து செல்லும் கப்பலாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்” என்றது இரண்டாவது மரம். “நான் விண்ணிலே இருக்கும் கடவைள தொடும் அளவுக்கு உயரமாக வளரவேண்டும். கடவுள் என்மீது இளைப்பாற வேண்டும். […]

Continue Reading »

பொறுமை

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments
பொறுமை

கோடைக்காலம். அந்தப் பத்து வயது சிறுவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது கடைக்குச் சென்று வாங்கியே தீர வேண்டும். வெயில் கொளுத்துகிறது, சைக்கிளை எடுத்துச் செல்லலாமா? தங்கையோ தானும் வர வேண்டுமென்று துடிக்கிறாள். அவளுக்கும் சைக்கிளில் வர ஆசை. ஆனால் மிகவும் மெதுவாகத்தான் வருவாள். வேலையிலிருந்து அம்மா வரும்வரைக் காத்திருக்க முடியுமா? கண்களில் ஆர்வம், அப்பாவிடம் கேட்கத் தயக்கம். அவரோ கைபேசியை வைப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு அவருடைய வேலை. சரி தாத்தா பாட்டியிடம் கேட்கலாமென்றால் அவர்களுடைய குறட்டை வீட்டுக்குள் […]

Continue Reading »

சுகம்

Filed in இலக்கியம், கவிதை by on June 10, 2014 0 Comments
சுகம்

பறவைகளின் கீச்.. கீச்..
இதமான காலை வெயில்
கதிரவனைக் கண்டு உருகும் பனித்துளி
கோப்பையில் தேநீர்
”அம்மா” வென்று துயில் எழும் மகன்
தாவியணைக்கும் மகள்
உறங்கியபடியே பள்ளிக்குச் செல்லும் மகன்
ஆர்வத்துடன் செல்லும் மகள்
பிரியா விடையளிக்கும் தாய்
காலை நேரம் – சுகமோ சுகம்!

Continue Reading »

ad banner
Bottom Sml Ad